ஒருவாரமாகவே என் Mac Adapter படுத்திக்கொண்டுதானிருந்தது. அதற்காக அதைக் கோபித்துக்கொள்வதும் நியாயமில்லை. 2018 ஜனவரியில் வாங்கியது 2023 டிசம்பர் வரை ஓடாய் உழைத்திருக்கிறது. அதுவும் 'கசடறதபற'வை வேர்டுக்கு கன்வர்ட் பண்ண ஆரம்பித்ததில் இருந்தே 24 மணிநேரமும் ஆனிலேயே இருந்துகொண்டு இருக்கிறது.