20 July 2024

ஜெண்ட்லி ராஜ் சொந்தக் காசில் வைத்துக்கொண்ட சூனியம்


ஜெண்ட்லி ராஜ் என்றாலே பொய் பித்தலாட்டம் மிரட்டல் ஃபோர்ஜரி 420 என்பதற்கான சிறந்த ஆதாரமாக ஜெண்ட்லி ராஜே ஒரு ஆடியோவை வெளியிட்டு சைபர் கிரைமில் மாட்டிக்கொண்டிருக்கிறார். 

1. ஆடியோ ஆரம்பிப்பதே மொட்டையாய், ‘ஆறேழு மாதங்களாய் மெய்ல் அனுப்பிக்கொண்டு இருப்பதாய்த்தான் இருக்கிறது. யார் பேசுகிறார்கள் என்பதோ பேசுவது யாரிடம் என்பதோ இல்லாததால்யாரோ யாரிடமோ பேசியதில் லெஜண்ட் ஜெண்ட்லி அவர்கள் தமது வெட்டு ஒட்டு வேலைகளை செய்து இருக்கிறாரோ என்கிற சந்தேகத்தைக் கேட்பவருக்கு உண்டாக்குகிறது. 

நீங்களோ நானோ போனில் எப்படி பேசுவோம். இன்னார் பேசுவதாகவும் இன்னாரிடம் பேசுவதாகவும் சொல்வோமா இல்லையா. இவர் என்னிடமே ராஜ் பேசுகிறேன் என்று அடையாளத்தை மறைத்துக்கொண்ட கோழைதானே. ஆரம்பம் இல்லை என்பதே இந்த ஆடியோவின் நம்பத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடுகிறதே. அதை சைபர் கிரைம் பார்த்துக்கொள்ளட்டும். நமக்கெதற்கு என்று விட்டுவிடலாம் என்றால் அடுத்தடுத்து சந்தேகங்களை எழுப்பும் வண்ணமே இருக்கிறது இந்த ஆடியோ முழுவதும்.

2. போனில் பேசுகிற பெண்மணி யார் பெயரையுமே குறிப்பிடாமல் இருக்கும்போது,எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல  யாரு ஜெய்குமார் சொல்றாரா வீட்டுக்கு வந்துடுவேன்ட்டு என்று ஜெண்ட்லி ராஜே எடுத்துக் கொடுக்கிறார். சரி அதற்காவது அந்தப் பெண்மணி ஆமாம் என்று சொல்கிறாரா என்று பார்த்தால்அதையே கண்டுகொள்ளாமல் அவர் தம்பாட்டுக்கும் பேசிக்கொண்டே போகிறார். எந்த உரையாடலிலும் இது சாத்தியமா. இங்கேயே நமக்கு சந்தேகம் வரவில்லையா. இது உண்மையில் நடந்ததா செட்டப்பா ஒட்டப்பா ஒட்டவைத்த செட்டப்பா என்று.  

3. அந்தப் பெண்மணி நேரடியாக இவரிடம்தான் பேசியிருக்கிறார் என்றால் அந்தப் பகுதி இவர் மொபைலில்தானே இருக்கும். அதை ஏன் வெட்டியிருக்கிறார் ஜெண்ட்லி ராஜ். அதை வெளியிட என்ன பயம். இல்லை இந்த ஆடியோவே வேறு யாரிடமோ நடந்த உரையாடலாஅதில் புகுந்து இவர் எதாவது செப்பிடுவித்தை செய்திருக்கிறாரா.

4.    பேசுகிற பெண்மணியிடம் பேசுகிற குரல் ஓரளவு ஜெண்ட்லி ராஜுடையதைப்போல்தான் இருக்கிறது என்பது மட்டுமே நமக்குத் தெரிவது. 

5. TNHBயில் கேட்டதற்கு மெய்ன்ட்டனன்ஸை நாம ஹவுஸிங் போர்டுக்கு ஃபைனல் செட்டில்மெண்ட் சமயத்தில் கட்டணும்னு சொன்னாங்க என்கிறார் அந்தப் பெண்மணி. 



TNHBயின் MMS கையெழுத்துப் போட்டு மே மாதம் முதல் மெய்ண்ட்டனன்ஸை யூனிடி அசோசியேஷனுக்குக்கட்டவேண்டும் என்று கடிதம் கொடுத்த பிறகு TNHBகாரர்கள் இதை எப்படிச் சொல்லியிருக்க முடியும்01.05.2024 முதல் மெய்ண்ட்டனஸை யூனிடி அசோசியேஷனுக்கு செலுத்துங்கள் என்று 29.04.2024 அன்று கோரமேஷ் Managing Marketing Service என்று பச்சை மையில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருப்பதுTNHBயில் இருக்கிற யாருக்குமே எப்படித் தெரியாமல் இருக்கமுடியும்.  இது போக எந்த டாக்குமெண்ட்படிமெய்ண்ட்டனன்ஸ் கேக்கறாங்க என்கிறார் அந்தப் பெண்மணிஒருவேளை அந்தப் பெண்மணி கேட்டிருந்தால்ஜெயகுமார் ரைட் ராயலாக இதைத்தானே எடுத்துக் காட்டியிருப்பார்இதைப் பார்த்தபின் அந்தப் பெண்மணிஏன் இப்படியொரு கேள்வியை வந்து ஜெண்ட்லி ராஜிடம் கேட்கப்போகிறார்ஆக எந்த மிரட்டல் மெய்லையும்வாட்ஸப் மெஸேஜையும் தனிப்பட அந்தப் பெண்மணிக்கு ஜெயகுமார் அனுப்பவில்லை என்பது இதிலிருந்தேதெளிவாகிவிடவில்லையாகூடவே அவற்றை ஜெயகுமார் பெயரில் அனுப்பிவைத்ததே நம் 420யாகத்தான்இருக்கவேண்டும் என்பது தெளிவாகிவிடவில்லையா. 

6.  மெய்ண்ட்டனன்ஸ், யுடிலிடி அசோசியேஷனின் கைக்கு வந்தே இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியவில்லையே அப்புறம் எப்படிஅந்தப் பெண்மணியின் பேச்சு ஆடியோவின் ஆரம்பத்தில் வருகிற - மெய்ண்ட்டனஸ் கேட்டு ஆறேழு மாதங்களாய் மெய்ல் அனுப்பிக்கொண்டிருக்க முடியும் - மெய்ல் அனுப்பிக்கொண்டிருந்ததுஓசியில் ஒட்டுண்ணியாக வாழ எதுவும் செய்யத் தயங்காத நம் வளாகத்துத் தங்கமாகத்தான் இருக்கவேண்டும் என்பது உறுதியாகிவிடவில்லையா. வசமாக மாட்டிக்கொண்டுவிட்டோமே என்று பெண்மணி சொல்லவே சொல்லாத பெயரான ஜெயகுமாரை இவராகவே கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார். 

7.  அந்த மெய்லகளை அனுப்பியது யார்அவை எங்கே. அந்தப் பெண்மணி எல்லாவற்றையும் டெலீட் பண்ணிவிட்டேன் என்பது ஜெண்ட்லி ராஜுக்கு நெம்ப வசதியாகப் போய்விட்டதோ. மெய்லின் பின் / ட்ரேஷிலிருந்து எடுப்பது என்ன கம்ப சூத்திரமா. குப்பைத் தொட்டியிலிருந்தே டெலீட் ஆனதைக் கூட, ஃபார்மேட் பண்ணிய ஹார்ட் டிஸ்கிலிருந்துகூட DRIல் நாங்கள் கமர்ஷியல் ஃப்ராடு கேஸ்களில் எடுத்திருக்கிறோமே. சைபர் கிரைமால் முடியாதா என்ன. அரசு அலுவலகத்தில் வேலைபார்த்து ஓய்வுபெற்ற இந்தப் பெண்மணி யார்இவரது மெய்ல் ஐடி என்ன என்று கேட்டு சைபர் கிரைம் டெலீட் ஆன மெய்ல்களை எடுத்துவிட முடியாதா. இப்போது அவரது ஹார்ட் டிஸ்க்கில் கைவத்து விளையாடப் பார்த்தால் சாட்சியங்களை அழித்தல் என்கிற குற்றமும் சேர்ந்துகொள்ளும் ஜாக்கிரதை. வளாக வாட்ஸப் வடை வாயர்களைப் போல சொத்தை மொக்கை என்று எல்லோரையும் எண்ணிவிடவேண்டாம். எச்சரிக்கை.

8.  இந்த 5 நிமிட ஆடியோவில் ஏன் ஒருமுறைகூட பேசுகிற பெண்மணியின் வாயிலிருந்து ஜெயகுமார் என்கிற பெயரே வரவில்லை. இந்தப் பெண்மணி மெய்லிலும் வாட்ஸப்பிலும் மிரட்டுகிறவரைப் பற்றி ஜெண்ட்லி ராஜிடம் புகார்தானே செய்கிறார். மிரட்டுபவர் யார் என்று ஒருமுறைகூடவா பெயரைச் சொல்லமாட்டார். மொத்தமுமே வேறு யாரைப் பற்றியோ பேசியதாக இருந்தால் தவிர அதற்கு வாய்ப்பே இல்லை. இல்லையா. 

9.    மெய்ண்ட்டனன்ஸ் கேட்டு மிரட்டிய வாட்ஸப் மெஸேஜ் இருக்கிறது என்கிற பெண்மணியிடம் அதை வாங்கி ஜெண்ட்லி ராஜ் ஏன் அதை இதன் கூடவே வெளியிடவில்லை. ஜெயகுமாரின் பெயரே சொல்லப்படாத இந்த ஆடியோவை விடவும் ஜெயகுமாரின் போன் நம்பரிலிருந்து போன வாட்ஸப் மெஸேஜ் இன்னும் வலுவான ஆதாரமாயிற்றேஜெயகுமாரைத் தொடர்பு படுத்தும்படியாக சிறு துரும்பு கிடைத்தாலும் விடாதவர் இதைப்போயா விட்டுவிடுவார். அப்படி ஒன்று இல்லை என்பதால்தானே சும்மா இருக்கிறார். 

10. ஒட்டுமொத்த உரையாடலிலும் அடையாளமற்ற அந்தப் பெண்மணி குறிப்பிடுகிற ஒரே பெயர் ஜெண்ட்லி’ மட்டுமே.  

11. பெண்மணி சொல்வது இதுதான். எங்க வீட்ல சொல்லமாட்டேன். சொன்னேன்னா ஜெண்ட்லிய எதாவது பண்ணிடுவாங்களோனு பயந்துகிட்டு நான் எனக்குள்ளையே வெச்சுப்பேன்’ என்கிறாரென்றால் என்ன பொருள். மிரட்டியது ஜெண்ட்லியா ஜெய்குமாரா என்று நீங்களே சொல்லுங்கள். 

12. மிரட்டியது உண்மையிலேயே ஜெயகுமாராக இருந்தால் அந்தப் பெண்மணிதம் வீட்டில். ஜெண்ட்லியை எதாவது பண்ண்ணிவிடுவார்களோ என்று ஏன் பயப்படவேண்டும். 

13. பெண்மணி என்ன சொல்கிறார் என்பதை 3.45லிருந்து கூர்ந்து கேளுங்கள். 

14. இந்த மொத்த உரையாடலிலும் ஜெயகுமார் என்கிற பெயரைச் சொல்வதே ஜெண்ட்லி ராஜ் மட்டுமே. அதையும் திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஜெண்ட்லி ராஜ். 

15. அந்தப் பெண்மணி தம் வாயால் ஜெயகுமார் என்கிற பெயரையே ஒருமுறை கூட சொல்லதபோது ஜெண்ட்லி ஏன் திரும்பத் திரும்ப ஜெய்குமார் ஜெய்குமார் என்கிறார். 

16. எடிட் பண்ணாத முழுமையான ஆடியோவை வெளியிட்டால் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும். 

ஜெண்ட்லி ராஜ் முதல் முறையாக செமையாக மாட்டிக்கொண்டிருக்கிறார். அநேகமாய் சைபர் கிரைம் இந்த ஆடியோவை வைத்தே இவர் சேப்டரை மொத்தமாக முடித்துவிடும். 

சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்கிற ஜோக் முதல் முறையாக சீரியஸ் கிரைம் ஆகியிருக்கிறது.

 

இதில் ஜெண்ட்லி ராஜ் விடும் புருடாக்கள்

1.     மெய்ண்ட்டனன்ஸ் கேக்கக்கூடாதுனு அவங்க மேல கேஸ் போட்டிருக்கோம்.

இவர் போட்ட கேஸ் தன் அசோசியேஷன் செல்லாது என ரெஜிஸ்ட்ரார் அறிவித்த ஆணையை ரத்துசெய்யக்கோரியதுதானே. பெண்மணியிடம் தான் போட்ட  கேஸையே மெய்ண்ட்டனன்ஸ் கேஸாகத் திரித்துவிட்டார் பாருங்கள். யூனிடி அசோசியேஷன் மெய்ண்ட்டனன்ஸ்  கேட்கக்கூடாது என்று இவர் போட்டிருக்கும் வழக்கின் எண் என்ன என்று இவரால் சொல்லமுடியுமா?

2.     அதெல்லாம் கேஸ் முடிஞ்சி வரதுக்கு டைம் ஆகும் என்கிறார். 

கேஸ் போட்டிருந்தால்தானே முடிஞ்சி வர என்கிற தெகிரியத்தில் அடித்துவிடுகிறார். 

3.  உள்ளையும் ரெண்டு மூணு பேரைப் போட்டு அடிச்சிருக்கிறாங்க. FIRபோட்டிருக்குறோம் நம்ம என்கிறார் ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜெண்ட்லி ராஜ். 

இவர் போட்ட FIRஆ அது. அசிங்க அசிங்கமாகப் பேசித் தூண்டிவிட்டு,ஆளுங்கட்சியின் ஆதரவு இருக்கிறது என்று இவருடைய நண்பர் போட்ட FIR அல்லவா அது. தெய்வம் நின்று கொல்லும் என்றுபொய்ப்புகார் கொடுத்து FIR போட்டவர் ஆள் அட்ரசிலேயே இல்லை என்பதால் பூட்டியிருக்கும் விட்டுக் கதவில்,

பார்வை: C. No. 325/DC CCB/COP(T)?TBM/2024 

பார்வையில் கண்ட மனுதாரரான திரு விக்னேஷ் என்பவர் கொடுத்த புகார் மனு சம்மந்தமாக தங்களிடம் விசாரனை செய்ய வேண்டியது அவசியமாவதால்தங்கள் மனுவிசாரணைக்கு உரிய ஆவனங்களுடன் வருகின்ற 21.06.2024-ம் தேதி காலை 11.00 மணிக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம்மூன்றாவது தளம்மத்திய குற்றப் பிரிவுபோலி ஆவண மோசடி பிரிவிற்கு ஆஜராகும்படி இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

என்று இன்ஸ்பெக்டர் Forgery Wing கையெழுத்திட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டுப் பல நாட்கள் எல்லோரும் பார்க்கக் கிடந்ததே. 


எங்கள் MIG 6/18ல் வசிக்கிறவர்கள் வளர்ப்பு நாயை ஆறாகப் பெருநீர் கழிக்கவிட்ட போட்டோவை நான்எடுத்தால்அதை Cisco Meraki, பெங்களூருவில் வேலை பார்க்கும் நபரின் அம்மாவை போட்டோ எடுத்ததாகத்திரித்து இதே ஜெண்ட்லி ராஜ் எழுதிக்கொடுத்த பொய்ப்புகாரின் பேரிலும் வீட்டுக் கதவில் சம்மன் ஒட்டப்பட்டஆளுங்கட்சி அரசியல்வாதி கொடுத்த அழுத்தத்தின் பேரிலும்தான் நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்வரநேர்ந்ததுஉயர்மட்ட போலீஸ் அதிகாரி பேஸ்புக்கில் என் நெடுநாளைய வாசக நண்பர் என்பதால் அந்தப்பொய்ப் புகார் பிசிபிசுத்துப்போனதுஎழுத்தாளனாக இல்லாமல் எல்லோரையும் போல நானும் ஒரு காமன்மேனாக இருந்தால்அரசியல் அழுத்தத்தில் என் கதி என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்இதன்காரணமாகவே, ‘பயம்... வேதநாயகம்னா பயம்...’ என்று சொல்கிற சலீம் கவ்ஸ் போல ஜெண்ட்லி ராஜ் என்கிறபெயரையே வாட்ஸப்பில் சொல்லக்கூட வளாகத்தில் எல்லோரும் பயப்படுகிறார்கள்இப்போது சொல்லுங்கள்எல்லோரையும் மிரட்டிக்கொண்டு இருப்பது செகரெட்டரி ஜெயகுமாரா அராஜக அயோக்கியப் பேர்வழியானஜெண்ட்லி ராஜா.

4. பேசும் பெண்மணியின் பையன் Forensic தடயவியல் டிபார்ட்மெண்ட்டில் இருப்பதாக அவரே கூறுகிறார். 

மகனே இந்த ஆடியோவின் உண்மைத் தன்மையைப் பற்றிச் சொல்லிவிடுவாரே. 

5.     பெண்மணிதாமே செகரேட்டேரியட்டில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்கிறார். 

அரசு இயந்திரத்தின் மையக் கேந்திரமான செக்கரெட்டேரியட்டுக்கு இல்லாத செல்வாக்கா. இவர் எதற்கு ஜெண்ட்லி ராஜை நாடுகிறார் என்பது நியாயமான சந்தேகமா இல்லையா. இவையெல்லாம்தான் ஜெண்ட்லி ராஜின் சித்துவேலையே இது என்பதை உறுதிப்படுத்துகின்றன

ஒரு சிலருக்குதான் இப்படி அசிங்கமா அனுப்பறாங்க’ என்று எடுத்துக்கொடுக்கிறார் ஜெண்ட்லி ராஜ் 

அசிங்கமா கிடையாது. ஹ்யுமிலிட்டிங்கா இருக்கு என்று உடனடியாக மறுக்கிறார் அந்தப் பெண்மணி. ஜெண்ட்லி ராஜ் இந்த ஓவர் ஆக்டிங் உனக்குத் தேவையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

ஹவுசிங் போர்ட் பீப்புள் என்ன சொல்றாங்கன்னா கைய ஒதற்றாங்க பேரைக்கேட்ட ஒடனே என்கிறார் பெண்மணி 

இதற்கு ஹ்ம் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார் ஜெண்ட்லி ராஜ். நாம்தானே எல்லோரையும் போலீஸ் கோர்ட்டு கேஸு என்று மிரட்டிக்கொண்டிருப்போம், இதற்கு என்ன சொல்வது என ஒரு நொடி ஜெண்ட்லி ராஜே குழம்பிவிட்டிருக்கவேண்டும். 

ஹவ்சிங் போர்ட்லையே கட்டுங்க மேடம் அதுதான் பெஸ்ட்டு. இவங்களோட இது வந்து இன்னும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மாசம் ஆட்டம் ஆடுவாங்க. அதுக்கப்பறம் குளோஸாகிடும். கோர்ட்ல வந்து முடிஞ்சிடும் கத.’  

யார் கதை முடிந்தது என்பதுதான் 03.07.2024 அன்று ஹைகோர்ட் அளித்த ஜெண்ட்லி ராஜ் கேஸ் டிஸ்மிஸ்டு  என்கிற தீர்ப்பில் தெரிந்துவிட்டதே. அதனால்தானே பைத்தியம் பிடித்ததைப்போல எப்போதோ பேசிய - ஜெயகுமார் பெயரே இல்லாத - ஆடியோவை வெட்டி ஒட்டி போட்டு, மண்ணைக் கவ்வி உடம்பெல்லாம் புழுதியாகிக் கிடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக்கொள்ள கலர் கலராக ரீல் விட்டிக்கொண்டு இருக்கிறார் – அந்தப் பெண்மணியின் பேச்சில் 4 நிமிடம் 5ஆவது நொடியில் வரும் ஜெண்ட்லிய எதாவது பண்ணிடுவாங்களோனு’ (ஜெண்ட்லிதானே எதாவது பண்னிக்கொண்டிருப்பார் அவரை யார் என்ன பண்ணப் போகிறார்கள் என்று தோன்றுகிறதல்லவா. இதிலேயே தெரியவில்லையா, ஜெண்ட்லியைப் பற்றிய பெண்மணியின் புகாரை டகால்டியாக ஜெயகுமார் பற்றியதைப்போல ஜெண்ட்லி திரித்துவைக்கிறார் என்பது.  

பாவம் கவனமாக ஆரம்பத்தை வெட்டியவர் ஜெண்ட்லிய என்கிற வார்த்தையை வெட்டத் தவறிவிட்டு அல்லது வெட்டமுடியாமல் விட்டுவிட்டு மாட்டிக்கொண்டு ஃபோர்ஜரியில் உள்ளே போகப்போகிறார். 

தடயமே இல்லாமல் குற்றமிழைக்க ஒருவன் இனிமேல்தான் பிறந்து வந்தாகவேண்டும் என்பது அனுபவ மொழி. தடயமே இல்லையென்றால் நாம் கூர்ந்து கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான் நிஜம் - ‘ஜெண்ட்லிய’ என்று இதில் இருப்பதைப்போல.