19 June 2024

டுபாகூர் ரைட்டிங்

//சென்ற வாரம் ஒரு நாள் அப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போகையில் ஒரு மூடிய கடையின் (நாயுடு ஹால்) முன்னே உள்ள திட்டில் ஒரு மத்திய வயதுப் பெண்மணி நான் வரும் திசைக்கு முகம் காட்டியபடி அமர்ந்திருந்தார். சும்மா இருக்கவில்லை.தன்  எதிரே உள்ள குழந்தைக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.. பின் பல விதமான சைகைகளினாலும் வார்த்தைகளினாலும்  குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே இருந்தார்.நான் அதைக் கவனித்தபடிய அவறருக்கே வந்து,அவரைக்   கடந்து சென்று  கொண்டிருந்தேன். அவரும் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே தனது  செய்கைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.


அவரது அவ்வளவு கொஞ்சல்களையம்வாங்கிக்கொண்டிருந்த அந்த அழகான  குழந்தையைப்  பார்க்கும் ஆவலில்,  நடையின் வேகதத்தை சற்றே குறைத்து லேசாக பின்னால் திரும்பிப் பார்த்தேன்.அந்தப் பெண்ணின் முன்னே குழந்தை எதுவுமே இல்லை. ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சற்று திகைத்துப்போய் ஒரு கணம் நின்று விட்டேன்.அப்படியானால் அவ்வளவு நேரம் அவர் திருஷ்டியெல்லாம்  கழித்து கொஞ்சிக் கொண்டிருந்தது..என்ற கேள்வி எழமீண்டும் ஒரு முறை நன்றாகவே அவரையும் அந்தக் கண்ணாடியையும் பார்த்தேன். கொஞ்சம் வெறித்தே பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன் . நான் நின்று நன்றாகத் திரும்பிப் பார்த்த அதே சமயத்தில் அவரும் என்னை திரும்பிப் பார்த்தார். ஒரே ஒரு கணம்தான்.அந்த பார்வையின் கூர்மையையும்அதிலிருந்த வெறுப்பையும் சீற்றத்தையும்  கண்டு என் முதுகுத்தண்டு சிலிர்த்து விட்டது.ஒரு உதறலுடன் நடையின் வேகத்தைக் கூட்டி சென்று விட்டேன்,திரும்பி பார்க்காமல்.//

 

இந்தப் பகுதிக்கு முன்னாலும் பின்னாலும் இரண்டு மூன்று நெஞ்சு நக்கும் பத்திகள் முத்தாய்ப்பாக எதிர்சாரியில் அதே பெண் அதே கண்னாடியுடன். 

 

ஏன் இது டுபாகூர் ரைட்டிங்

 

இப்படி வரவேண்டும் என்று முன்னால் தீர்மானித்துக்கொள்வதில்கூடப் பெரிய தவறில்லை. கூருள்ளவன் அதை முறையாகக் கொண்டு செலுத்திவிடுவான். 

 

//ஒரு மூடிய கடையின் (நாயுடு ஹால்) முன்னே உள்ள திட்டில் ஒரு மத்திய வயதுப் பெண்மணி நான் வரும் திசைக்கு முகம் காட்டியபடி அமர்ந்திருந்தார்.// 

 

நாயுடு ஹால் படிக்கட்டில் அமர்ந்திருப்பதால் எதிரில் நடைபாதைஅங்கே மறைப்பு எதுவுமில்லை என்பது சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. எழுதியவர் வரும் திசைக்கு முகம் காட்டி அந்தப் பெண்மணி அமர்ந்திருக்கிறார் என்று எழுதி இருப்பதால் அந்தப் பெண்ணின் எதிரில் குழந்தை இல்லாததும் கண்ணாடி இருப்பதும் எழுதியவருக்குப் பாவம் கொஞ்சம் பார்வைக்கோளாறு என்றாலும்கூட தூரத்தில் இருந்து குழந்தை தெரியாமல் போனாலும் அருகில் வரும்போதாவது தெரிந்திருக்காதா. அடுத்த பாராவில்தான் தெரியுமா. 

 

//நான் அதைக் கவனித்தபடிய அவறருக்கே வந்து,அவரைக்   கடந்து சென்று  கொண்டிருந்தேன்.// 

 

'கவனித்தபடியே' 'அவரருகே வந்து' 'அவரைக் கடந்துஎன்று எவ்வளவு கமிட் பண்ணிக்கொள்கிறார் பாருங்கள். இருந்தும் தெரியவில்லை. இதெல்லாம் பில்ட் அப். பின்னல் எதாவது பெருசா இருக்கும் என்கிறீர்களா.


அதைவிடப் பெரிய காமெடி இது. 

 

//அவரது அவ்வளவு கொஞ்சல்களையம்வாங்கிக்கொண்டிருந்த அந்த அழகான  குழந்தையைப்  பார்க்கும் ஆவலில்,  நடையின் வேகதத்தை சற்றே குறைத்து லேசாக பின்னால் திரும்பிப் பார்த்தேன்.அந்தப் பெண்ணின் முன்னே குழந்தை எதுவுமே இல்லை. ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.// 

 

அருகில் சென்று கடந்தபோதே தெரியாதது தூரத்தில் போய்த் திரும்பிப் பார்த்தபோதுதான் தெரிகிறதாம் எதிரில் குழந்தை இல்லைஇருந்தது கண்ணாடி மட்டுமே என்று. 

 

மிஸ்டிகலாக எழுதுகிறேன் பேர்வழி என்று இவ்வளவு அபத்தமாகவா எழுதுவது. குமுதம் விகடனில் கூட இதையெல்லாம் போடமாட்டார்கள். பேஸ்புக் என்பதால் பிரசுரித்துக்கொள்ளமுடிகிறது.


எழுதியவர்தான் சுவாரசியத்துக்காக அச்சுப்பிச்சென எதையோ ரொப்பி வைத்திருக்கிறார் என்றால் இதைப் படித்துவிட்டு ஆகா குறுங்கதை ஓகோ சிறுகதை என்று கமெண்ட் போட்டிருக்கிற கபோதிகளை என்னவென்று சொல்வது.

இந்த லட்சணத்தில்தான் இருக்கின்றனஇன்றைய எழுத்தும் வாசிப்பும்.

எல்லோரும் எழுத ஆசைப்படலாம். பலர் ஆசை மட்டுமே பட்டுக்கொண்டு இருக்கலாம்.

இந்தக் கொடுமையை முழுவதும் படிக்க 

19.06.2024.