ஆபீஸ் 82 தெளிவு படிச்சியே இந்த வார புனைவு என்னும் புதிர் படிச்சியா. ரொம்பச் சின்னதாச்சே
நேத்தே குடுத்தேனே
எங்க குடுத்தே. காட்டி வங்கிக்கிட்டே
இந்தா
PODங்கறதால புக்க முழுசா விரிக்காம இப்பிடியே படிக்கணும் இல்லையா
அதெல்லாம் ஒண்ணுமில்லே. தெச்சி பைண்ட் பண்ணின புக்காட்டமே நல்லா பிரிச்சிப் டிக்கலாம் பாரு
- எ ஃப்யூ மொமெண்ட்ஸ் லேட்டர் -
ஒண்ணுமே புரியல
நீ எதைப் படிச்சே
கடைசீல இருக்குனு நீ சொன்னதைத்தான்
உலகச் சிறுகதைகள் 2ல கடைசீ கதையா
ஆமா. இரு இரு. நாந்தான் தப்பு பண்ணிட்டேன். கடசீன்னதைக் காதுல வாங்கிக்கிட்டு கடைசீல இருக்கற கட்டுரைய படிச்சிட்டேன்
இப்படித்தான் இண்ட்டர்நெட்ல எல்லாரும் பண்றான். நான் என்ன மத்தவன்களை மாதிரி கட்டுரைனு கதைச் சுருக்கத்தையா எழுதிவெச்சிருக்கேன் - எடுத்ததும் அதைப் படிக்க