28 July 2024

மொழியைப் பொங்கலாக்குதல்

//வாழ்வைப் புனைவாக்குதல் :

வாழ்க்கையின் அனுபவங்களை நேரடியாக அறிவதைக் காட்டிலும்,புனைவுகள் மூலம் அறிந்து கொள்வது அவற்றை மேலும் சுவாரஸ்யமானதாகவும்,செறிவானதாகவும் மாற்றுகிறது.ஒரு வாசகனின் மனதில்,அவற்றை அப்படி மாறுகையில் நிகழும்,ரசவாதமே அவற்றின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.அது ஒரு X Factor எனலாம்.அப்படி வெற்றிபெற்ற அல்லது தோல்வி அடைந்த புனைவுகளைப் பற்றிய எழுத்துக்களே இவை..

நடந்து கொண்டிருக்கும்,கோவைப் புத்தகக் கண்காட்சியின் ஸ்டால் எண் 18,சிறுவாணி வாசகர் மையத்தின் அரங்கில் கிடைக்கும்..//


மொழி ஒருபக்கம் இருக்க, டைப்பிங்கிலேயே பிரச்சனை.


கமா, ஃபுல் ஸ்டாப்புக்குப் பிறகு ஸ்பேஸ் பாரைத் தட்டி இடைவெளி கொடுக்காத வரி, கண்னை உறுத்தும். டைப்படித்தே சர்வீசைக் கழித்துக்கொண்டிருக்கும் செண்ட்ரல் கவர்ன்மெண்ட் குமாஸ்தாவே இப்படி டைப்படிப்பதை எப்படி ஏற்பது.

தமிழ் டைப்பிங் பிரச்சனையாக இருக்கும்.


கமா முற்றுப்புள்ளி இடைவெளிகளை சரியாகப் பார்த்துத் தட்டச்சுவதில் தமிழென்ன இங்கிலீஷென்ன.


சோறு போடுகிற ஆபீஸ் டைப்பிங்கை இப்படி காமாசோமா என அடிக்கமுடியுமா. தமிழ்தானே என்கிற அலட்சியமின்றி இது வேறென்ன.

20 July 2024

ஜெண்ட்லி ராஜ் சொந்தக் காசில் வைத்துக்கொண்ட சூனியம்


ஜெண்ட்லி ராஜ் என்றாலே பொய் பித்தலாட்டம் மிரட்டல் ஃபோர்ஜரி 420 என்பதற்கான சிறந்த ஆதாரமாக ஜெண்ட்லி ராஜே ஒரு ஆடியோவை வெளியிட்டு சைபர் கிரைமில் மாட்டிக்கொண்டிருக்கிறார். 

18 July 2024

ஜெண்ட்லி ராஜின் வரிகொடா ராஜ்ஜியம்

ஹைகோர்ட் அட்வகேட் ஜெண்ட்லி ராஜ் எழுதியது 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.

 நீதிமன்ற உத்தரவை அடுத்து அதில் கூறியுள்ள வழிகாட்டுதல் படி என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணி தொடரும்

15 July 2024

அதிகார பிலிம் காட்டல்

பொதுவாகவே நம் ஊரில், படித்தவன் புத்திசாலி படிக்காதவன் முட்டாள் என்கிற மூடநம்பிக்கை எல்லோருக்குமே இருக்கிறது. அதிலும் படித்தவன் பெரிய பதவியில் இருந்து வேறு ஓய்வுபெற்றவனாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு பெரிய பதவியில் இருந்தவர் தெரியாமல் சொல்லிவிடுவாரா என்கிற மூடநம்பிக்கை வேறு சேர்ந்துகொள்ளும். 

சொந்தப் புத்தியையோ பொது அறிவையோ பயன்படுத்தி எவருமே யோசிப்பதில்லை. 

IAS ஆவதற்காகத் தேர்வு எழுதி IIS ஆகி Press Information Bureau வில் 34 வருடங்கள் சர்வீஸ் போட்டு அதில் அதிஉயர் பதவியான டைரக்டர் ஜெனரல் வரை போய் இடையில் 5 வருடங்கள் OSD to PMO வாக ஜாய்ண்ட் செகரெட்டரி ரேங்க்கில் இருந்து ஓய்வுபெற்றவர் உண்மையிலேயே எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கவேண்டும். 

எப்படி இருக்கிறார், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளும் கே. முத்து குமார் என்பவர் என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.