22 October 2023

பயமுறுத்தும் பாத்திரம்

நேற்று பேஸ்புக்கில் இதைப் பாக்க நேர்ந்தது. அப்படியே ஸ்கிரீன்ஷாட் மட்டும் எடுத்துக்கொண்டேன். வீடியீவைப் பார்க்கவேயில்லை. 

41 வருடங்கள் முன் நடந்த சம்பவம் நிழலாடியது. கூடவே, கீழ்க்காணும் வரிகளில் காவி குறுநாவலில் (விளக்கும் வெளிச்சமும் தொகுப்பு) அது இடம்பெற்றிருப்பதும் நினைவுக்கு வந்தது. 

***

சினிமாவில் நடிக்கிற வெறியில் வெளி மாநிலத்திலிருந்து வந்து எல்லாவற்றையும் இழந்து, இனி பிச்சைக்காரன் வேடத்தில் மட்டுமே நடிக்கமுடியும் என்கிற அளவிற்கு நாசமாகிப்போன தெரிந்தவன் ஒருவனை சில நாட்களுக்குமுன் தற்செயலாகத் தெருவில் சந்தித்தான்.

என்ன நான் கேல்விப்பட்டது...


ஆமா.


நிஜமாவே சாமியாராகப் போகப் போறீங்களா.


ஆமா.


இனிமேல் உங்க ஜிப்பா ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் உங்குளுக்கு யூஸாகாது இல்லையா. எனக்குக் குடுத்துடுங்கலேன்


அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவனுக்கு ஒரு டீ பிஸ்கேட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்