03 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 27 கரையும் கடல்

அப்பா தவறிப்போய் கொஞ்சநாள் ஆகியிருந்த சமயம். அம்மாவுடன் ஏதோ அர்த்தமற்ற வாய்ச் சண்டையில் ஆரம்பித்தது, சாப்பாட்டுத் தட்டு பறந்ததில் போய் முடிந்திருந்தது. வீட்டில் இருக்கவே பிடிக்காமல் கிளம்பி, பெஸண்ட்நகரில் இருந்து, இரண்டு பஸ் மாறி இங்கேதான் வந்தான். இதே போலத்தான் நின்று அப்போதும் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், முன்னிரவு என்பதால் அப்போது எதிரே தெரிந்த கடற்கரையில் காக்காய் இல்லை.


இதே படிகளில் மெல்ல இறங்கி நிதானமாக சாலையைக் கடந்து மணலுக்குப் போனான். குளிர் காற்று இதமாக இருந்தது


என்ன செய்து கொண்டிருக்கிறோம். எந்த சுகத்தையும் அனுபவிக்காத அம்மா பாவம் அல்லவா. அப்பாவைப் போலத்தானே நாமும் அவளை நடத்துகிறோம். ஆனால் அவள் செய்வதும் அப்படித்தான் இருக்கிறது. அவள் செய்வது எதுவுமே அவனோடு ஒத்துப்போவதாக இல்லை. அப்பா செத்துப் போய்விட்டால் நல்லது என்று எத்தனையோ முறை தோன்றியிருக்கிறது. அப்பாவைப் போலவே அவளும் செத்துப் போய்விட்டால் இருவருக்குமே நிம்மதி என்று தோன்றிற்று


பீட்டர்ஸ் காலனியில், ஞாநி வீட்டிற்கு எதிரில் இருந்த ஒற்றைக்கல் காம்பவுண்டு சுவரில் அமர்ந்து பாலா சிங்கிடம் பேசிக்கொண்டிருக்கையில், ‘அம்மா சீக்கிரம் செத்துப் போனாதான் நிம்மதிஎன்றான்.


அவங்களைக் கேட்டா, அவங்களும் இதையேதான் சொல்லுவங்கஎன்றான் பாலா


ஆபீஸ் அத்தியாயம் 27 கரையும் கடல்