18 July 2024

ஜெண்ட்லி ராஜின் வரிகொடா ராஜ்ஜியம்

ஹைகோர்ட் அட்வகேட் ஜெண்ட்லி ராஜ் எழுதியது 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.

 நீதிமன்ற உத்தரவை அடுத்து அதில் கூறியுள்ள வழிகாட்டுதல் படி என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணி தொடரும்

அதற்கு  மாறாக,  அரைகுறையாக  உயர்  நீதிமன்ற உத்தரவை  படித்துவிட்டு  அதை தங்களுக்கு ஏற்றார் போல், திரித்து  பல வினாக்கள் எழுப்பி வருகின்றனர்.

 போலி சங்கத்தின் செயலாளர் மற்றும் அவரது கூட்டாளிகள்  whatsapp பதிவில் ஒன்று  மட்டும்தான் தெரிகிறது.

 அதை அனைவரும் ஆழ்ந்து  நிதானம்ஆக யோசிக்க வேண்டும்.

 மக்களிடையே எந்தவிதமான கலந்தாலோசிப் இல்லாமல் உருவாக்கப்பட்ட போலி சங்கத்திற்கு உயிர் கொடுக்க இவர்கள் பல  லட்சங்களை ( 10  லட்சம் .. இதுவரை)  செலவு செய்து  நம் உரிமைகளை வீழ்த்த  அது நிமித்தம் அதிகாரங்களை   பெற்று விடலாம்  என்ற  எண்ணி நம் மீது   அராஜகத்தையும் அதிகாரத்தையும் செலுத்தி வருகின்றனர்.

வம்படியாக வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து  வசூலிப்பு மையம்  கலெக்ஷன் ஏஜெண்ட்ஸ்  ஆக  எதற்காக செயல்படுகின்றனர்  என்பதை ஆழ்ந்தும் யோசிக்க வேண்டும்.  பராமரிப்பு கட்டணம் என்ன வசதிக்  வாங்குகிறீர்கள் என்ற break up  கேட்டாள் பதில் இல்லை. 

அவர்களுக்கு ஒரே குறிக்கோள்தான் அடுத்தவனை மட்டம் தட்டுவது, அசிங்கமாக பேசி எப்படியாவது பணத்தை உறிஞ்சுவது, போன்ற மட்ட ரக கொள்கைதான், குறிக்கோள் தான்.  

இருக்கிற  சிலர் கொடுக்கிற பணத்தை  தன் இனமான மூத்த வழக்கறிங்களிடம்  கொடுத்து எதிரணி முகாமை  காலி செய்வது தலையாய கோட்பாடு.  இதை நீங்கள் அவர்கள் பதிவில் இருந்தே நன்றாக புரிந்து கொள்ளலாம்.

 மீண்டும் நாம் சொல்வது,  சங்க நிர்வாகிகள்  மற்றும் சிலருடன் ரவுடிசம் செய்ய  உங்கள் வீட்டின் முன் மிரட்டினால் நீங்கள் கேட்க வேண்டியது நீ விற்பனை பத்திரம் வாங்கிய வீட்டு உரிமையாளரா உனக்கு ஏன் நான்  பணம் கட்ட வேண்டும்?  அப்படியே நான்  கட்டினாலும் என் பணத்திற்கு என்ன பாதுகாப்பு.?  பின்பு காவல் நிலையத்தை  கண்ட்ரோல் ரூம் 100    தொடர்பு கொண்டு தயங்காது எங்களையும் அழைக்க  அன்புடன் அழைக்கின்றோம். எல்லோரும் இணைந்தால்தான் மூக்கணாம் கயிறு கெட்ட இயலும்.

 *** 

//நீதிமன்ற உத்தரவை அடுத்து அதில் கூறியுள்ள வழிகாட்டுதல் படி என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணி தொடரும்// 

நீதிமன்றம் என்ன உத்தரவு கொடுத்தது என்பதைச் சொல்லிவிட்டு அல்லவா ‘அடுத்து'என்கிற பேச்சுக்கே வரவேண்டும். தீர்ப்பை ஏன் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார்.  

ஏனென்றால் ஜெண்ட்லி கேசை ஹைகோர்ட் டிஸ்மிஸ் செய்துவிட்டது.  

கோர்ட்டில் கேஸ் இருக்கிறது. கேஸ் நடக்கிறது. தீர்ப்பு வந்தால் என்னுடையதுதான் ஒரே அசோசியேஷன் என்று ஆகிவிடும். நான், நானேதான் சங்கம் என்று அயர்ன்காரர் முதல் ஹபாத் ஹோட்டல் உரிமையாளர் வரை சுத்துப்பட்டில் இருக்கும் கையேந்திபவன் கடைக்காரர்கள் உட்பட எல்லோரிடமும் இரண்டு வருடங்களாகச் சொல்லிக்கொள்வதற்குத்தான் இந்த வழக்கு பயன்பட்டதே தவிர ஒரு புல்லைக்கூட அது புடுங்கிவிடல்லை. 

சரி. ‘அடுத்து’ என்ன? 

ஹைகோர்ட் தீர்ப்பு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போகப் போகிறாரா ஜெண்ட்லி ராஜ். அதெல்லாம் நெம்ப செலவாகும். ஓசியில் பண்ணக்கூடிய ஒரே விஷயம்என் சங்கம் செல்லாக்காசாக ஆகிவிட்டதைப்போல யூனிடீ அசோசியேஷனின் ரெஜிஸ்ட்ரேஷனையும் செல்லாது என்று ஆக்கிவிடுவதுதான் ஓசியில் நடக்கிற ஒரே வேலை என்று எண்ணுகிறாரோ ஒருவேளை.

அதெல்லாம் இல்லை. உளுவுளாயியாக பேருக்கு ஒரு கேசைப் போட்டு ‘கேஸ் இருக்கு. கேஸ் இருக்கு’ என்று ஓசியில் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்க ஒரு உபாயம். 

வழக்கு டிஸ்மிஸ் ஆகிவிட்டது என்பதைச் சொல்லாமலே ‘அடுத்து’ என்று சொன்னதைப்போல அடுத்த பீலாதான் கோர்ட்டின் ‘வழிகாட்டுதல்படி’ என்பது. 

9. Various submissions have been made to assail the registration of the third respondent association itself. However these submissions would not require to be adverted to, for the reason that such registration, is not under challenge. Suffice it to state if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law. 

கார்ப்பரேஷன் ஸ்கூலில் எட்டாங்கிளாஸ் படிக்கிற கொஞ்சம்போல இங்கிலீஷ் தெரிந்த பையனுக்குக் கூடப் புரியும்படியாகத்தான் இருக்கிறது இது. ஆனால் இதை வழிகாட்டுதல் என்று மனம் கூசாமல் என்னமாய் திரிக்கிறார் பாருங்கள். இது மட்டுமே ஜெண்ட்லியின் ஒரே தெறமை. எந்தத் தெறமையும் இல்லாமல் ஓசியிலேயே வாக்கையை ஓட்டமுடியுமா. எதாவது ஒன்று இருந்துதானே ஆகவேண்டும். இவருக்கு இந்தத் திரிக்கிற தெறமை இயல்பாகவே அமைந்திருக்கிறது.

Various submissions have been made to assail the registration of the third respondent association itself. 

யூனிடி அசோசியேஷனின் பதிவே செல்லாது என்பதற்கான பல்வேறு முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

ஜெண்ட்லி ராஜின் வழக்கு எதைப் பற்றியது?

தன் அசோசியேஷன் சட்டத்துக்குப் புறம்பானது என்று, அதைப் பதிவு செய்தவரும் மேல் முறையீட்டு அதிகாரியும் நிராகரித்தது தவறு, கோர்ட்டார் அவர்களே, என் அசோசியேஷன் சட்டரீதியானது என்று அறிவியுங்கள் எனக் கோரிய வழக்குதானே. இதில் எதற்கு சம்பந்தமே இல்லாமல், யூனிடி அசோசியேஷனின் பதிவு செல்லாது என்கிற பேச்சு. ஜெண்ட்லி ராஜின் வழக்குயூனிடி அசோசியேஷனின் பதிவு செல்லுமா செல்லாதா என்பதே இல்லையே. அப்புறம் ஏன் யூனிடியை இழுக்கிறார். குட்டையைக் குழப்பினால்தானே ஓசியில் மீன் பிடிக்கமுடியும். 

 இதைத்தான் ஜட்ஜம்மா தெளிவாகச் சொல்கிறார். 

 However these submissions would not require to be adverted to,

 எப்படியிருப்பினும் இவையெல்லாம் பரிசீலிக்கப்படவேண்டியவை அல்ல. 

 for the reason that such registration, is not under challenge.

ஏனென்றால், யூனிடி அசோசியேஷனின் ரெஜிஸ்ட்ரேஷன் செல்லுமா செல்லாதா என்பதல்ல இந்த வழக்கு (உங்கள் அசோசியேஷன் ரத்து செய்யப்பட்டது செல்லாது என்பதற்காகத்தானே நீங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளீர்கள். அப்புறம் ஏன் தேவையில்லாமல் கண்டதையும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று முகத்திலடித்தார்போலச் சொல்லாமல் சொல்வதே இதில் தொக்கி நிற்கும் உட்பொருள்) 

 Suffice it to state if at all any resident in apartments in question has a grievance as against R3 association,

இதைச் சொல்வது போதுமானது; வளாகத்தில் வசிப்போரில் எவருக்கேனும் யூனிடி அசோசியேஷனின் ரெஜிஸ்ட்ரேஷனின் மீது எதாவது குறை இருந்தால்,  

it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law. 

அவர்கள் அதை ஜெண்ட்லி ராஜிடம் கொண்டுவருவதா இல்லையா என்கிற அவர்களது விருப்படி ஜெண்ட்லி ராஜை அணுகினால் அது சட்டப்படி முடிவுசெய்யப்படவேண்டும். 

‘வழிகாட்டுதல்’ ‘வழிகாட்டுதல்' என்று ஜெண்ட்லி ராஜும் ஜீவானந்தமும் சொல்லிக் கொண்டிருக்கிற இந்தத் தீர்ப்பில் கோர்ட் சொன்னது என்ன. 

எல்லோருக்கும் புரியும்படி லோக்கலாகச் சொல்வதானால். உன் கேஸ் என்னவோ அதைப் பற்றி மட்டும் பேசு. எதுக்கு வீணா யுடிலிடி அசோசியேஷன் செல்லுமா செல்லாதாங்கற மேட்டரை இழுக்கறே. அப்படியே இருந்தாலும் அது உன் வேலையில்லையே. அதைக் கேக்கவேண்டியது அங்க வசிக்கிறவங்க இல்லையா. அப்படியே யாராச்சும் யூனிடி அசோசியேஷன் ரெஜிஸ்ட்ரேஷனே செல்லாதுனு சொல்லி உங்கிட்ட வந்தா அதை சட்டத்துக்கு உட்பட்டு முடிவு பண்ணலாம்னு சொன்னா என்னங்க அர்த்தம்.

 வெண்ணெய் உன் கேசைப் பத்தி மட்டும் பேசுங்கறதுதானே. 

 இதுக்குப் பேர் வழிகாட்டுதலா.  

இதை வெச்சுக்கிட்டு, கோர்ட்டு சொல்லிடுச்சி. யுடிலிடி அசோசியேஷன் பதிவு செல்லுமா செல்லாதாங்கறது என் கைலதான் இருக்கு. நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு குதிக்கிறது குழந்தைத்தனமா இல்லையா. குழந்தை செஞ்சாபாவம் குழந்தைதானே போகட்டும் என்று ரசிக்கலாம். தடிமாடு செஞ்சா கொஞ்சவா முடியும்.  

 கோர்ட் உண்மைல சொல்லியிருக்கறது இதுதான்னு புரியிறா மாதிரி இப்படிப் புட்டுப் புட்டு வெச்சா, ஆறுக்கு மூணு பீரோ சைஸ்ல இருக்கறதால, ஐயா பெரியவர்வனு மதிச்சு அயர்ன் பண்ணிக் குடுக்கறவர் கூட இந்த ஆளை மதிப்பாரா.

 உயர்நீதிமன்றம் என்னதான் சொல்லி ஜெண்ட்லி ராஜ் போட்ட வழக்கைத் தள்ளுபடி செய்தது

 10. With the above observation, the writ petition is dismissed. 

 மேற்குறிப்பிட்ட அவதானிப்புகளுடன் ஜெண்ட்லி ராஜ் போட்ட ரிட் தள்ளுபடி செய்யப்பட்டது. 

 என்றுதானே சொல்லியிருக்கிறது. 

 மேற்குறிப்பிட்ட டைரக்‌ஷனுடன் என்று எங்கே சொல்லியிருக்கிறது. 

ஜெண்ட்லி ராஜ் என்பவர் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பொய்யால் மட்டுமே ஆனவர். ஏனெனில் எனக்கு போன் செய்து, ‘போலீஸ்ல பிடிச்சுக் குடுத்துருவேன். ஏற்கெனவே செம்மஞ்சேரி ஸ்டேஷன்ல உன் மேல கேஸ் இருக்கு தெரியுமில்லே. ம்ம்ம் என்று மிரட்டுகையில் நான் ஓனர் நீ அலாட்டி என்றார். ஆனால் கோர்ட்டில் போய் நின்றுகொண்டு என்னைப் போலவே யூனிடி அசோசியேஷனைச் சேர்ந்தவர்களும் அலாட்டிதான் என்று கூறியிருக்கிறார். 

இது எனக்கு - ஜெண்ட்லி போன் பண்ணி, ‘நான் ஓனர் நீ அலாட்டி. நீ எப்படி என்னை ஓசி ஒட்டுண்ணினு சொல்லலாம் என்று மிரட்டுவதற்கு முன்பே தெரிந்திருந்தால், அண்ணே நீங்க இன்னும் டியூ கட்டிக்கிட்டு இருக்கற அலாட்டிண்ணே. நான்TNHB கேட்ட மொத்த பணத்தையும் ஆறு மாச டிலேவுக்கான வட்டியோட சேத்து 42,26,000 ஜனவரி 2019லையே (இதில் 15 + 20 லட்சங்கள் ஏப்ரல் + ஜூன் 2018லேயே கட்டிவிட்டவை) கட்டின, டியூவே இல்லாத அலாட்டிணே. இன்னும் டியூ கட்டிக்கிட்டு இருக்கிற நீங்க பெருசா டியூவே இல்லாம இருக்கிற நான் பெருசாநான் சோல் அலாட்டிணே நீங்க உங்க அப்பாவோட எலக்‌ஷன்ல நிக்கிறதுக்காக ஜாய்ண்ட் அடிச்ச அலாட்டிணே என்றுநான் எட்டு பாஸுணே நீங்க SSLC பெய்லுணே என கவுண்டமணியிடம் சொல்கிற செந்திலைப்போலச் சொல்லியிருப்பேன். வட போச்சே.

கோர்ட் வழிகாட்டுதல் என்கிற வடிகட்டின பொய்யை அடித்து நொறுக்கியாயிற்று. அடுத்து என்ன சட்ட வாதங்கலை முன்வைக்கிறார் என்று பார்க்கலாம் என்று பார்த்தால் அருமைநாயகம் அவர்களின் அருமந்த புத்திரர் மீதி இருக்கிற மாவு மொத்தத்திலும் சும்மானாச்சுக்கும் வார்த்தைகளில் வடை வடையாகச் சுட ஆரம்பித்துவிட்டார்.

//அதற்கு  மாறாக,  அரைகுறையாக  உயர்  நீதிமன்ற உத்தரவை  படித்துவிட்டு அதை தங்களுக்கு ஏற்றார் போல்திரித்து  பல வினாக்கள் எழுப்பி வருகின்றனர்.

போலி சங்கத்தின் செயலாளர் மற்றும் அவரது கூட்டாளிகள்  whatsapp பதிவில் ஒன்று  மட்டும்தான் தெரிகிறது.

அதை அனைவரும் ஆழ்ந்து  நிதானம்ஆக யோசிக்க வேண்டும். மக்களிடையே எந்தவிதமான கலந்தாலோசிப் இல்லாமல் உருவாக்கப்பட்ட போலி சங்கத்திற்கு உயிர் கொடுக்க இவர்கள் பல  லட்சங்களை ( 10  லட்சம் .. இதுவரை)  செலவு செய்து// 

 இதற்கு ஆதாரமாக எதையாச்சும் காட்டுங்களேன் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்று பாடத்தான் வேண்டும். எந்த பதிலும் வராது. ஏனென்றால் சும்மா அடித்து விடுவதுதானே. இதற்கெதற்கு ஆதாரம் கீதாரமெல்லாம்.

 அடுத்து அடுத்து என்றவர் அடுத்து சுடும் ஆதாரமற்ற வடை என்ன என்று பார்க்கலாம்.

//நம் உரிமைகளை வீழ்த்த  அது நிமித்தம் அதிகாரங்களை   பெற்று விடலாம்  என்ற  எண்ணி நம் மீது   அராஜகத்தையும் அதிகாரத்தையும் செலுத்தி வருகின்றனர்.//

‘அதிகாரங்களைப் பெற்று’ என்றால் இதுவரை அதிகாரம் இல்லை என்றுதானே அர்த்தம். அதிகாரமே இல்லாமல் எப்படி அராஜகத்தையும் அதிகாரத்தையும் செலுத்திவர முடியும். 

சட்டப்படி முறையாக அமைக்கப்பட்டிருக்கும் யூனிடி அசோசியேஷன், அதிகாரத்தை,ஜெண்ட்லி ராஜ் போல அராஜகமாகச் செலுத்துவதாக இருந்தால், ஜெண்ட்லி ராஜின் வீட்டுக்கு வெளியே இருக்கும் பொது இடத்தை அராஜகமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இவரது குப்பைகூளங்கள்அட்டு அடைசல்கள் எல்லாம் 


எப்போதோ குப்பைத்தொட்டிக்கு அல்லவா போயிருக்கவேண்டும்.

//வம்படியாக வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து  வசூலிப்பு மையம்  கலெக்ஷன் ஏஜெண்ட்ஸ் ஆக  எதற்காக செயல்படுகின்றனர்  என்பதை ஆழ்ந்தும் யோசிக்க வேண்டும்.  பராமரிப்பு கட்டணம் என்ன வசதிக்  வாங்குகிறீர்கள் என்ற break up  கேட்டாள் பதில் இல்லை.//

 இது அடுத்த வடை. 

AGMல் எல்லா ப்ரேக் அப்பும் பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனாகக் கொடுக்கப்பட்டனவே அங்கே வந்து உட்கார்ந்துகொண்டு இருந்தவர்தானே இவர். அப்போது கேட்காமல் இப்போது கேட்பது கேஸ் கவுந்ததை மறைத்து மடைமாற்றத்தானே. 

இதற்கான எளிய பதில் TNHB என்ன ப்ரேக் அப்பில் வசூலித்துக்கொண்டு இருந்ததோ அதே ப்ரேக் அப்தான் இப்போதும் என்பதுதான். TNHBயை வளைத்துப் போட்டிருந்தவர்தானே நீங்கள். ப்ரேக் அப்பை எப்போதாவது அங்கே கேட்டிருக்கிறீர்களா.  

மெய்ன்டனன்ஸை TNHBக்கு ஒரு மாசமாவது இவர் கட்டியிருப்பாரா. இங்கேயே எல்லாவற்றையும் ஓசியில் அனுபவித்துக்கொண்டு ஒட்டுண்ணியாக ஜாலியாய் வாழ்ந்துகொண்டு இருப்பவர் அரசுத்துறையான TNHBக்கா கட்டியிருக்கப் போகிறார். 

//அவர்களுக்கு ஒரே குறிக்கோள்தான் அடுத்தவனை மட்டம் தட்டுவதுஅசிங்கமாக பேசி எப்படியாவது பணத்தை உறிஞ்சுவதுபோன்ற மட்ட ரக கொள்கைதான்குறிக்கோள் தான். 

இருக்கிற  சிலர் கொடுக்கிற பணத்தை  தன் இனமான மூத்த வழக்கறிங்களிடம்  கொடுத்து எதிரணி முகாமை  காலி செய்வது தலையாய கோட்பாடு.  இதை நீங்கள் அவர்கள் பதிவில் இருந்தே நன்றாக புரிந்து கொள்ளலாம்.//

வீச்சருவா ஆவி புகுந்ததைப்போல் இருக்கிறதே இந்த இடம். 

 கையாலாகாதவனின் முதலும் கடைசியுமான ஆயுதம் ஜாதி. ஜாதி வெறுப்பைத் தூண்டிவிட்டுக் குளிர்காய்தல். இந்த மாய்மாலமெல்லாம் ரொம்ப நாளைக்கு வேகாது நைனா. 

//மூத்த வழக்கறிங்களிடம்  கொடுத்து எதிரணி முகாமை  காலி செய்வது// 

அப்படியென்றால் ஜெண்ட்லி ராஜும் மேனாள் ஜட்ஜ் ஜீவானந்தமும் சட்ட அறிவும் வாதத் திறமையும் இல்லாத சொத்தை வழக்கறிஞர்கள் என்பதைத் தாங்களே சொல்லாமல் சொல்லிக்கொள்கிறார்களா என்பதை நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

//மீண்டும் நாம் சொல்வது,  சங்க நிர்வாகிகள்  மற்றும் சிலருடன் ரவுடிசம் செய்ய உங்கள் வீட்டின் முன் மிரட்டினால் நீங்கள் கேட்க வேண்டியது நீ விற்பனை பத்திரம் வாங்கிய வீட்டு உரிமையாளரா உனக்கு ஏன் நான்  பணம் கட்ட வேண்டும்?//

இவ்வளவு கிழியக் கிழிய பேசுகிற வெண்ணெய் ஏன் கோர்ட்டில், ‘நீங்களும் வடமா நாங்களும் வடமா என்று வேதம் புதிதில் ஜனகராஜ் சொல்வதைப்போல, ‘நாங்களும் அலாட்டி யூனிடி சங்கத்தின் நிர்வாகிகளும் அலட்டிகளே என்று சம்பந்தமே இல்லாமல் உளறிவைக்கவேண்டும். 

குடிக்கிற தண்ணியும் ஏறி இறங்குகிற லிஃப்ட்டும் இவன் ஓனரா அலாட்டியா என்றா பார்க்கின்றன. துட்டு கட்டினால்தானே மெட்ரோ வாட்டர் நீர் விடும். மெய்ண்ட்டனன்ஸைக் கட்டினால்தானே லிஃப்ட் வேலை செய்யும். 

//நீ விற்பனை பத்திரம் வாங்கிய வீட்டு உரிமையாளரா உனக்கு ஏன் நான்  பணம் கட்ட வேண்டும்?// 

நா மெய்ண்ட்டனன்ஸ் ததமாத்தேன் போ’ என்று அசட்டுத்தனமாக இடுப்புக் கைலியை இறுக்கிக்கொண்டால் வெறும் மக்குடன் எங்கே போவது. எப்படி லிஃப்ட் வேலை செய்யும். ஜெண்ட்லி ராஜ் இருப்பதோ, அவருடைய சிசிடிவி, லிஃப்டையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் HIG முதல் மாடியில். லிஃப்டே இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவர் ஏறி இறங்கிக்கொள்ளலாம். ஜீவானந்தம் வாங்கியது HIG முதல்மாடி. வசிப்பது HIG மூன்றாம் மாடி. லிஃப்ட் ஓடாவிட்டால் பெரியவர் ஜீவானந்தத்துக்கும் சிரமம்தானே. வசிக்கிற வீட்டிலிருந்து வாங்கிய வீட்டிற்கு வந்துவிடுவாராயிருக்கும்.

//மீண்டும் நாம் சொல்வது,  சங்க நிர்வாகிகள்  மற்றும் சிலருடன் ரவுடிசம் செய்ய உங்கள் வீட்டின் முன் மிரட்டினால் நீங்கள் கேட்க வேண்டியது நீ விற்பனை பத்திரம் வாங்கிய வீட்டு உரிமையாளரா உனக்கு ஏன் நான்  பணம் கட்ட வேண்டும்?//

கீரை மீன் பிரியாணி போன்றவைகளைப்போலவே நீர், சாலை விளக்கு, லிஃப்ட் என்று சகல வசதிகளையும் ஒத்தைப் பைசா கொடுக்காமல் ஓசியில் ஒட்டுண்ணியாக அனுபவித்துக்கொண்டிருப்பது ரவுடியிசமா  அல்லது மெய்ன்னடனஸ் கட்டுங்கள் என்று உங்கள் வீட்டுக்கே வந்து தன்மையாகக் கேட்பது ரவுடியிசமா.  

//அப்படியே நான்  கட்டினாலும் என் பணத்திற்கு என்ன பாதுகாப்பு.?//  

யூனிடி அசோசியேஷன் என்ன ஆகா வட்டி ஓகோ வட்டி என்று கூவிக்கூவி வசூலிக்க நிதி நிறுவனமா நடத்துகிறது. தடையற்ற நீரும் வளாகத்தில் இருக்கும் வசதிகளும் தொடர்ந்து கிடைக்க துட்டு கட்டவேண்டும். எதுவுமே ஓசியில் வராது. அவற்றை அனைவரும் அனுபவிக்க வழிசெய்வதுதானே உண்மையான அசோசியேஷனின் வேலை. 

ஆட்டையைப் போடுவதற்காகவே அசோசியேஷன் என்கிற பெயரில் ஏழு பேரைத் திரட்டி அதில் செல்லாத நாலு பேரை சேர்த்துக்கொண்டு இரண்டு வருடகாலம் இல்லாத அராஜகமெல்லாம் செய்துகொண்டு கோர்ட்டில் டிஸ்மிஸல் ஆர்டர் வாங்கிக்கொண்டு அவமானப்பட்டாலும் கூசாமல் கோர்ட் வழிகாட்டியிருக்கிறதுஎன பொய் சொல்லிக்கொண்டு கெத்தாக கைப்புள்ளை போல திரிபவர்களுக்கு  யாரைப் பற்றி என்ன அக்கறை. 

ஒரே ஒரு நாள் பதவியைக் கொடுத்தால் போதும் விடிந்தால் யுடிலிடி பில்டிங்கே இருக்காது. அவ்வளவு பத்தரை மாற்றுத் தங்கங்கள்.

//பின்பு காவல் நிலையத்தை  கண்ட்ரோல் ரூம் 100    தொடர்பு கொண்டு தயங்காது எங்களையும் அழைக்க  அன்புடன் அழைக்கின்றோம். எல்லோரும் இணைந்தால்தான் மூக்கணாம் கயிறு கெட்ட இயலும்.// 

எனக்கு எதிராக (என்னைக் கேவலமாகத் திட்டியவனிடம் நியாயம் கேட்கப்போன பிரெசிடெண்ட் ஜெயச்சந்திரன் பெயரையும் இழுத்து)  பொய் கம்ப்ளெய்ண்ட் எழுதிக்கொடுத்து மூக்கை உடைத்துக்கொண்டது போதாதா. 

மூக்கணாம் கயிறு என்பது சரியான போக்கில் மாட்டை நடத்துவதற்குதானே. 

யூனிடி அசோசியேஷனையே இழுத்து மூடிவிட்டு (கிடைத்தவரை லாபம் என சுருட்டிக்கொண்டு) திரும்ப TNHBயிடமே ஒப்படைத்துவிடலாம் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள்யூனிடி அசோசியேஷனுக்கு மூக்கணாங்கயிற்றைக் கட்ட நினைக்கிறார்களாம். 

போவதற்கு முன்பே தெரிந்துவிட்டதா,

கூக்குரலாலே கிடைக்காது - இது 

கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது’ என்று.

இதையே ஒழுங்காகச் சொல்லத் தெரியாத ஓசி லாயர் எப்படி வாதங்களை முன்வைத்துத் தர்க்கரீதியாக வழக்காடியிருப்பார் என்கிற லட்சணம் இதிலிருந்தே தெரியவில்லையா. அதான் கேஸ் தோற்றுவிட்டது. ஓசியிலேயே எல்லாவற்றையும் அடைந்துவிட முடியுமா - மெண்ட்டனன்ஸ் கட்டாமல் ஓசி ஒட்டுண்ணிகளாக தானும் ஒரு ஆள் என வளாகத்தில் உலவிக்கொண்டு இருப்பதைப்போல.

-       விமலாதித்த மாமல்லன் (C. Narasimhan MIG 6/13)