//தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.
பதிவு செய்த கிரைய ஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடி யூனிட்டி சங்கம் அமைத்தது தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது. அந்த சங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்கு அந்த சங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் யூனிட்டி சங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல் அந்த விசாரணைக்கு தன்னை உட்படுத்தி சட்ட நிலையை சந்திக்க வேண்டும்.
ஆனால் யூனிட்டி சங்கம் தொடர்ந்து நமது வளாக சொத்துக்களில் பல வில்லங்கம் ஏற்படுத்தி வருகிறது. சட்ட விரோதமாக யூட்டிலிட்டி பிளாக்கை வாடகைக்கு விடுவது பராமரிப்பு தொகையை வசூல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே நாம் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் நமது வளாக சொத்துக்கள் common amenities, Utility Block STP, Lift , Fire, Solar, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல வகைகளில் வில்லங்கம் ஏற்பட்டு நமக்கு ஈடு செய்ய முடியாத பண இழப்பும் மன உளைச்சலும் ஏற்படும். ஆகவே யூனிட்டி சங்கம் தனது சட்டவிரோத செயல்பாடுகளின் நிறுத்த வேண்டியும் அந்த சங்கம் மீதான புகார்களை சட்டப்படி சந்திக்க வேண்டியும் அதுவரை தனது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு யூட்டிலிட்டி பிளாக் முன்பு நடைபெறும் விளக்கக் கூட்டத்திற்கு கூடி வரவேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட சங்க பதிவாளர் புகாரின் நிமித்தம் விளக்கம் கோரி கேட்ட நோட்டீஸ் தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.//
- ஜெண்ட்லி ராஜ்
***
//பதிவு செய்த கிரைய ஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடி யூனிட்டி சங்கம் அமைத்தது தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது.//
ஜெண்ட்லி ராஜ், வைத்திருந்த டுபாகூர் சங்கத்தில் ஓனர் என்று யார் இருந்தார்கள். மெம்பராக இருந்த ஏழில் 3 அலாட்டி 4 ஹேர்கள்தானே.
ஓனர்களே இல்லாத அந்தச் சங்கத்தை எந்தச் சட்டத்தின் கீழ் இவர் பதிவு செய்தார்; யூனிடி அசோசியேஷனைப் பற்றிக் கேட்க.
முதலில் ஜெண்ட்லி ராஜ் என்கிற இந்த நபர் யார் இவர் இருக்கும் வீட்டுக்கு இவர் எப்படி அலாட்டி ஆனார் என்று பார்க்கலாமா.
இவர் இருக்கும் HIG 06/03 வீடு, ஆரம்பத்தில் இவருடைய அப்பா பெயரில்தான் இருந்தது. அதில் இவர் சும்மா ‘இருந்துகொண்டு’ இருந்தார். ஓனராகவோ அலாட்டியாகவோ இல்லாதவர் அசோசியேஷன் தேர்தலிலேயே நிற்கமுடியாது என்று சட்டம் இருப்பது தெரியவந்ததும் அதற்காகவே, தன் பெயரை அப்பாவின் பெயரோடு இணைத்துக்கொண்டு ஜாய்ண்ட் அலாட்டி ஆகிவிட்டார்.
TNHB 1500 வளாகத்திற்கு ‘சேவை செய்ய’ – காந்திக்குப் பின் - இவ்வளவு ஆர்வமும் ஆசையும் உள்ள வேறொரு ஆளைப் பார்க்கமுடியுமா. இன்னும்கூட இவர் கிரைய ஆவணம் சேல் டீடு பெறாத அலாட்டிதான். ஓனரில்லை. ஆனால் அதை கோர்ட்டில் மட்டுமே சொல்வார். உங்களிடமும் என்னிடமும் தன்னை ஓனர் என்று சொல்லிக்கொள்வார் இந்த கோயபல்ஸ்.
தானே, ‘அலாட்டி’யாக இருந்துகொண்டு ஒரு டுபாகூர் அசோசியேஷனை, அலாட்டிகூட இல்லாத 4 பேர் கையெழுத்தை வாங்கிக்கொண்டு மோசடியாக ரெஜிஸ்டர் செய்து நடத்தி பதிவாளர் அலுவலகத்தால் ரத்து செய்யப்பட்ட அவமானம் போதாது என்று, அந்த ரத்து செல்லாது என்று அறிவிக்கச்சொல்லி கோர்ட்டுக்குப் போய்வேறு ‘கேஸ் டிஸ்மிஸ்டு’ என்று முகத்தில் சாணியை அப்பிக்கொண்டு வந்ததில் செம காண்டாகி,
முறையான அலாட்டிகள் முறையாக பதிவுசெய்து முறையாக நடத்தும் யூனிடி அசோசியேஷன் ‘சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது’ என்று பினாத்திக்கொண்டு திரிகிறார்.
தான் ஒரு நடமாடும் பொய்; தன்னால் எந்த கேஸையும் ஜெயிக்கமுடியாது என்பது நன்றாகத் தெரிந்தும் பொதுஜன ந்யூஸன்ஸாக வக்கீல் ஜிகினாவுடன் ஏன் இப்படிக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார் ஜெண்ட்லி ராஜ் என்கிறீர்களா. செய்ய உருப்படியாக வேலை என்று இருந்தால் செய்யலாம். வேலையில்லாதவர் பாவம் வேறு என்னதான் செய்வார்.
ஜெண்ட்லி ராஜ் என்கிற இந்த நபர் சீரியஸாக வக்கீல்தானா இல்லை சிரிப்பு வக்கீலா என்கிற சந்தேகம் வருகிறதல்லாவா. சந்தேகமே வேண்டாம். இவர் சிரிப்பு வக்கீலேதான். இந்த வளாகத்தில் போட்டிருக்கிற கேஸ்களை விட்டால் இவரிடம் வேறு என்ன கேஸ் கட்டுகள் இருக்கின்றன என்று சொல்வாரா. பேச்செல்லாம் ஜெத்மலானி லெவல்தான். நடைமுறைச் செல்வாக்கெல்லாம் மீன் கடை கீரைக்கடை ரேஞ்சில்தான்.
யூனிடி அசோசியேஷன் ‘சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது’ என்று கூற ஜெண்ட்லி ராஜ் என்கிற இந்த நபருக்கு அடிப்படையில் என்ன வக்கு இருக்கிறது.
//அந்த சங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்கு அந்த சங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது.//
ஜெண்ட்லி ராஜின் அசோசியேஷனின் பதிவை ரத்து செய்த பதிவாளரிடம் இவர் கொடுத்திருப்பது, வழக்கம்போல கண்டதையும் போட்டுக் குட்டையைக் குழப்புகிற ஒரு டுபாகூர் புகார்தான்.
அதற்கு விளக்கம்தான் கேட்டிருக்கிறார்கள். இது, புகார் என்று எவர் கொடுத்தாலும் நடக்கிற சாதாரண நடைமுறை மட்டுமே.
அதற்குள், யூனிடி அசோசியேஷன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. பதிவு செய்தது செல்லாது நொள்ளாது என்று இவரே இஷ்டத்துக்கு ரீல் விட்டு தீர்ப்பும் எழுதிக்கொள்கிறார். இதெல்லாம் எழுதப் படிக்கத் தெரியாத, ‘வாயில்லா ஜீவனான தெருநாய்க்கு ஊட்டான்ண்டையே சோறு போட்டா நல்லது நடக்கும்’ என்று கேட்டாண்ட கூடப் போகாத பாமர கும்பலிடம் வெண்டுமானால் எடுபடலாம். சட்டத்தின் முன் செல்லாது.
TNHBயில் பேதுரு முதலாக அத்தனைப் பேரையும் வளைத்துப் போட்டுக்கொண்டும், ‘எனக்கில்லே எனக்கில்லே சொக்கா ஆயிரம் பொற்காசுகள் எனக்கில்லே’ என்று திருவிளையாடல் தருமியைப் போலத் தன்னைப் புலம்ப விட்டுவிட்ட யூனிடி அசோசியேஷன் இயங்கக்கூடாது நாசமாகப் போகவேண்டும் என்பது ஒன்றே இவரது இலக்கு. அர்ஜுணன் குறி அலகுல என்பதைப்போல தன் நோக்கத்தை அடைய எந்தப் பொய்யையும் புரட்டையும் அவிழ்த்துவிடுவார் ஜெண்ட்லி ராஜ். அவற்றில் ஒன்றுதான் இந்த ‘விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.’ துரதிருஷ்டவசமாக அதிருஷ்டம் இவருக்கு ரொம்ப தூரத்தில் நின்று வவ்வவ்வே காட்டிக்கொண்டு இருக்கிறது எப்போதும்.
//இந்த சூழ்நிலையில் யூனிட்டி சங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல்//
இவர் ஒரு புகார் கொடுத்துவிட்டால் எல்லோரும் போய் புழலில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற இந்த காமெடிப் பீஸையெல்லாம் பார்த்து, நம் மேல் கேஸைப் போட்டுவிடுமோ எனப் பிதிறிக்கொண்டு, இது நடத்தும் வாட்சப் குரூப்பில் இருந்துகூட வெளியில் வர பயப்படுகிறவர்களும் ஜெண்ட்லி ராஜ் என்கிற பெயரைச் சொன்னால் எங்கே மானநட்ட வழக்கு பாய்ந்துவிடுமோ என்று நக்கல் செய்வதாக நடித்துக்கொண்டு ஜெண்டில்மேன் என்று வாட்ஸப்பில் குறிப்பிடும் தைரியசாலிகளும் இருப்பதுதான் வளாகத்தின் பெரிய நகைச்சுவை. மனிதனாகப் பிறந்தவனுக்கு முதுகெலும்பு என்று ஒரு உறுப்பு இருக்கவேண்டாமா. அதுவே இல்லாமல் என்ன படித்து எந்த பதவியில் இருந்து எவ்வளவு சம்பாதித்துதான் என்ன.
//அந்த விசாரணைக்கு தன்னை உட்படுத்தி சட்ட நிலையை சந்திக்க வேண்டும்.//
என்று யார் சொல்வது. ஹைகோர்ட்டால் ‘கேஸ் டிஸ்மிஸ்டு’ என்று சர்ட்டிபிகேட் வாங்கிக்கொண்டு வந்த ஆள் சொல்கிறார்.
//ஆனால் யூனிட்டி சங்கம் தொடர்ந்து நமது வளாக சொத்துக்களில் பல வில்லங்கம் ஏற்படுத்தி வருகிறது.//
என்னது ‘நமது சொத்தா’.
இவர் ஆட்டையைப் போடமுடியாமல் யூனிடி அசோசியேஷன் தடுத்து நிர்வகித்துக்கொண்டு இருக்கிற பொதுச் சொத்துக்களை என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். நான் என்பதை நாம் என்று எவ்வளவு கெத்தாகச் சொல்லிக்கொள்கிறார் பாருங்கள்.
//சட்ட விரோதமாக யூட்டிலிட்டி பிளாக்கை வாடகைக்கு விடுவது பராமரிப்பு தொகையை வசூல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.//
தமிழ்நாடு அரசு முத்திரையோடு அதிகாரியின் பச்சை மை கையெழுத்தோடு 01.05.2024 முதல் ‘யூனிடி அசோசியேஷனுக்கு மட்டுமே’ மெய்ண்ட்டனன்ஸைக் கட்டச் சொல்கிற இதைப்போய், சட்டவிரோத ஆவணம் என்கிறார் பாருங்கள் இந்த சிரிப்பு வக்கீல் ஜெண்ட்லி ராஜ்.
இதே போல் யுடிலிடி ப்ளாக்கும் யூனிடி அசோசியேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆவணம் அசோசியேஷனிடம் உள்ளது, வேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளலாம்.
வாட்சப்பில் கேள்வி வடைகளாக சுட்டுத்தளிக்கொண்டு இருப்பவர்களுக்கே நேரில் வாருங்கள் காட்டுகிறோம் என்று வெளிப்படையாகச் சொல்கிற நலச்சங்க நிர்வாகம், ஹைகோர்ட் வக்கீலுக்கா காட்டமாட்டோம் என்று சொல்லிவிடப்போகிறது. எதையும் பார்ப்பதெல்லாம் இவர்களுக்கு நோக்கமில்லை. வெற்றிகரமாக இயங்குகிற அசோசியேஷனை எப்படியெல்லாம் இயங்கவிடாமல் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு முட்டுக்கட்டை போட்டு முடக்கலாம் என்பதே இவர்களின் ஒரே சிந்தனை. தனக்குக் கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கக்கூடாது என்கிற நல்லெண்ணம்.
ஆனால் ஜெண்ட்லி ராஜ் அசோசியேஷன் ஆபீசுக்குப் போய்க் கேட்டது ஆவணமில்லை -
‘எவ்வளவு வேணும்’
//எனவே நாம் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால்//
சும்மா குரூப் குரூப்பாக, வாய்க்கு வந்ததைக் கைக்கு வந்தவண்ணம் தப்பும் தவறுமாய் எழுதிப் போட்டுக்கொண்டு இருக்காமல் முதலில் யூனிடி நலச்சங்கம் செய்வதெல்லாம் சட்டவிரோதம் என்று ஆதாரபூர்வமாய் நிரூபியுங்கள் ஜெண்ட்லி ராஜ். அப்புறம்தானே எதிர்ப்பு கிதிர்ப்பு எல்லாம் தெரிவிக்கமுடியும்.
//நமது வளாக சொத்துக்கள் common amenities, Utility Block STP, Lift , Fire, Solar, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல வகைகளில் வில்லங்கம் ஏற்பட்டு நமக்கு ஈடு செய்ய முடியாத பண இழப்பும் மன உளைச்சலும் ஏற்படும்.//
அண்ணாத்தை ஜோசியம் சொல்கிறாரா இல்லை ஆட்டையைப்போட இவையெல்லாம் தனக்குக் கிடைக்காமல் போய்விட்டனவே என்று மன உளைச்சல் கிளைச்சல் என அழுது புலம்பி சட்டையைக் கிழித்துக்கொள்கிறாரா.
//ஆகவே யூனிட்டி சங்கம் தனது சட்டவிரோத செயல்பாடுகளின் நிறுத்த வேண்டியும்//
சட்டவிரோத செயல்பாடு என்று எதாவது ஒன்றைச் சட்டப்படி நிரூபித்துவிட்டுப் பேசுவதுதானே சரியாக இருக்கும்.
//அந்த சங்கம் மீதான புகார்களை சட்டப்படி சந்திக்க வேண்டியும்//
ஒரு 420 எத்தனை முறை சட்டம் சட்டம் என்கிறது பாருங்கள். யூனிடி சங்கம் சட்டப்படி சந்தித்ததால்தானே ஜெண்ட்லி ராஜ் கிண்டிப் போட்ட உப்புமா கேஸ் சந்தி சிரிக்கும்படி உயர்நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆனது. இன்னும் எவ்வளவு அவமானங்களைப் படவேண்டும் என்று இவர் ஆசைப்படுகிறாரோ தெரியவில்லை.
//அதுவரை தனது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.//
டம்மிப் பீஸான அய்யா பெரிய அரசு ஆபீஸர் மாதிரி ‘கேட்டுக்கொள்ளப்படுகிறது’னு ஆர்டர் போடறாரு பாத்தீங்கில்ல.
//இது குறித்து வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு யூட்டிலிட்டி பிளாக் முன்பு நடைபெறும் விளக்கக் கூட்டத்திற்கு கூடி வரவேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.//
எல்லாம் நல்லபடியா கூடிவரும். நாலஞ்சு பேரோட. அதான் பாத்தோமே நீங்க நடத்தின கிறிஸ்மஸ் கூட்டத்துலையே மூணு குடும்பம் மட்டுமே இருந்ததை.
எனக்கு எதிரா நீங்க கம்ப்ளெய்ண்ட் எழுதிக் குடுத்த குடும்பமே கூப்பிட நீங்க வந்துட்டா என்ன பண்றதுனு வீடைப் பூட்டிக்கிட்டு எஸ்கேப் ஆகிடுச்சே. நாய்க்கு சோறு போட்டலும் நன்றிகெட்ட உலகம் ஜெண்ட்லி இது.
//மாவட்ட சங்க பதிவாளர் புகாரின் நிமித்தம் விளக்கம் கோரி கேட்ட நோட்டீஸ் தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.//
ஒருவர் புகார் கொடுத்தால் அது குறித்து மறு தரப்பைக் கேட்பது என்பது வழக்கமான நடைமுறை. இதைப்போய் ஏதோ ‘வெற்றிமாரனின் விசாரணை’ போல என்ன பில்டப் கொடுக்கிறார் பாருங்கள் ஸீக்ரெட் வக்கீல் ஜெண்ட்லி ராஜ். இவர் போடும் கேஸ்களை விட்டால் இவரிடம் எவ்வளவு கேஸ்கட்டுகள் இருக்கின்றன என்பது இவருக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம் என்பதால் இவர் அட்வகேட் ஸீக்ரெட் ராஜ் என்றும் அழைக்கப்படலாம்.
தன் அசோசியேஷனை ரத்து செய்த ரெக்கார்டுகள் இருக்கிற அதே பதிவாளரிடம் போய், அவர் பதிவு செய்த இன்னொரு அசோசியேஷனை செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி மனு கொடுத்தால், கொடுப்பவனைப் பார்த்து வழித்துக்கொண்டு சிரிப்பார்களே என்று கூடவா வக்கீலுக்குப் படித்தவருக்குத் தோணாது. ‘ஆசை வெட்கம் அறியாது’ என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்.
இவர் அளித்திருக்கும் புகாரில் இருக்கிற அடிப்படைக் கோளாறே, ஹைகோர்ட் சொன்னதன் பொருளைப் புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு, பதிவாளருக்கு பூச்சாண்டி காட்ட, ஒப்புக்காக 03.07.2024லில் ஹைகோர்ட் டைரக்ட் செய்தபடி என்று உருட்டிப் புரட்டுகிறது என்பதுதன். டிஸ்மிஸ் ஆன கேஸ்ல அப்படி என்ன டைரக்ஷன் கொடுத்திருக்கும் ஹைகோர்ட்டு என்று தீர்ப்பைப் படித்துப் பார்க்கமாட்டாரா பதிவாளர்.
தன் அசோசியேஷனின் பதிவை ரத்து செய்தது செல்லாது என்று ஜெண்ட்லி ராஜ் போட்ட கேஸை டிஸ்மிஸ் செய்த கனம் கோர்ட்டார் 03.07.2024 அன்று வழங்கிய தீர்ப்பின் 9ஆம் பத்தியில் சொன்னது என்ன.
9. Various submissions have been made to assail the registration of the third respondent association itself. However these submissions would not require to be adverted to, for the reason that such registration, is not under challenge. Suffice it to state if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law.
//if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law.//
//அங்கே வசிப்போர் எவருக்கேனும் R3 அசோசியேஷன் (யூனிடி அசோசியேஷன்) பற்றி எதேனும் குறையிருந்தால், அதை முதல் மனுதாரர் (ஜெண்ட்லி ராஜ்) இடம் கொண்டு வந்தால் அது சட்டப்படி முடிவெடுக்கப்படவேண்டும்// என்பதுதானே கனம் கோர்ட்டார் சொன்னது.
அதற்கு என்ன அர்த்தம்.
கேஸ் என்னவோ அதைப் பத்திப் பேசு. கேஸ் உன் அசோசியேஷனை ரத்து பண்ணினது செல்லுமா செல்லாதாங்கறதைப் பத்திதானே, அதை விட்டுட்டு ஏன் அந்த அசோசியேஷனைப் பத்திப் பேசறே. அதுவா கேசு. இதுதானே கோர்ட் சொன்னதன் பொருள். ஏண்டா கண்டதையும் பேசி என் கழுத்தை அறுக்கறே என்றா கோர்ட்டார் வெளிப்படையாகச் சொல்லமுடியும்.
அதையும் சொன்னது எப்போது 03.07.2024 அன்று.
யூனிடி அசோசியேஷன் மீது குறை இருப்பதாகக் கூறி ஜெண்ட்லி ராஜ் கொடுக்கும் பட்டியலில் இருக்கிற தேதிகளெல்லாம் என்னென்ன
07.05.2023, 03.08.2023, 09.08.2023, 28.08.2023
இவற்றின் சரி தப்பெல்லாம் ஒருபுறம் இருக்க இவை எல்லாமே ஹைகோர்ட் தீர்ப்பளித்த 03.07.2024க்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் பழையவை அல்லவா.
கோர்ட் சொன்ன தேதிக்குப் பிறகு வந்த புகார் எதாச்சும் இருந்தா அதைப் பத்தி மட்டும் பேசு மேன் என்று ஹைகோர்ட் போலவே ரெஜிஸ்ட்ராரும் தலையில் குட்டு வைத்தால் என்னாவது. (தேய்த்துக்கொண்டு போவது. இதெல்லாம் நமக்குப் புதுசா)
இதோ இருக்கு பாருங்க 18.07.2024ல ஒரு அம்மா குடுத்த கம்ப்ளெய்ண்ட்.
என்ன கம்ப்ளெய்ண்ட்
தோரணம் தோரணமாகக் கொடி கட்டி, ஹவ்ஸ்கீப்பிங் பெண்களைத் துடைக்கப் பெருக்கவிடாமல் துணி காயப்போட்டதைக் கேட்கப்போன அசோசியேஷன்காரர்களுக்கு எதிராக போலீஸில் ஒரு பெண்மணி கொடுத்த புகார். அதில் மானே தேனே என்று இத்தைக் காணம் அத்தைக் காணம் என உப்பு பெப்பர் தூவி, அசோசியேஷனில் இருந்து வந்தார்கள்,மிரட்டினார்கள் என்கிற அடுக்கடுக்கான பொய்கள்.
சரிங்க கொடி கட்டின பிரச்சனைக்கு பொருள் காணாமப்போன பிரச்சனைக்கெல்லாம் பதிவாளர் என்னங்க பண்ணமுடியும். அதை போலீஸ் இல்லே டீல் பண்ணணும்.
என் அசோசியேஷன் ரெஜிஸ்ட்ரேஷனை கேன்சல் பண்ணினா மாதிரி, யூனிடி அசோசியேஷன் பதிவும் செல்லாதுனு அதோட ரெஜிஸ்ட்ரேஷனை ரத்து பண்ணி யுடிலிடி ப்ளாக்கை எங்கிட்டக் குடுத்துருங்க அதுபோதும் எனக்கு.
டுபாகூர் அசோசியேஷனை லெட்டர் ஹெட்டில் நடத்தித் தெருவோர தள்ளுவண்டி ஓட்டல்களிலும் காய்கறிக் கடைகளிலும் காரியம் சாதித்துக்கொண்டிருந்த போதுகூட ஜெண்ட்லி ராஜுடன் 3 பேர் இருந்தார்கள். யூனிடி அசோசியேஷன் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே போகப்போக சிரிப்பு வக்கீல் தன்னந்தனி ஆளாகி, யூனிடி அசோசியேஷனுக்கு எதிராக யார் எங்கே தும்முவார்கள் இருமுவார்கள் என்று தேடித் திரியத் தொடங்கிவிட்டார்.
சாயம் வெளுத்துவிட்டது. சட்டையைக் கிழித்துக்கொள்ளும் நிலை கூடிய சீக்கிரம் வந்துவிடும்.
03.08.2024.