28 June 2023

உலகச் சிறுகதைகள் 20 - காப்ரியே கார்சியா மார்க்கேஸ்

''இது ஒரு கற்பனையின் சிறகடிப்பு'' என்றார் அவர்.

கூட்டத்திற்கிடையே பால்தசாரைத் தேடினார்தனது தாய்மை நிறைந்த விழிகளை அவன் மீது பதித்தவாறே, "நீ ஒரு அசாதாரணமான கட்டிடக் கலைஞனாய் இருந்திருப்பாய்" என்றார்

பால்தசார் நாணத்தில் சிவந்தான்

''நன்றி'' என்று கூறினான் அவன்

''இது உண்மை '' என்றார் டாக்டர்தனது இளமையில் மிக அழகாயிருந்த ஒரு பெண்ணைப்போல் அவர் மிருதுவாகவும்மென்மையாகவும் பருத்திருந்தார்மென்மையான கைகளைக் கொண்டிருந்தார். 

***

எந்தக் கதையிலும் கதை மட்டுமே கதையன்று. கதை சொல்லப்பட்டிருக்கும் விதமும் கதைக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களுமே அதன் தரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. 

எழுதத் தெரியாதவர்கள் எழுதுகிற கதைகளில், கதைக்குள் கதையைத் தவிர, அதை உயிர்ப்போடு கட்டி எழுப்பி நிறுத்துவதற்கான 'எதுவுமே' இருக்காது. சினிமாக்காரனை சுண்டி இழுப்பதற்கு ஒன்லைன் போதுமே என்பதைப்போல. முற்போக்கு லேபிளுடன் வருகிற பெரும்பான்மையில் சொல்லப்பட்டிருப்பவை ஒன்றோடொன்று ஒத்திசையாது கருத்து தத்துவார்த்த ஜிகினா தோரணங்களாகத் தொங்கிக்கொண்டிருக்கும். அரைகுறைப் போலி எழுத்துக்களில் அசடுகள் மேற்கோள் இட்டுக்கொள்ள வசதியாய் போலியான அசட்டு வாழ்க்கைத் தத்துவங்கள் ஆங்காங்கே தெளித்து வைக்கப்பட்டிருக்கும்.  

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் - பால்தசாரின் அற்புதப் பிற்பகல் நேரம்