02 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 24 எப்படி

இலக்கிய அபிப்ராயங்கள் எழுத்தாளர்கள் பற்றிய அக்கப்போர்கள் என – எவளாவது பணக்கார கெழவி கெடைச்சா சீக்கிரம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிடணும்சிகரெட் பிடிக்க வசதியா இருக்குனு இண்ட்டலெக்சுவல் பொம்பளைங்க க்ரியாவுக்கு வந்துடறாங்க என்பதைப் போலவேலை பார்க்கிற இடத்தைக் கூட விட்டுவைக்காமல் எகத்தாளமாக பேசி எல்லாவற்றையும் அனாயாசமாக அணுகுகிறவராக இருந்த திலீப்குமார், க்ரியாவில் பில் போடுவது முதல் மேற்பார்வை பார்ப்பதுவரை எல்லாமுமாக இருந்தார். ஆனால், டைப்பிங் மட்டும் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக அவர் இருந்ததைப் பற்றிஎதையும் கற்றுக்கொள்வதால் யாரும் குறைந்துபோகமாட்டார்கள் என்று குறையாக ஞாநி சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.  

இப்போது நினைத்துப் பார்த்தால்டைப்பிங் கற்க மறுத்த  திலீப்பின் பிடிவாதம் சரிதான் என்று பட்டது. அட ஞாநி கிடக்கிறார். அந்த ஆளுக்கு எதைப் பற்றியாவது எதாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தின்றது செரிக்காது.


எல்டிசியாக இருந்தால் டைப்படித்தே ஆகவேண்டும். டைப்பிங் தெரிந்திருக்கவேண்டும் என்பதுஎஸ்எஸ்எல்சி பாஸாகியிருக்கவேண்டும் என்பதைப் போல எல்டிசி வேலைக்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று. பரீட்சை எழுதி வந்திருந்தால் அவனுக்கும் சிவசுப்பிரமணியம் கதிதான் ஆகியிருக்கும். அப்பா போனதன் காரணமாக, கருணைக் கோட்டாவில் வந்திருப்பதால் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தோம் என்று தோன்றிற்று.