துயரங்களை அடுக்குவதே தப்பில்லை. அதன் காரணமாகவே அது வணிக எழுத்தாகவும் ஆகிவிடாது. அவை எப்படி வைக்கப்படுகின்றன என்பதிலும் என்ன நோக்கத்திற்காக் வைக்கப்படுகின்றன என்பதிலும்தான் இலக்கியம் வணிகமும் வேறாகின்றன. செண்ட்டிமெண்டலாய் நெகிழவைத்து சுரண்டுவது மட்டுமே வணிகத்தின் நோக்கமாக இருக்கிறது. இலக்கியத்தின் நோக்கம் ஸ்தூலமாகப் பார்த்தால் எதுவுமில்லை என்பதைப் போன்ற பொய்த்தோற்றத்துடன், மனிதாபிமானம் முற்போக்கு சமூக விழிப்புணர்வு என்று லேபிள் எதையும் மாட்டிக்கொள்ளாமல் அதும்பாட்டுக்கும் அமைதியாக இருக்கிறது.