25 February 2023

சுரணையின் மரணம்

 


சுரணையின் மரணம் என் 73ஆவது கிண்டில் புத்தகம்

இது, காலச்சுவடு பதிப்பகத்தில் புனைவு என்னும் புதிர் வெளிவந்தபோது ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றிப் பேசுகிற புத்தகம்.  

அச்சுப் புத்தகம் காலச்சுவடில் வெளியாகவேண்டுமென்றால் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அனைத்து உரிமைகளையும் காலச்சுவடுக்குத் தரவேண்டும் என்கிற ஒப்பந்ததத்தைக் கண்ணன் நீட்டியபோது, முதன்மையாக கிண்டில் உரிமையைத் தரமுடியாது என்று நான் ஆட்சேபித்தது பிரச்சனையானது. 

எழுத்தாளனாக என் தரப்பு என்ன. பதிப்பாளராக கண்ணன் தரப்பு என்ன என்பதைப் பற்றி பேஸ்புக்கிலும் என் தளத்திலும் தொடர்ந்து எழுதியவற்றின் தொகுப்புதான் இது.

சுரணையுள்ள எழுத்தாளனின் உரிமைப் போராட்டம்.

இன்று எழுத்தாளன் நேரடியாக கணினியில் எழுதுபவனாக இருக்கிறான். அவனுடைய வேர்ட் ஃபைலை அடிப்படையாகக் கொண்டே பக்கங்களை வடிவமைத்து பதிப்பகம் புத்தகத்தை வெளியிடுகிறது. புத்தகத்தை வெளியிட முதலீடு செய்கிறார் பதிப்பாளர். ஒப்பந்தக் காலம் வரை புத்தக உரிமை அவருடையது. 

கிண்டிலில் வெளியிட எந்த முதலீடும் தேவையில்லை; எழுத்தாளனின் வேர்ட் ஃபைல் மட்டுமே போதும். ஆனால் அச்சுப்புத்தகத்தை வெளியிடவேண்டுமென்றால், கிண்டில் உரிமையையும் எழுதிக் கொடுத்தால்தான் புத்தகத்தை வெளியிடுவேன் என்று எழுத்தாளனை நெருக்குவது அராஜகம் இல்லையா என்கிற அடிப்படை அறம் சார்ந்த கேள்வியை எழுப்புகிறது இந்தப் புத்தகம்.

அமேஸானும் eBook உரிமையும் அச்சுப் பதிப்பாளர்களின் அடாவடிகளும்
சுரணையின் மரணம்
காலச்சுவடு எனும் ஒருவழிப்பாதை
பேலன்ஸ்ஷீட்டை எடுப்பது எப்படி
கண்ணனின் சங்கநாதமும் காலச்சுவடு என்கிற ஆக்டோபஸும்
சங்கு மார்க் டைல்ஸ்
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
சந்திரரும் சூரியரும் திராவிடரும் ஆரியரும்
கண்ணன் - தி டான்
காலச்சுவடு கணக்கும் வழக்கும் - ஆடிட்டர் ரிப்போர்ட்