சின்ன வயசுல ஜெயகாந்தன் வீட்டை விட்டு வெளில வந்தார்னா, அவரா வரல. அவரால இருக்கமுடியலை. இருக்கமுடியாதபடி ஒரு பலமான கை அவரை வெளிய பிடிச்சுத் தள்ளிச்சு. அப்படியான நிர்பந்தம் உங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்க. நீங்க பாட்டுக்கும் கெளம்பி வந்திருக்கீங்க. டூர் போகறா மாதிரி வந்திருக்கீங்க அவ்வளவுதான். வந்தா மாதிரியே திரும்பிப் போனாலும் ஒண்ணும் ஆகிடாது...
அம்மா இருக்காங்கல்ல. உங்குளுக்காகவேதான அவங்க இருக்காங்க. நீங்க இல்லேன்னா அவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தீங்களா. நீங்க இருக்கீங்களா இல்லையானே தெரியாம இருக்கறது எவ்ளோ கஷ்டம்னு கொஞ்சம் நெனச்சிப் பாருங்க... இந்தத் தோற்றத்துல, நிஜமாவே நீங்க ரொம்ப நல்லாதான் இருக்கீங்க. அதுவும் சாயங்கால வெளிச்சத்துல, உங்க நெறத்துக்கும் கட்டியிருக்கற காவிக்கும் உங்க வயசுக்கும் கறுப்புத் தார் ரோட்ல நடந்து வரும்போது, அப்படியே கைல வாரி எடுத்துக்கலாங்கற கன்னுக்குட்டி மாதிரிதான் இருப்பீங்க.கூச்சமாக இருந்தது. எதாவது பேசவேண்டுமே என்று ஆமாம் பஸ் ஸ்டாண்டில் கோவிலில் என்று ஜனங்கள் கும்பிட்டதையும் காலில் விழ வந்ததையும் அவை கஷ்டமாக இருந்ததையும் கூறினான்.
ஆபீஸ் அத்தியாயம் 32 கை