நார்மலைஸ் ஆக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்: கலையின் பெயரில் கலைஞனை கொல்லுதல்
………
1. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் மாணவனான எனக்கு கல்லூரி சூழல் தமிழ் இலக்கியம், நாடகம் சார்ந்த அறிமுகத்தை வழங்கியிருந்த காலம். என் ஆர்வமிகுதியை பார்த்த பேராசிரியர் நல்லெண்ணம் கருதி மணல்மகுடி நாடக குழுவிடம் அறிமுகப்படுத்தினார்.
2. 2013 சனவரி மாதம், குழுவில் இணைவதற்கு முன்பே மணல்மகுடியின் நாடகப் பிரதி, முருகபூபதியின் நேர்காணல்களை கல்லூரி நூலகத்தில் வாசித்திருந்தேன். கோணங்கியின் பிதிரா, பாழி போன்ற நூல்ககளை பார்த்திருந்தேன்.
3. பதின்மவயது பையனான நான் குடும்பம், பள்ளி மற்றும் கல்லூரி நட்புவட்டம் தாண்டி சந்திக்கும் நபர்கள் இவர்கள். குழுவில் சேர்ந்த சில வாரங்களில் சர்வதேச நாடக விழாவிற்காக புது டில்லி பயணம் மற்றும் கோணங்கி அறிமுகம் என வாழ்வு கனவுபோல் இருந்தது.
4. கோணங்கி தனிப்பட்ட முறையில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று அழைத்து, பாலியல் சீண்டல்களை செய்துக் கொண்டிருந்தார். பெரிய எழுத்தாளர், நமக்கு தீங்கு விளைவிக்கமாட்டார் என 100% நம்பினேன். கோணங்கியையும் பூபதியையும் God Father போல நினைத்துக் கொண்டிருந்த பதின்மவயது பையனான எனக்கு பாலியல் சுரண்டல் பற்றி விழிப்புணர்வு இல்லை.
5. இதன் பின்னர் கோணங்கியின் போன் அழைப்பு வந்தால் பதற்றமும் பயமும் வரும். பாலியல் சுரண்டலை தவிர்க்கும் பொருட்டு கோணங்கியின் போன் அழைப்புகளை தவிர்ப்பேன். அப்போதெல்லாம், பூபதி அழைத்து “கோணங்கிக்கு உதவி தேவை நீ உடனே அண்ணனை பார் என அணையிடுவார்”. பூபதியின் வார்த்தைகளை தட்டஇயலாமல் உடன் நண்பர்களை அழைத்தச் சென்று சூழலை சமாளிக்க திட்டமிடுவேன். அதற்கும் கோணங்கி கண்டிப்பார். “இவ்வாறு தான் மௌனியும் நகுலனும் தனக்கு இலக்கியம் படைக்கும் ஆற்றலை வழங்கினார்கள் உனக்கும் அது கிடைக்கும்” என்பார். அதாவது ஆண்குறி வழியாக இலக்கிய படைப்பாற்றல் தலைமுறை தலைமுறையாக கைமாறுகின்றது என்கிறார்.
6.கொஞ்சம் கொஞ்சமாக பாலியல் சுரண்டலால் மனசிதைவுக்கு உள்ளானேன். அவ்வாறான மன உணர்வும் கலைஞனை வளர்த்தெடுக்கும் என நம்பவைக்கப்பட்டேன். உள பிரச்சணைகளுக்கு காரணம் பாலியல் சுரண்டல் தான் என்ற விழிப்புணர்வுஇன்றி இருந்தேன்.
7. என் சீரற்ற மனநிலையை கருதி
குடும்பத்தினர் என்னை நாடகத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அப்போதுகூட நாடக குழு மீது எனக்கு பற்று குறையவில்லை.
8. நாட்கள் செல்ல செல்ல மனநிலை நரகமானது. என் உளச்சிக்கல்களின் விளைவாக தற்கொலை எண்ணங்கள் வந்தது. அதன்பின்னர் என் குடும்பத்தினர் அரவணைப்புடன் , தீவிர மனநல ஆலோசணையின் கீழ் ஒரு வருட காலத்திற்கு மேலாக இருந்தேன். அப்போது கோணங்கி மற்றும் பூபதியிடம் இருந்துவிலகி இருந்தேன்.
9. நிகழ்த்துக்கலை ஆய்வுகளுக்காக நீண்ட காலத்திற்கு பிறகு 2021ல் மணல்மகுடி குழுவினருடன் நெருக்கமானேன். இந்த சில மாதங்களாக பாலியல் வன்முறை பற்றிய புரளிகளாகவும் நகைச்சுவையாகவும் பேச்சு வந்தது.
10. மணல்மகுடியில் ஜெயபிரகாஷ் என்ற இளம் நாடக நடிகன், தனக்கு பாலியல் சுரண்டலால் social anxiety இருப்பதை சொன்ன போது எனக்கிருந்த உளப்பிரச்சணைகளுக்கும் கோணங்கி மற்றும் மணல்மகுடி சூழல் உருவாக்கிய பாலியல் வன்முறைதான் காரணம் என உணர்ந்த போது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
11. இங்கு கோணங்கியின் பாலியல் வன்முறைகள் normalise ஆக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக வன்முறைக்கு உள்ளான எவருக்கும் பூபதியோ கோணங்கியோ நேரடியாக பதில் அளிக்கவில்லை.
12. கிட்டத்தட்ட டஜன் கணக்கில் இளம் நாடக கலைஞர்களும் வாசகர்களும் கோணங்கியால் தொடர் சித்திரவதைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களாக தன் அனுபவத்தை வெளியே சொல்வார்கள் நான் யாரையும் குறிப்பிட இயலாது.
13. அநாமதேயமாக பாலியல் வன்முறை குறித்து பொதுவெளியில் பேச்சு வந்ததால் நானும் சுய அனுபவத்தை பதிவிடும் தைரியம் பத்துவருடங்களுக்கு பின் கிடைத்திருக்கிறது. இது ஒரு விழிப்புணர்வுக்கானது. எதிர்வரும் காலத்தில் இது தொடர கூடாது. கலை மற்றும் இலக்கியம் சார் சமூகம் தன்னுள் ஒரு எதிர்வினையாற்ற வேண்டும்.
14. வெளியே சொன்னால் நாடக கலை அழிந்துவிடும் என்று காரணத்திற்காக பாலியல் வன்முறைகளை சகித்துக் கொள்ளுங்கள் என குழுவினர் எச்சரிக்கிறார்கள். The Artists are so vulnerable then the art. இங்கு கலைஞனாக பாதிக்கப்பட்ட நடிகர்களையே குறிப்பிடுகிறேன். கலை என்ற பெயரில் வன்முறையை வெளியே சொல்லாமல் இருக்க இயலாது.
15. யாரிடமும் நீதி கேட்ட தோன்றவில்லை. உங்கள் முன் எச்சரிக்கை பதாகையை மட்டும் காட்ட விரும்புகிறேன்.
16. பெரிய எழுத்தாளர்கள் மீதான பிம்பங்கள் என் பதின்ம பருவத்திலேயே உடைந்துவிட்டது. என் மீம்கள் மானசீகமாக பெரிய பிம்பங்களை பற்றிய பகடியை கொண்டிருப்பதற்கு இவைதான் காரணம்.
·
வேறு பல நாடக கலைஞர்கள் மற்றும் வாசகர்கள் தங்களுக்கு கோணங்கியால் நடந்த பாலியல் வன்முறை பற்றி பதிவிட்டுள்ளனர்.
Shiyam Sundar Vel is with Keela Naren and
7 others
2018, மே மாதத்தில் நண்பன் அரவிந்தனின் வீடு என்ற முறையிலேயே கோவில்பட்டிக்குச் சென்றேன். தமிழில் முக்கிய எழுத்தாளர் என்று தெரிந்தவர்கள் சொல்லியும், நண்பனின் பெரியப்பாவாகவும் கோணங்கி அறிமுகமாகி இருந்தார். “உனக்கும் நா பெரியப்பா தான் டா” என்று அவர் சொன்னதால், அவருக்கு அந்த மதிப்பை அளித்தேன். தனது எழுத்து வேலைகளுக்குத் தட்டச்சு செய்யவேண்டும் என்று உதவிக் கேட்டார். அந்தச் சந்திப்பிலிருந்து 2019 பிப்ரவரி மாதம் வரையில், வெவ்வேறு சூழ்நிலைகளில் கோணங்கியின் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகினேன். அவை அனைத்தும் ஆள் பார்த்து - திட்டுமிட்டு கோணங்கியால் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்கள்.
பலமுறை அந்த வீட்டில் இரவு தங்குவதற்குப் பயந்து, இல்லாத காரணங்களைச் சொல்லித் தப்பி ஓடியிருக்கிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டு, இனம்புரியாத பதற்றத்துடனே அந்தக் காலங்களைக் கடக்கவேண்டியிருந்தது.
நான் பாலியல் சுரண்டலுக்கு உள்ளானதை உணர்ந்து கொள்வதற்கே ஆறு மாதங்கள் ஆனது. அதுவரையில் நடந்தவற்றைத் திரும்ப யோசிக்கையில், எனது இயலாமையை நினைத்து நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது. இதுகுறித்து நான் யாரிடமும் புகாரளிக்கவில்லை. புகாரளிப்பது குறித்து யோசிப்பதற்கே எனக்கு போதுமான தெளிவில்லை என்று அங்கிருந்தவர்களால் நம்பவைக்கப்பட்டிருந்தேன்.
இதைப் பகிர்ந்துகொள்வதற்கு நம்பிக்கைக்குரியவனாக முதலில் தெரிந்தது அரவிந்தன் தான். அன்றிலிருந்து இதுகுறித்து அவனிடம் வெளிப்படையாக உரையாடியிருக்கிறேன். இன்றும் அவன் எதிர்ப்புகளைக் கடந்து பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறான்.
முடிந்தவரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோணங்கி மற்றும் அவரது ஆதரவாளர்களின் தொடர்புகளையும் கோவில்பட்டி செல்வதற்கான சந்தர்ப்பங்களையும் தவிர்த்திருக்கிறேன். ஆனாலும் நடந்தவற்றைச் சிலரிடம் மட்டுமே இதுவரையில் பகிர முடிந்திருக்கிறது. இன்று இந்தப் பதிவை எழுதும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பெற்றதில் நிம்மதியடைகிறேன்.
கோணங்கி செய்த பாலியல் அத்துமீறல்களைக் கண்டிக்காமல், நிறுவனமாகச் சேர்ந்து மூடி மறைத்துக் காப்பாற்றியது; ‘கலை’, ‘சரணடைதல்’, ‘Madness’ என்றெல்லாம் பாதிக்கப்பட்டவனைக் குழப்பி, உண்மையை வெளி சொல்லவிடாமல் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கியது; கும்பல் மனநிலையை உருவாக்கி, உளவியல் அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவனையே பொதுவெளியில் கோணங்கியைப் புனிதராக வழிபட நிர்ப்பந்தித்தது எனக் கோணங்கியின் பாலியல் சுரண்டல்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் இதில் பெரும் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
இப்போதும் தவறை ஒத்துக்கொள்ள மறுத்து, ‘தங்களின் இயக்கத்தின் மீதுள்ள காழ்ப்பில், தங்களை அழிப்பதற்கு அரசியல் சதி செய்கிறார்கள்’ என்று முருகபூபதியும் கோணங்கியின் ஆதரவாளர்களும் ஆபாசமாகப் பிதற்றுவதாக நண்பர்கள் சொல்லக் கேட்டேன். அதில் அதிர்ச்சியேதுமில்லை.
இதைப் பேசவேண்டும் என்று நினைக்கையில், ‘ஒரு மாஸ்டரை எப்படி உன்னால் குற்றவாளியாக நிறுத்த முடியும்’ என்று இவ்வளவு காலம் எனக்குள் நானே குழம்பிக் கொண்டிருந்தேன். யார் மாஸ்டர்? கோணங்கியின் ஆதரவாளர்கள் உருவாக்கிய கும்பல் மனநிலையின் வெளிப்பாடாக நானும் அக்கருத்தை ஏற்றுப் பலியாகியிருக்கிறேன் என்பதை உணர்ந்து, மணல்முகுடியை விட்டு முற்றிலும் வெளிவந்து இப்போது தெளிந்திருக்கிறேன். கோணங்கி எனக்கு மாஸ்டருமில்லை. அப்யூஸர் எனது மாஸ்டராக இருந்தாலும், அந்த நபரைக் காக்கப் போவதுமில்லை.
இன்னும் இதைக் கண்டும் காணாததுபோல இருப்பவர்களின் மௌனம் அருவருப்பாக இருக்கிறது. ‘போதுமான அதிர்ச்சி இல்லாத பொதுச்சமூக’த்தை கோபம் கொண்டு விமர்சிக்கும் ச.தமிழ்செல்வன் உள்ளிட்ட பலரும், இந்த விசயத்தில் வெளிப்படையாகத் தங்களது கண்டனங்களை விரைவில் பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
Guhan N is with Asai Neelakandan and
10 others
It was traumatic & haunting experience I've ever had
I am exposing this with Sridhar Balasubramaniyam and all others
Venkatesh Vinith is with Shiyam Sundar Vel and
3 others
For All those Writers who side with "Konangi" one more proof especially for that "ஆசான்" the chat screenshot is from 2021 you can see right there in the image. I tried to talk about Konangi and his harassment to one of the guys from the "Manalmagudi" theatre troop I knew very well that they knew about his bloody behaviour but they tried to evade.
Yes it is shocking but that doesn't mean that he could not have harassed If you cannot believe Konangi has done that express that you are shocked to your core but don't write "he couldn't have done it" after all you all are writers who write about " மனிதனின் காம குரோதங்கள்"
·
நீண்டகாலமாக மணல்மகுடியில் நடிகனாக இருப்பவரின் குரல்:
Charles is with Ramesh Palanichamy and
16 others
தனிநபர்க்கு மட்டும் நடக்கவில்லை.
மணல் மகுடியில் பயணித்த நாடக நடிகர்கள் , புகைப்பட கலைஞர்கள், எனக்குத் தெரிந்து 30 சதவீதமான கலைஞர்கள் கோணங்கியால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பத்து வருடங்களாக மணல் மகுடி நாடக குழுவில் நடித்து வருகிறேன்...
நான் மணல் மகுடியில் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே .... மதுரை கீழக்குயில்குடி அருகே சமணர் மலை அடிவாரத்தில் கோணங்கி அண்ணன் மதுரை வந்து தங்குவதற்காக ஒரு வீடு ஒன்று வாடகைக்கு பிடித்திருந்தர். ஒரு நாள் இரவு நேரத்தில் கோணங்கி அண்ணன் மது அருந்திவிட்டு இருவரும் தூங்கும் நேரத்தில் என்னை தொந்தரவு செய்தார். நான் எதுவும் பேசாமல் சற்று ஒதுங்கி ஒதுங்கி படுத்தேன். எப்பொழுது விடியும் என்று காத்திருந்து விடிந்த பிறகு வேகமாக குளித்துவிட்டு கல்லூரி சென்று விட்டேன்....
இந்த சம்பவம் குறித்து மணல் மகுடியில் முதல் தடவை கேரளாவில் நாடக விழாவிற்கு சென்ற பொழுது அங்கே ரத்தினவேல் மற்றும் தீபா ராஜ்குமார் ஆகிய நாடக நடிகர்கள்
சேர்ந்து கோணங்கியின் பிரச்சனையை அன்று வெளியில் பேசினார்கள். அன்றுதான் எல்லா நடிகர்களுக்கும் (சிவராஜன், கார்த்திக், ஸ்ரீதர் பாலசுப்ரமணியம், குகன், முகேஷ் பாலசுப்ரமணியம், தமிழரசன்,) நடந்ததை வெளிப்படையாக எல்லாரும் கலந்து கொண்டு பேசினோம். அன்றே அனைவரும் இதை மன்னித்து விடுவோம் பிரச்சினையை விரிவாக்க வேண்டாம் என்று மணல் மகுடி நடிகர்களும் , முருக பூபதி அண்ணனிடம் அன்று எல்லோரும் இந்த விஷயங்களை பேசி இதை முடித்துக் கொண்டோம்.
அனைவரும் இது மாதிரி சம்பவங்கள் மீண்டும் தொடரக்கூடாது என்று பேசி முடிவெடுத்தனர்.
ஆனால் மீண்டும் புதிதாக வந்த இளம் நடிகர்கள் மற்றும் இளம் கவிஞர்களுக்கும் தொடர்ச்சியாக நடந்தது. இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பு நான் மணல்மகுடி மேனேஜர் பூபால் என்பவரிடம் சொன்னேன். மணல் மகுடி குழுவிற்குள் இருக்கும் சிக்கலையும் வெளிப்படை தன்மையின்மையையும், நிறைய கலைஞர்கள் தொடர்ச்சியாக ஒரு நாடகம் முடிவதற்குள் குழுவை விட்டு திடீரென்று நின்று விடுவதையும் குழுவினுள் விவாதிக்க பேசினேன். அனைத்து நடிகர்களையும் உட்கார வைத்து ஒரு கூட்டம் நடத்துவோம் என்று பேசினேன். ஆனால் அந்த கூட்டத்திற்கு ஒரு சிலர் மட்டும் இருந்தார்கள். இயக்குனர் முருக பூபதி,
மேற்படி விஷயங்களை செய்யும் பூபாலன்.
நடிகர்கள்
விக்னேஷ் குமுளை, ரூபன் பால், ஈஸ்வரன், கமுதி விக்கி. நாங்கள் அனைவரும் விவாதித்தோம். மற்ற கலைஞர்களை ஏன் கூப்பிடவில்லை என்றும் கேட்டேன். பூபதி அவர்கள் அனைவரும் வேலையில் இருக்கின்ற கூறி விட்டார்கள் என்று பதில் அளித்தார்.
ஆனால் அந்த கூட்டத்திற்கு யாரையும் கூப்பிடவில்லை என நடிகர்களுடன் பேசிய பொழுது தெரிந்தது.
கூட்டத்தில் விவாதித்து அனைத்தும் வேறு எதையோ ஒன்றை பேசிக்கொண்டு கேட்ட கேள்விக்கு சரியான பதிலை தரவில்லை....
கோணங்கிக்கும் கார்த்திக்கும் மட்டும் நடந்திருந்தால், தன் சொந்த தம்பி மகன் அரவிந்த் என்ன பொய்யா சொல்றான்...
நீங்கள் வளர்த்த கிடாய்கள்தான் தான் நாங்கள்...
மணல்மகுடி முகநூலில் முகநூல் பதிவும்
கோணங்கி விகடனின் நேர்காணலும்
முரணாக உள்ளது . செய்தது தவறு என்று வெளிப்படையாக தெரிகிறது.
பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அதுவே நியாயம்.
கடந்த வாரம் வரை மணல்மகுடி நாடக குழுவில் இருந்தவரின் குரல்…
Jaya Prakash Chandran is with R. Ariharasuthan and
18 others
இது என் முதல் சோலோ ஒத்திகை மற்றும் நாடக கலைக்காக முதல் எழுத்து என்று எழுதிக் கொண்டிருந்த நாள். முருக பூபதி அவர்களின் சிறுவர்களுக்கான கதையை எனது வடிவாக்கத்தில் அவர்களிடம் பதிவு செய்திருந்தேன்.
‘அருமை டா அற்புதம் டா ‘ என்று கூட பாராட்டி இருந்தார். இந்த ஒத்திகை சென்னை போட்டோ பினாலே அவர்களும் மணல் மகுடி நாடக குழுவும் இணைந்து நடத்தும் மூன்று நாட்களுக்கான குழந்தைகளின் புகைப்பட பயிற்சி பட்டறை நடத்தப்படுவதாக இருந்தது.
இதற்கு நானும் என் சக நடிகன் ஈஸ்வரன் ஒத்திகையில் இருந்தோம். மறுநாள் காலை ஓவியர் வாக்கா பற்றிய தொகுப்பை கோணங்கி சிலவற்றை என்னிடம் கொடுத்தார். ஒன்றும் புரியாத காரணத்தினால் நானும் ஈஸ்வரனும் ஒத்திகையில் ஈடுபட்டோம்.
அப்போது அவனுக்கு தேர்வு சுமை காரணமாக அருளானந்தர் பாதர் அன்பு அவரிடம் இருந்து கால் வந்தது. ‘தேர்வு எழுதவில்லையா ‘ என்று இதே கேள்விப்பட்டு ஈஸ்வரன் அவர்கள் கிளம்பி விட்டார்.
அவரை நான் தான் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அனுப்பி வைத்து விட்டு வந்தேன்.
தொலைபேசியில் நாளை காலை தஞ்சாவூர் விக்கி கோவில்பட்டி வருவதாக சொல்லி இருந்தார்.
அன்று இரவு எப்போதும் பக்கத்து வீட்டு ஆட்சியின் பேரன் என்னுடன் தங்குவார். அன்று அவரை வரவேண்டாம் என்று சொன்னார் கோணங்கி. நாங்கள் எப்போதும் போல் மது அருந்திவிட்டு படுக்க சென்றோம். எப்போதும் போல மேல் மாடியில் அவர் அறையில் உறங்காமல் கோணங்கி கீழே அறையில் வந்து படுத்தார். அவர் கட்டிலிலும் நான் அவரின் கீழ்ப்படுத்திருந்தேன்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை கீழே என் அருகில் படுத்தார். அதன் பின் அவர் என்னை சீண்டத் தொடங்கினார். இதைப் புரிந்து கொண்ட நான் சற்று தள்ளிப் படித்து விட்டு அவரை மேலே போங்கள் என்று சொன்னேன். இதைப் பற்றி மறுநாள் காலையிலேயே நான் என் டைரிக் குறிப்பில் எடுத்துக் கொண்டேன்.
கோணங்கி இவ்வாறு என்னிடம் நடந்தார் என்று எழுதினேன். காலையில் தஞ்சாவூர் விக்கி கோவில்பட்டி வந்து அடைந்தார். அவரிடம் நான் இதை கூற முடியாத காரணத்தினால் அந்த எழுத்துக்களை அவரிடம் காட்டி இருந்தேன். அவர் இதெல்லாம் வேணாம் பூபதி கிட்ட போய் சொல்லு என்றார். பின்னர் என் கண் முன்னையே நான் எழுதிய தாள்களை கிழித்து எறிந்தார்.
மதியம் வந்தடைந்த பூபதி எப்போதும் போல் நாடகத்திற்கான முகமூடிகளை தயாரிக்க ஆரம்பித்தோம். அப்போது நான் அவரிடம் ‘கோணங்கி இப்படி என்னை கே அப்ரோச் செய்வதாக கூறினேன்’. அப்போதே என்னுடன் சென்னையைச் சேர்ந்த ஓவியர் மணிவண்ணனும் கூட இருந்தார். பூபதி கண்டப்பதாக சொன்னார். பின் நாட்களில் கோணங்கியின் புகழ் காரணத்தால் நான் வெளியில் சொல்லவில்லை. நாட்கள் செல்ல தான் நான் என் சக நடிகர்களுடன் இதைப்பற்றி கூற ஆரம்பித்தேன். அவர்களும் எதுவும் என்னிடம் கூறவில்லை. நாட்கள் செல்ல செல்ல சக நடிகர்கள் அவர் அவர்களின் கோணங்கியால் பாதிப்பை கூறினார்கள். இவர்கள் அனைவருமே புது நடிகர்கள் என்று கூட சொல்லலாம். தற்போது நாங்கள் சென்ற கேரளாவின் திருச்சூர் நாடக விழாவிற்கு வாகனத்தில் சென்றோம். அவர் அருகில் வந்து உட்கார்ந்தார். அன்று வரை அவர் தவிர்த்து விட்டு இருந்தேன். அங்கு சக நடிகர்களுடன் பேசினோம். இது அவருக்கும் தெரியும் மணல்மகுடி குழுவினருக்கும் தெரியும் நாங்கள் என்ன பேசினோம் என்று. சென்னை போட்டோ பினாலே புகைப்பட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரியும். பூபதி இதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது தெரியாத மாதிரி பேசுகிறார்.
Bowjijewel மணல்மகுடி முன்னாள் பெண் நாடக கலைஞரின் பதிவு:
————————-
அண்ணன் பூபதி பல விஷயங்களை கண்டுகொள்வதேயில்லை. அவருக்கு தேவை நாடகத்திற்கான ஒரு உடல் மட்டுமே தவிர்த்து அங்கு புரையோடிப் போய் கிடக்கும் பல நிகழ்வுகளை வன்முறைகளை எளிதாக கண்டுகொள்ளாமல் போவதற்கான காரணம் அதிகாரம் மட்டுமே. தவிர்த்து அவர்களுக்கு கிடைத்திருக்கும் நற்பெயர். பின்நவீனத்துவத்தை எந்த சிக்கலுமில்லாமல் முற்போக்காக எழுதும் கோணங்கி நிச்சயமாக தன்னை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் அதுவே அறம். அவரது எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளும் சமூகம் அவரையும் ஏற்றுக்கொள்ளத்தானே செய்யும். சமூகத்திற்கு பயந்து வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்று வெறுமனே சப்பைக்கட்டு கட்டிவிட முடியாது. மட்டுமின்றி மனரீதியான வன்முறை என்பது உளச்சிக்கல் சார்ந்தது. வெளிப்படையாக சொன்னவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சொல்லப்படாதவை அந்த நாடகநிலத்திற்குள்ளேயே புதைந்து கிடக்கலாம். இன்னும் கோணங்கி மௌனமாய் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யாமல் இதற்கான விளக்கத்தையும் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோர வேண்டும்.
Karthick Ramachandran
இயற்கைக்கு சொந்தக்காரன் இயற்கைக்கு சொந்தக்காரன் is with Bowjijewel and
18 others
ஆரம்ப கால கட்டத்தில் இருந்து கலைக்கு உண்மையாக இருந்தேன்
பழக பழக பாலும் புளிக்கும் என்று இப்பொழுது நன்றாக புரிந்து கொண்டேன் .கோணங்கி கலைஞர்கள் மீது நடத்திய பாலியல் குற்றங்கள் குறித்து நான் வந்தப்ப எனக்கு தெரியவில்லை. ஆனால் போக போக மணல் மகுடி முன்னாள் நாடக கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது பற்றி கலைஞர்கள் சொன்ன பின்புதான் தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு
என்னால் இதை சகித்து கொள்ள முடியவில்லை. சென்னை தக்சன் சித்ரா மீயுசியமில் நாடகத்திற்காக வந்த பொழுது சக கலைஞர்கள் ஜெயபிராகஷ், சார்லஸ், நரேஷ் சமத்துவன் ஆகியோர் என்னிடமும், ரூபன் பாலிடமும் கோணங்கி எங்களிடம் பாலியல் abuse பன்னினார் என்று சொல்லும் போது என்னால் இதை பொறுத்து கொள்ள முடியவில்லை . இன்னும் பாதிக்கப்பட்ட கலைஞர்கள் இன்னும் பலர் ஆதரவு மனநிலையில் இருப்பது வாழ்க்கையே வெறுப்பாகி விட்டது என்னால் இதை சகித்து கொள்ள முடியவில்லை. இது குறித்து அப்பவே முருக பூபதியிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சக கலைஞன் JPகூறும் பொழுது ஏன் இந்த பிரச்சனை குறித்து பூபதி பேசவில்லை என்று எனக்கு கோபம் வந்தது அடுத்து இப்படிப்பட்ட இடத்துக்கு ஏன் டா வந்தோம்னு அசிங்கம இருந்துச்சு. அடுத்து பூபதியிடம் இதை பற்றி பேசனும்னு இருந்தேன். ஆனால் அதற்கு முன்னாடியே சார்லஸ், ரூபன் பால் இந்த பிரச்சனை குறித்து ஒரு மீட்டிங் போட்டு பேசுவோம் என்னிடம் கூறினார்கள். நான் அந்த மீட்டிங்க்கு போக முடியாத சூழல் மணல் மகுடி நாடக நிலத்தில் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் கோணங்கியால் நடந்து கொண்டே இருக்கிறது. திட்டமிட்டே பூபதி என்னை அவன் வரமாட்டான் போன் பன்ன எடுக்கல அதனால் நரேஷ் நீ அவன் டயாலக் எழுத்துருவை சொன்னது மூன்று நாட்கள் கழித்து எனக்கு தெரிய வந்தது பூபதியிடம் போன் பன்னி பேசினேன் நீங்க இப்படி பன்னுவிங்கனு எதிர்பார்க்கல பூபதி அண்னே நீங்க கூப்ட்ட உடனே வந்துருக்கேன். ஆனா நா வர மாட்டேனு நீங்க நரேஷ்ட சொன்னது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆகவே எனக்கு நாடகத்திற்கு வர விருப்பமில்லை முருகபூபதியிடம் கூறினேன். ஆனால் நான் அப்படிலாம் இல்லடா அப்படினு என் கிட்ட சொன்னார் முருகபூபதி எனக்கு விருப்பமில்லை இவர்கள் திட்டமிட்டே என்னவெளிய அனுப்ப நினைத்தது தெரிந்து நான் வரவில்லை என்று கூறிவிட்டேன் .காலையில் பேசினேன் மாலை 4.30 மணியளவில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார் முருகபூபதி, கோணங்கி மற்றும் இரண்டு நபர்கள் வந்திருந்தது என் அம்மா சொல்லித்தான் தெரியும். வந்தது மட்டுமல்லாமல் எங்க அம்மாகிட்ட மணல் மகுடி 25 புத்தகத்தையும் ஒரு full சரக்கு பாட்டிலை கொடுத்து சென்றது மிகுந்த கோவத்தை ஏற்படுத்தியது.என் அண்ணன் சார்லஸ் 10 வருடங்களாக மணல் மகுடில நடிச்கருக்கான் ஆனா இத்தனை வருசமா வராதவங்க நான் நாடகத்திற்கு வரவில்லை என்று சொல்லும் போது வந்துருக்காங்கன
தேவைக்கு பயன்படுத்துறது அப்பட்டமா எனக்கு தெரியது அப்படி இருந்தும் எங்க அம்மா இந்த ஒரு தடவ போனு சொன்னதால நான் போனேன் ஒத்திகை முடித்து திருச்சூர் நாடக திருவிழாவிற்கு சென்றேன் ஆனால் பிப்ரவரி 10 தேதி நடக்க வேண்டிய நாடக நிகழ்வு 11 தேதிக்கு மாற்றம்னு கலைஞர்களிடம் உரையாடவில்லை இது மிகுந்த வேதனை அது மட்டுமல்லாமல் 10 தேதி இரவு மேலும் மனம் வெறுமையடைந்து பூபதியிடம் பேசணும்னு போனேன் அவரு தூங்கிட்டார் கதவை தட்டினேன் திறக்க வில்லை அடுத்து பக்கத்து ரூம்ல மணல் மகுடி ஒருங்கினைப்பாளர் பூபாலன், விக்னேஷ் குமுளை, இவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் மணல் மகுடில நெறைய பிரச்சனை இருக்கு பொருளதார ரீதியா, கலைஞர்களுக்கு கோணங்கியால் பாலியல் துன்புறுத்தல் இருக்கு, சாதிய ஒடுக்குமுறை, உணவுகளில் பிரச்சனை இருக்கு, கலைஞர்க ளுக்குள்உரையாடல்ல பிரச்சனை இருக்கு கேள்வி கேட்டா எதிரி மனநிலையில் பார்க்கிரிங்க, உண்மையா இருந்ததன் விளைவு எதிரி, ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வு பிரச்சனை கண்டு அமைதியாய் இருப்பது ஆபத்து இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் .மனிதர்கள் போலியானவர்கள்னு சொன்ன பூபதிய நினைச்சத்தான் ஆபத்தா இருக்கு பூபதி கோணங்கி முற்போக்கு மூகமுடிய போட்டு பொது வெளியில் இருக்கும் அனைவரையும் ஏமாற்றுகின்றனர் பேசுவது ஓன்றாக இருக்கு செயல் வேறு ஒன்றாக இருக்கு கருத்து முரண்பாட இருக்கு இப்ப மணல் மகுடி எல்லாரும் சேர்ந்து பேசுவோம்னு முகநூல் பதிவு வந்திருக்கு கோணங்கி நான் எந்த தப்பும் பன்னலனு சொல்றதுல தெரியுது இவனுங்க நிலைப்பாடு என்னனு பாதிக்கப்பட்டது ஒருத்தர் இல்ல எனக்கு தெரிந்து 15 நபர்களுக்கு மேல் இருக்காங்க ஆதாரம் இருக்கு பாதிக்கபட்ட கலைஞர்களின் பக்கம் நிற்பதே அறம் .
மந்தையை பிரிந்த கிடாக்கள்
பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் மூக்குவொழுக அழுதுகொண்டு வீட்டின் மூலையில் பதுங்கியிருக்க வேண்டும். அவர்கள் சிரிக்கக்கூடாது. தெளிவாக பேசக் கூடாது. குழப்பத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களாக நம்பப்படுவார்கள்.
இவ்வாறாக எங்களிடம் எதிர் பார்க்காதீர்கள்.
இவ்வாறுதான் நீதி கிடைக்க வேண்டுமென்றால் அந்த நீதியை நீங்களே பத்திரமாக பிரிஜ்ஜில் வைத்து கெடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு வேண்டாம்.
நாங்கள் கலை மற்றும் இலக்கிய சமூகத்தினுள் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான எதிர்பாற்றலை விதைத்திருக்கிறோம். தற்போது பலரும் தங்கள் அனுபவங்களை பேசத் துவங்கியுள்ளனர். நேற்று காலையில் ட்விட்டர் ஸ்பேஸில் வெளிநாடுவாழ் தமிழ் ஆண் மென்பொறியாளர்கள் தங்கள் உயர்அதிகாரிகள் நிகழ்த்திய பாலியல் வன்முறை பற்றி விவாதித்துள்ளனர். கலை இலக்கியம் கடந்து மீடூ வேறு தொழிற்சார் சமூகங்களும் தங்கள் பிரச்சணையை சொல்ல தைரியம் வந்திருக்கிறது.
நாங்கள் பாதிக்கப்பட்டவன் எனும் அடையாளத்தால் அறியப்படுபவர்கள் அல்ல. எங்களில் பலர் நாட்டுப்புறவியலாளனாக ஆய்வுகள் மேற்கொள்பவர்கள் , இலக்கிய திறனாய்வாளர்கள், சிறுகதையாளர்கள், முன்னாள் இன்னாள் நாடக கலைஞர்கள், ஆவணத் திரைப்பட இயக்குனர்கள். இவ்வாறுதான் நாங்கள் அடையாளப்படுகிறேன். மேலும், நாங்கள் வலிமையாக இருக்கிறோம்.
மீம் போடுவதால் பாதிக்கப்பட்டவன் என்ற பாத்திரத்தை பொய் என்றகிறது. குரலற்றவன் எவ்வாறுதன் எதிர்புணர்வெளிப்படுத்துவது. கோணங்கி குற்றவுணர்வற்றவர்…. தப்பு செய்தது தெரிந்தாலும் ஆதரிக்க ஆட்கள் இருப்பார்கள் என முன்னமே மணல்மகுடி குழுவிலேயே எங்களுக்கு தெரியும். அதிர்ச்சி ஒன்றுமில்லை.
Karthick Ramachandran
மற்றுமொரு முன்னால் நாடகக் கலைஞனின் பதிவு. பாலியல் வன்முறை,உளவியல் வன்முறை. மீடூ நீண்டு கொண்டே செல்வது அதிர்ச்சியளிக்கிறது.....
RathinaVel M is with Charles and
3 others
I joined Manalmagudi Theatre Land in 2016. After some time, in Kovilpati Konnangi asked me to read aloud and verbally translate from a book in English on Paul Gauguin and Van Gogh. Then I helped him to download references of their paintings. After that he offered me liquor and we started drinking. He talked many art related things and stories to me and I was very impressed listening to him. I then slept and he continued working. Then he came and lay down next to me and started touching me and sexually abused me. I remained idle through all this. In my childhood I have experienced sexual abuse from boys and men and so this was not something new that happened to me that day. But immediately after this I was very disgusted with myself in spite of me not being responsible for this act. For me this happened with Konnangi only once. After this, I tried to act very normal in the theatre space in Kovilpati.
Now I am saying this in a very composed way but it took bloody years to reach here. I was young and I became very confused and disturbed, also about my sexuality (This is not to offend any person of any sexuality but this was a major personal conflict within myself). I pushed myself very hard to avoid all thoughts about this act to be able to be okay with myself.
After this, rehearsals happened, we travelled. It was good and bad in the troupe. I also enjoyed the process with Manalmagudi and Murugaboopathy believing in his politics and theatre.
Then in 2017 we went to Thrissur to perform at ITFOK. There a little while before our performance, at a tea shop when we actors were all talking some joke was going around. One actor was telling another that Konnangi is calling, you go. When I heard this I clearly remember till today that my face changed and my eyes got wide. Immediately others guessed that Konnangi had abused me as well. I started getting really angry at that moment and started yelling at all of them including some seniors, how could you allow this to happen, what if someone to whom this happened committed suicide, and how they could take this as a joke. They started pacifying me but I was adamant that we should all go to Kovilpati the next day and talk about this to Murugaboopathy.
I first went and told Mukesh and Deepa about this, that this happened to me and was happening to many others in the troupe. Next day I spoke to Murugaboopathy about this in Kovilpati and he said that he did not know about this and without solving this he will not do any further work in the troupe. Then Mukesh spoke to Boobalan over the phone and Boobalan promised that he will speak to Konnangi and this will not happen to anyone again. Back in Chennai I also spoke to Boobalan and he assured me the same. Sometime after this I left the troupe feeling very guilty that I had done something bad for the troupe. The next years we were only talking and ranting about the troupe in pain because we had invested so much of our selves in it and Murugaboopathy.
All the time I was there, we were told that artists should not get married, if you get married or have a relationship you won’t get art, artists should be always floating, and not be within practical life. As a practitioner working with Manalmagudi and with another troupe my experience is that they always keep their actors on the edge by constantly keeping them scared, talking about how art and artist should be. Only if you do this you can become an artist and if you don’t do that you cannot become an artist. We should have pain, we should see everything as art, we should not live a normal life. Van Gogh cut his ear and gave it to a woman, what will we cut and give for art? They kept us, manipulating us, telling us that art and only art is something serious. They have a lot of hierarchy, with seniors, juniors, gatekeepers, with favouritism, with who cleans bathrooms, who does hard labour, whose contribution is allowed to be stolen by whom (seniors) and the directors and seniors are able to talk whatever they wanted whenever they wanted to, finding new new scales for art every day, that this is art and this is not art. There is much extremely ugly power politics within these institutions.
In this entire process I somehow ended up being abnormal. The spaces were claustrophobic and gossip filled about personal relationships, controlling the actors. No one spoke to us that living life happily is more important than doing art. No one guided us to be ok with family, to be in good terms with family. Somehow they destroyed the idea of being normal within us. They told us it is wrong to earn money, to be comfortable, if we are like that then art won’t come to us, we won’t attain art, become real artists. But through all this they made sure their work happened, whatever the case. They penetrated a slavish mentality into our minds making us believe that we were nothing. This let them achieve their artistic goals. At the same time people like me were thinking that we were artists and judging everyone else as people who did not know anything, these are normal people caught within their daily life and we are above them even though we didn’t have a single penny in our pocket. I remember Konnangi once telling that only being in prolonged insane mind set is art, and taking this seriously many of us prolonged this for ourselves without understanding any of this.
These people are not concerned about any humans. But humans and not art is more important than anything. To understand this and deal with this I was forced to forgive myself and forgive all the nonsense that has happened to me, including sexual abuse by Konnangi, and physical, mental and emotional abuse by others in power positions. To know and say this, it has taken this moment, and all these years.
I am now writing all this having crossed all this. I am not presenting myself as a survivor seeking anyone’s sympathy. I am not believing in and giving that position to anyone here. I am doing this to stand with my close friends in Manalmagudi. We don’t want anyone else to go through what we have gone through, within and outside of these specific and other artistic spaces. A healthy environment needs to arise, for not only the affected people but also for Konnangi, for all to find ways to overcome this situation. This is what I wish for.
Tamil translation of my statement is below (With any discrepancy please refer to the English statement)
நான் 2016ல் மணல்மகுடியில் இணைந்த, சில காலங்களுக்கு பிறகு கோணங்கி, வான்கா மற்றும் பால் காகின் பற்றிய ஆங்கில நூல்களை தந்து வாசித்து அர்த்தம் சொல்லச் சொன்னார். அவருக்கு உதவியாக சில ஓவியங்களை தரவிறக்கி உதவினேன். அதன்பின் அவர் எனக்கு மது அளித்தார். இருவரும் இணைந்து பருகினோம். அவர் என்னிடம் கலை மற்றும் இலக்கியங்கள் தொடர்பாக பேசியது எனக்கு ஆர்வத்தை தூண்டியது. சில நேரத்திற்கு பிறகு நான் உறங்க சென்றேன். அப்போதும் அவர் தொடர்ச்சியாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் அவர் என் அருகே படுத்துக் கொண்டு பாலியல் சீண்டல்களை செய்தார். அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் குழந்தை பருவத்தில் நான் பாலியல் வன்முறையை எதிர்கொண்டிருந்தாலும் ஒரு இளைஞனாக அந்த நாள் எனக்கு எதிர்கொள்ள இயலாத அளவிற்கு இருந்தது. ஆனால், அதன் பிறகு அதனைப் பற்றி எனக்கு எரிச்சலூட்டும் உணர்வெழுந்தது. இம்மாதிரியான உணர்வு ஒரே ஒரு முறைதான் நடந்தது. அதன் பிறகு நான் கோவில்பட்டி நாடக குழுவிற்குள் இயல்பாக இருக்க முயன்றேன்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகுதான் என்னால் இதனை தெளிவாக சொல்ல முடிகிறது. அந்த நிகழ்விற்கு பிறகு, நான் ஒரு வளர் இளம் பருவ இளைஞனாக என் பாலினம் பற்றி மிகவும் குழப்பமாகவும் சலனமுற்று இருந்தேன். ( இது எவரொருவரையும் பாலுறவு சார்ந்து பாதிக்கச் செய்யவில்லை எனும் போது என்னுள் தன்னிலை சிதைவை ஏற்படுத்தியது). நான் அவ்வாறாக எண்ணங்களில் இருந்து விடுபட்டு இயல்பை அடைய கடுமையாக போராட வேண்டிருந்தது. அதன் பிறகு நாடக ஒத்திகைகள் நடந்தது. நாடகக் குழுவாக பயணித்தோம். நான் மணல்மகுடியின் செயல்பாடுகளால் களிப்புடனும், பூபதியின் அரசியல் மற்றும் நாடகத்தை முழுமையாக இன்றளவும் நம்புகிறேன்.
2017ல், நாங்கள் திருச்சூரில் நாடகம் நிகழ்த்தச் சென்றோம். நாடக நிகழ்விற்கு சற்றுமுன் தேனீர் கடையின் முன் நாடகக் கலைஞர்கள் எங்களுக்குள் விளையாட்டாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு சக நடிகன் மற்றொருவனைப் பார்த்து ‘ கோணங்கி கூப்புடுவாரு போ’ என்றான். நான் அதை கேட்ட போது முகம் சிவந்தது. உடனடியாக மற்றவர்கள் நான் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதை கணித்திருந்ததை நான் அறிந்தேன். “எவ்வாறு இவ்வாறான பாலியல் சீண்டல்கள் நடப்பதை நிகழ்வதற்கு அனுமதிக்கிறீர்கள்” என மூத்த நடிகர்களிடம்என கோபப்பட்டு “யாராவது தற்கொலை செய்திருந்தால் என்னவாகியிருக்கும்” என்று கேட்டேன். அவர்கள் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர். நான் இந்த பாலியல் தொந்தரவு குறித்து முருகபூபதியிடம் பேசுவதற்கு கோவில் பட்டி செல்ல முடிவெடுத்தேன்.
நான் ஊரிற்கு திரும்பியவுடன் மணல்மகுடி நண்பர்கள் முகேஷிடமும் தீபாவிடமும் எனக்கு நடந்தது போலவே குழுவில் பலருக்கு நடந்திருக்கிறது என சொன்னேன். மறுநாள் நான் கோவில்பட்டியில் முருகபூபதியிடம் பேசினேன். அவர், “தனக்கு இது பற்றி முன்னர் தெரியாது. இந்த பிரச்சணையை சரி செய்யாமல் வேறு வேலையில்லை எனக்கு” என்றார். முகேஷ் , குழு மேலாளர் பூபாலிடம் எனக்கு நடந்ததை போனில் சொன்னார். பூபால், கோணங்கியிடம் இது மறுபடியும் நடக்க கூடாது என்று அறிவுறுத்தினார். நான் சென்னைக்கு திரும்பினேன். நானும் பூபாலிடம் பேசினேன் அவரும் திரும்ப நடக்காது என உறுதியளித்தார். நான் குழுவிற்கு தவறு இழைத்தவிட்டதாக கருதி குற்றவுணர்வால் குழுவிலிருந்தி விலகிக் கொண்டேன். இது நடந்து சில வருடங்களுக்கு பிறகு தான் நாடகக்குழு பற்றி உரக்க பேச முடிகிறது ஏனென்றால் அது எங்களைப் போன்றோராலும் பூபதியாலும் உருவானது.
கலைஞன் எப்போது அலைந்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் சராசரி வாழ்க்கை ஒத்துவராது என்றனர். மணல்மகுடியும் மற்ற நாடகக் குழுக்களும் தங்களை புனிதப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கலை மற்றும் கலைஞன் இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்று கலைஞனை பரிதாபநிலையிலேயே வைத்திருக்கிறார்கள். “எல்லாம் வலியாக தான் இருக்கிறது, நாம் எல்லாவற்றையும் கலையாக பார்க்க வேண்டும், நாம் சராசரி வாழ்வில் இருத்தலாகாது” என்றது. வான்கா ஒரு பெண்ணிற்கு காதை அறுத்து தந்தது போல நாம் கலைக்கு எதனை அறுத்துத் தருவது? அவர்கள் எங்களை திவீர கலையின் பெயரால் சுரண்டினார்கள். அவர்களிடம் சீனீயர், ஜூனியர், சார்புடைமையால் யார் கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும், யார் சில்லரை வேலைகளை பார்க்க வேண்டும் என வெவ்வேறு ஏற்றதாழ்வுகள் இருந்தன. இங்கு கலை என்பது வெறும் கலை அல்லாமல் மிக கேவலமான அரசியல் இருக்கிறது.
மொத்த இயக்கத்திலிருந்தும் நான் என்னை துண்டித்துக் கொண்டேன். அந்த இடமும் அச்சம் மற்றும் புரளிகளால் தனிநபர் உறவில் விரும்பத்தகாத அடையாளங்களை விளைவிப்பதாக இருந்தது. யாரும் மகிழ்ச்சியாக கலை செய்வது பற்றி அங்கே பேசவில்லை. குடும்பத்துடன் என் உறவு இணக்கமாக இருந்த போதிலும் குடும்பத்தின் மீது விலகல் ஏற்படுத்தும் வண்ணம் குழு தூண்டியது, பணம் சம்பாரிப்பது இயல்பாக இருந்த போதிலும் அதனை தவறென்றது. விட்டேத்தியான மனநிலையை விதைத்து எதன் மீது நம்பிக்கை கொள்ள இயலாமல் ஆனது. அவர்களில் இலக்கிற்காக நாங்கள் பயன்படுத்தப்பட்டோம். கலைஞனாக ஒரு பைசா இல்லை எனும் போதும் ‘எவரும் எதனையும் அறிந்திருக்கவில்லை கலைஞனே மேலானவன்’ என்ற மமதையுடன் இருந்தோம். எனக்கு நன்றாக நினைவில் உள்ளது ஒரு முறை கோணங்கி ‘தரித்திரத்தில் தான் கலை இருக்கிறது’ என்றார். அதனை முழுவதுமாக நம்பியதான் சில வருடங்கள் தரித்திரியம் தொடர்ந்தது.
இவர்கள் எந்த மனிதனையும் கணக்கில் கொள்வதில்லை. கலையை விட மனிதனே மிகவும் முக்கியமானவன் என நான் நம்புகிறேன். நான் வலுக்கட்டாயமாகஎன்னை மன்னித்துக் கொண்டும் எனக்கு நடந்த பாலியல் கொடுமைகளையும் அதிகார சக்திகளால் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் உணர்வுரீதியாக நடந்தவற்றையும் மன்னித்தே அமைதியாக மனநிலையை அடைந்தேன். இதனை சொல்ல இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
நான் இப்போது எழுதும் போது இதனை கடந்துவிட்டேன். நான் பாதிக்கப்பட்டவன் எனும் பரிதாபத்திற்குரிய பாத்திரத்தை கோருவதற்கு எவருக்கும் இடமளிக்கவுமில்லை. நான் என் மணல்மகுடி நண்பர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆரோக்கியமான சூழல் உருவாகவேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமல்ல கோணங்கியும் இதிலிருந்து மீண்டெழ வேண்டும். அதை நோக்கி செல்லவதையே நான் விரும்புகிறேன்.
பொறுப்பான ஊடக நேர்காணல்.
Karthick Ramachandran
தனக்கு நடந்த பாலியல் சீண்டல் பற்றி விரிவான மற்றும் ஒரு பதிவு. இம்முறை பதிவிட்டவர் கோணங்கியின் இளம் வாசகர்.
Maddy Madhs
மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு நான் முதல் முதலாக நாடகம் பார்க்க சென்றேன். முருகபூபதி அவர்களின் இயக்கத்தில் இரண்டு நாடகங்களை நான் மதுரையில் பார்த்திருந்தேன் என்பதால், கோவில்பட்டியில் சென்று நாடகம் பார்க்க நண்பர்கள் கூப்பிட்ட போது உடனே ஒப்புக்கொண்டேன். ‘இடாகினி’ நான் மணல்மகுடி நாடக நிலத்தில் பார்த்த முதல் நாடகம். என்னோடு பயணித்து நாடகம் பார்த்த நண்பர்களில் இருவர், (கல்லூரி ஜூனியர்கள்) முன்னமே மணல்மகுடிக்கும் கோணங்கிக்கும் பரிட்சயமானவர்கள். அவர்களில் ஒருவர் நாடகத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்தும் இருந்தார். அதுவும் நான் மணல்மகுடி செல்ல காரணமாய் அமைந்தது.
நாடகம் முடிந்ததும், இங்கு கோணங்கி என ஒரு post-modern எழுத்தாளர் இருப்பதாகவும், அவர் முருகபூபதி அவர்களின் அண்ணன் எனவும் நண்பர்கள் சொல்ல கேட்டு கோணங்கியை முதல்முதலாக மாடியில் இருந்த ஓர் அறையில் பார்த்தேன். தாடியோடும், கண்ணாடியோடும், கையில் மதுக்கோப்பை வைத்துக்கொண்டு ஒரு கவிஞரோடு சேர்ந்து மது குடித்துகொண்டிருந்தார். அந்த கவிஞரை முன்னமே என் நண்பர்கள் எனக்கு அறிமுகம் செய்திருந்தனர். மிகுந்த மரியாதையோடு என்னை நான் கோணங்கியிடம் அறிமுகம் செய்து கொண்டேன்.
முனைவர் பட்ட ஆராய்சி மாணவன் என தெரிந்ததும், ‘டைப் பண்ண தெரியுமாடா ஒனக்கு’ என கேட்டார். ‘தெரியும் அய்யா’ என்றேன். ‘தமிழில் டைப் பண்ணுவியா?’ என்றார். நானும் ‘பண்ணுவேன் அய்யா’ என்றேன். "உன்னத்தான் தேடிட்டு இருந்தேன், எனக்கு டைப் பண்ண கஸ்டமா இருக்கு. கொஞ்சம் உதவி பண்ணு" என்றார். பின் வீடு எங்கே என்றும் கேட்டார். நீயும் கொஞ்சம் மது குடி, இங்கேயே தங்கிவிட்டு போ என்றார். மது பழக்கம் இல்லை என்றும் எத்தனை மணி ஆனாலும் வீடு திரும்ப வேண்டும் என்றும் செல்லிவிட்டு விடை பெற்றேன். என் போன் நம்பரை சுவற்றில் எழுதி வைத்துவிட்டு போக சொன்னார். நான் ஏதோ அவசரத்தில் அதை செய்யவில்லை.
அன்றைய இரவு நான் மிகுந்த சந்தோசத்தில் வீடு திரும்பினேன். பெரும் எழுத்தாளர் ஒருவரோடு பழக்கம் கிடைத்துவிட்டது. நல்லபடியாய் நமக்கு தமிழில் டைப் செய்ய தெரியும். கோணங்கிக்கு உதவியாய் அவ்வப்போது கோவில்பட்டி போய்வரலாம். வாய்ப்பு கிடைக்கும் போது மணல்மகுடியின் நாடக செயல்பாட்டிலும் பங்கெடுக்கலாம் என ஆசைப்பட்டேன். நான் மதுரையில் இலக்கிய கூட்டங்களில் பார்த்த பலரும் மணல்மகுடியில் இருந்ததால், கோணங்கியின் நட்பும் மணல்மகுடியும் என்னை தீவிர இலக்கிய செயல்பாட்டை நோக்கி வழிநடத்தும் என நம்பினேன். மதுரை வரும் பேருந்தில் நாடக நடிகர் ஒருவரும் சேர்ந்து வந்தார். அவரிடம் நாடகம் குறித்து பேசிக்கொண்டே வந்தேன்.
பின் ஒருநாள், ஒருவர் (கோணங்கி குறித்த பதிவுகளில் தன்னை குறிப்பிட வேண்டாம் என அவர் சொன்னதன் காரணமாய் அவர் அடையாளத்தை பதிவிடவில்லை) தான் கோணங்கியோடு தங்கி இருந்த போது, கோணங்கி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதற்காய் கோணங்கி மீது அவர் கோபம் கொண்டதாகவும், பின் கோணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் சொன்னார். அதை நான் பெரிதாய் அப்போது நம்பவில்லை.
கிட்டதட்ட ஓராண்டுக்கு முன், கோணங்கி பழங்காநத்தம் பாலத்தின் அடியில் ஒரு நண்பர் வீட்டில் இருப்பதாகவும், அவரை சந்திக்க தான் போகவிருப்பதாகவும் நண்பர்கள் (நாடகம் பார்க்க கோவில்பட்டி கூட்டி போன அதே நண்பர்கள்) கூறினர். அதை கேட்டு நானும் உடன் வருவதாய் சொன்னேன். காலையில் போய் பார்ப்போம் என அவர்கள் சொன்னார்கள். காலை சீக்கிரமே கோணங்கி கோவில்பட்டி புறப்படுகிறார் என சொல்லக்கேட்டு, தூங்கி எழுந்து குளிக்காமலும் சாப்பிடாமலும் கோணங்கியை பார்க்க சென்றேன்.
நாங்கள் போன போது அவர் புறப்பட்டு வாசல் வரை வந்துவிட்டார். என்னை அவருக்கு யார் என்றே அடையாளம் தெரியவில்லை. அதற்காய் நான் வருந்திய போதும், இத்தனை பெரிய எழுத்தாளர் என்னை ஏன் நியாபகம் வைத்துகொள்ள வேண்டும் என விட்டுவிட்டேன். இருந்தும் நான் அவரை கோவில்பட்டியில் சந்தித்ததையும், டைப் செய்யத்தெரியும் என சொல்லியதையும் நினைவுபடுத்தினேன். அவருக்கு என்னை நியாபகம் இல்லை. இருந்தும் என்னை பாராட்டிவிட்டு, என்னை பற்றி கேட்டுவிட்டு, என் போன் நம்பரை வாங்கிகொண்டு அவர் நம்பரையும் கொடுத்தார். தனக்கு டைப் செய்ய உதவி தேவைப்படும்போது கூப்பிடுவேன், நீ அவசியம் வரவேண்டும் என்றார்.
நானும் நண்பர்களும் டூவீலரில் சென்றிருந்ததால், கோணங்கி, அவரையும் அவர் நண்பர்களையும் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் வரை கூட்டிபோகச்சொன்னார். நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, கோணங்கி என் வண்டியில் என்னோடு வருவார் என்று. நான் பெருமை பட்டுகொண்டேன்.
பாலத்தின் கீழ் அண்டர் கிரவுண்டில் இறங்கிய போது கோணங்கியின் கை என் அடிவயிறை சுற்றி பிடிப்பதுபோல் ஆண்குறியில் பட்டது. அது எதார்த்தமாக நிகழ்வதாய் நினைத்தேன். மேலும் எனது PhD ஆராய்ச்சி குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அந்த கைகள் அதோடு நிற்க வில்லை. அக்கைகள் என்னை இம்சித்தது. அந்த ஒருவனை அப்போது நினைத்துகொண்டேன். அவன் சொன்னதை நம்பினேன். முதல் பேருந்து நிறுத்தத்தில், எங்களுக்கு முன்னே சென்றவர்கள் ஏன் நிறுத்தாமல் போகிறார்கள் என கோபம் கொண்டேன். அந்த கைகள் இம்சித்துகொண்டே இருந்தது. சரவணா ஸ்டோர் எதிரில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அவரை இறக்கிவிட்டு தள்ளி நின்று பேசினேன். என் ஆராய்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதோ ஒரு பேராசிரியரை தெரியும் என்றும், அவரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் கூறினார். அவை எதுவும் என் காதுகளுக்கு எட்டவில்லை. இத்தனை பெரிய எழுத்தாளர் ஏன் இத்தனை கீழ்த்தரமாக நடந்துகொள்ள வேண்டும் என்னும் கேள்வி மட்டுமே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அதன் பின் இரண்டு முறை கோணங்கியை நேரில் பார்த்து பேசினேன். இரண்டு முறையும் அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. இரண்டாம் முறையாக காந்தி மியூசியத்தில், இரவு 12மணிவரை கோணங்கியோடு அமர்ந்து கதக் நடனம் பார்த்தேன். கதக் நடனத்திற்கு அவர் கொடுத்த விமர்சனத்தை, தமிழ் தெரியாத வட மாநில நடன கலைஞர்களுக்கு மொழிபெயர்த்தும் சொன்னேன். இருந்தும் அந்த இரவில் அவரை ‘எங்கும் இறக்கிவிட வேண்டுமா’ என கேட்க தோன்றவே இல்லை. எங்கே அவர் கண்களில் பட நான் வண்டியை எடுத்து புறப்படுவதை பார்த்தால், எங்கேனும் இறக்கிவிட சொல்லுவாரோ என அஞ்சி அவருக்கு தெரியாமல் வண்டியை எடுத்து போகவேண்டும் என நிணைத்தேன். ஆனால் அவர் அப்போது என் பக்கம் திரும்பவே இல்லை. நான் நிம்மதியாக சென்றேன்.
இதனை எழுதி பதிவிடவேண்டும் என்ற எண்ணம் இன்று காலை வரை எனக்கு இல்லை. கோணங்கி விகடனுக்கு கொடுத்த பேட்டியை படித்தபோதும் இதை எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. தொடர்ந்து நான் மதிக்கும் பலரும் (குறிப்பாக எனது கல்லூரி பேராசிரியர்) கோணங்கிக்கு ஆதரவு கரம் நீட்டுகையில் இதனை எழுதியே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன். அந்த ஒருவர் சொன்னதை நம்பாமல் நேரடியாய் பாதிக்கப்பட்டு அதன்பின் நம்பவேண்டிய அவசியம் எனக்கு வந்ததுபோல் அவர்களுக்கும் வரலாம். அப்போதும் இவர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்களா?
முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்தபோது, தமிழ் சிறுகதைகளை சொல்லி இலக்கிய ஆர்வத்தை எனக்குள் இன்னும் அதிகமாக்கிய அந்த தமிழ் பேராசிரியரை இன்றளவும் நான் மதிக்கிறேன். மதிப்பிற்குறிய பேராசிரியர் அவர்களே, ஊரில் இருப்பவர்கள் கோணங்கி மீது பாலியல் குற்றம் சொல்ல அரசியல் காரணம் இருப்பதாகவும், இலக்கிய காழ்ப்பு இருப்பதாகவும் வைத்துகொள்ளுவோம். எனக்கு அப்படி என்ன காரணம் இருக்கிறது கோணங்கி மீது பாலியல் குற்றம் சொல்ல. உங்களால் மணல்மகுடிக்கும், கோணங்கிக்கும் அறிமுகமான மாணவர்கள் தான் என்னை கோணங்கிக்கு அறிமுக படுத்தினர். குற்றசாட்டு குறித்து அவர்களையும் கேளுங்கள், ஒருவேளை அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
உங்கள் கோணங்கி இலக்கிய ஆளுமையாகவே இருக்கட்டும். எங்களுக்கான கோணங்கி அச்சத்தின், அதிர்ச்சியின் அடையாளம். தயவு செய்து உங்கள் விசுவாசத்தை காட்ட எங்களை கொச்சை படுத்தாதீர்.
கோணங்கி அவர்களே, நான் உங்கள் மார்பில் முட்டவரும் நீங்கள் வளர்த்த காளையும் அல்ல, நன்றியோடு வால் ஆட்ட உங்கள் வீட்டு நாய் குட்டியும் அல்ல. உங்கள் நினைவில்கூட இல்லாமல் உங்களால் பாலியல் சுரண்டலுக்கு மட்டுமே ஆளான சராசரி மனிதன்.
பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், பாதிக்கப்பட்டோர் பக்கம் தொடர்ந்து நிற்பேன்.