இன்னும் சில வாரங்கள் கழித்து வரவிருக்கிற பாத்திரம், ஆபீஸ் நாவலுக்கு ஆண்டு சந்தா கட்டியிருக்கிறது
***
நான் மோகன் பேசறேன்.
தெரியறது. பேரோட சேவ்பண்ணியிருக்கேனே.
எப்படி இருக்கே. உட்ம்புக்கு ஒண்ணும் இல்லையே.
எனக்கென்ன நல்லாதான் இருக்கேன்.
ரெண்டு வாரமா வாட்ஸப்ல ஒண்ணும் வரலையே என்னாச்சுனுதான் பண்ணினேன்.
அதான் வாராவாரம் ஆபீஸ் நாவலை எழுதிக்கிட்டு இருக்கமே, இன்னும் என்னன்னுதான் சும்மா இருக்கேன்.
அதை, புக்கா வந்ததும் மொத்தமா படிக்கலம்னு இருக்கேன்.
நாவல் இப்பதான் ஈரோடுக்கே போயிருக்கு. இதுக்கே 40 வாரத்துக்கு மேல ஆகிடுச்சு. ஃபிஃப்த் டிவிஷனுக்கு வரவே இன்னும் டைம் ஆகுமே.
அங்கெல்லாம் வேற போய்ட்டு வந்தியா. நீ சேந்ததே ஃபிஃப்த் டிவிஷன்லதான்னு இல்லே நெனச்சுக்கிட்டு இருக்கேன். கோல்டன் பீரியட்ரா அது. என் கேரியர்லையே அந்த மூணு நாலு வருஷம் மாதிரி வராதுனு என் ஒய்ஃகிட்ட சொல்லிக்கிட்டு இருப்பேன்.
பத்துவருஷம் கழிச்சுத் திரும்ப ஃபிஃப்த் டிவிஷன் வந்தேன். ஷெல்லி கூட 94 - 97 மாதிரி வராது இவனேன்னு சொல்லிக்கிட்டு இருப்பான். அவனும் ரெண்டு மூணு வாரம் சேத்து வெச்சுதான் படிச்சுக்கிட்டு இருக்கான்.
யாரு ஷெல்லி...
தாம்பரத்துலகூட இருந்தானே கணபதி சுப்ரமணியம் கிட்ட... ஒசரமா இருப்பானே...
அவனா ரைட் ரைட். இப்ப ஞாபகம் வரது.
ராமகிருஷ்ணன் கூட படிக்கிறான்.
அசோசியேஷன்ல கூட இருந்தானே... நல்ல பையண்டா எப்பிட்ரா இருக்கான். என்கூட இருந்தாண்டா. அவன் நம்பர் இருந்தா குடு.
அவனேதான். பான்டிச்சேரில இருக்கான். அவன் கூடவே - நீங்க இருந்தப்ப நைந்த் / டெந்த் ப்ரிவெண்ட்டிவ்ல இருந்தானே முரளி. அவன் கூட படிக்கிறான்.
ராமகிருஷ்ணன் அப்பையே புக்கு படிப்பான். முரளியும் படிக்கிறாங்கறது ஆச்சரியமா இருக்கு. பின்னாடி படிக்க ஆரம்பிச்சிருப்பானயிருக்கும்.
நம்ம திலீப்பு ரெகுலர். ரொம்ப இலக்கியமா போகும்போது ஆபீஸ்காரங்களுக்குக் கொஞ்சம் போரடிக்கலாம். ஆனா போகப்போக, எழுத்து இலக்கியம் எல்லாம் போய், வெறும் ஆபீஸாவே போக ஆரம்பிச்சிடும். இலக்கியம் படிக்கிறவங்களுக்கு அப்பதான், ஒரு ஆபீஸ்குள்ள இவ்வளவு இருக்கா, ஆபீஸை வெச்சு இப்படில்லாம் கூட எழுதமுடியுமானு தோண ஆரம்பிக்கும். அதுக்கே ரொம்ப நாள் ஆகிடும்.
ஆமா. என்னடா இப்பால்லாம் எழுதறதில்லையானு அப்பப்ப கேக்கறப்ப அதெல்லாம் முடிஞ்சிடுச்சினு சொல்லியிருக்கியே. நிஜமாவே நீ திரும்ப எழுத ஆரம்பிச்சிருக்கறதுல எனக்கு ரொமப சந்தோஷம்.
2010லேந்து எழுதறேனே. அதெல்லாம் கிண்டில்ல 70+ புக்ஸா இருக்கே. நாவல் இப்பத்தான் எழுதறேன். நாவல்ல அது எந்த ஆபீஸ்னு இருக்காது. மெய்ன் கேரெக்டருக்கும் பேர் இருக்காது. ஆனா இருந்த அத்தனை ஆபீஸ்கள் அத்தனையும் இன் அண்ட் அவ்ட்டா வந்துடும்.
இப்படி இன் டெப்த்தா ஆபீஸை வெச்சு இவ்ளோ பெருசா யாரும் எழுதியிருக்காங்களானு தெரியல.
அதான் சொல்றேன். புக்கா வரட்டும் படிக்கலாம், புக்கா வரட்டும் படிக்கலாம்னு இருந்தா இது என்னைக்கு புக்கா வரது அதை என்னைக்கு மொத்தமா படிக்கிறது.
ஹஹ்ஹஹ்ஹா இப்பல்லாம் சினிமாவே பார்ட் பார்ட்டாதான் வருது. எழுத எழுத பாகம் ஒண்ணு பாகம் ரெண்டுனு விடவேண்டியதுதானே.
அப்படித்தான் ஆரம்பத்துல நானும் நெனச்சேன். ஆனா பா. ராகவன்தான் அந்தத் தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க. நாவல் 5, 10 பாகம் வர அளவுக்கு பெருசா இருந்தாலும் பரவாயில்ல. அத்தனை பாகங்களையும் ஒண்ணா ஒரே சமயத்துலதான் வெளியிடணும். அப்பதான் இதோட ரியல் இம்ப்பேக்ட் தெரியும்னு சொல்லிட்டாரு.
அதுவும் கரெக்டுதான். அவ்ளோ நாள் ஆகுமா. ஆனா, எனக்கு இப்படி வாராவாரம் படிக்கமுடியாதே.
அபீஸ்காரங்கள்ளையே நிறையபேரு அஞ்சு பத்து அத்தியாயங்களை சேத்து சேத்துதான் படிக்கிறாங்க. ஆண்டு சந்தா 400 ரூபா கட்டினா எல்லாத்தையும் வசதிக்கேத்தா மாதிரி எப்ப வேணா படிச்சுக்கலாமே.
ஃப்ரீயா குடுத்த ஒண்ணு ரெண்டு படிச்சேன் ரொம்ப நல்லா இருந்துது. அப்ப ஒண்ணு செய்யறேன். இப்பையே சந்தா கட்டிடறேன். லிங்க்க மட்டும் அனுப்பு.