03 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 29 வந்துடு

வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான்


என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன். கேள்வியில் இருந்த லேசான கிண்டல் முகத்திலும் இருந்தது.


என்ன கேள்விப்பட்ட... 


வேலைய ரிசைன் பண்ணிட்டு... 


ஆமா. யார் சொன்னாங்க


விஷயம், மாதம் ஒருமுறை தேவர் பிரிவ்யூ தியேட்டரில் மட்டுமே பார்க்கிற இவன் வரை போய்விட்டதா என்று ஆச்சரியமாக இருந்தது


யார் வழியா கேட்டிருந்தா என்ன. பேர் எதுக்கு என்றவன் கண்ணில் ஜோல்னா பையில் இருந்த காவி வேட்டி பட்டிருக்கவேண்டும்


இது வேறையா என்றபடி வாய்விட்டுச் சிரித்தான்


இவன் கொஞ்சம் சங்கடமாக நெளியவே, பயணங்கறது நல்ல விஷயம்தான். சே குவேரா ஸ்டூடண்டா டிராவல் பண்ணினதுல கிடைச்ச அனுபவங்கள்தான் மோட்டார்சைக்கிள் டயரீஸ்ங்கற புக்கே. அந்த டிரிப்புதான் அவரை புரட்சிக்காரரா ஆக்கினதுல முக்கிய பங்கு வகிச்சிது. இப்படி நாலு எடத்துக்குப் போனாதான் சமூகங்கறதுல நாம மட்டுமே இல்லைங்கறது பிடிபடும் என்று முற்போக்கு பிட் நோட்டீசாக ஆரம்பித்துவிட்டானா என தோன்றியபோதே, அதுசரி, அதுக்கு எதுக்கு இது என்றான் பையில் இருந்த காவியைக் காட்டி


சும்மா என்றான் தர்மசங்கடத்துடன்


சும்மா திரிஞ்சா எவன் சோறுபோடுவான் அதான் என்று சொல்லிச் சிரித்தான்


ஆபீஸ் அத்தியாயம் 29 வந்துடு