//சென்ற வாரம் ஒரு நாள் அப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போகையில் ஒரு மூடிய கடையின் (நாயுடு ஹால்) முன்னே உள்ள திட்டில் ஒரு மத்திய வயதுப் பெண்மணி நான் வரும் திசைக்கு முகம் காட்டியபடி அமர்ந்திருந்தார். சும்மா இருக்கவில்லை.தன் எதிரே உள்ள குழந்தைக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.. பின் பல விதமான சைகைகளினாலும் வார்த்தைகளினாலும் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே இருந்தார்.நான் அதைக் கவனித்தபடிய அவறருக்கே வந்து,அவரைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். அவரும் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே தனது செய்கைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.