***
//எனக்கு அன்பான வீட்டு உரிமையாளர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் இந்தக் குழுவில் சில அதிர்ச்சியான தகவல்களை பார்த்தேன் அதில் ஒன்று காலாவதியான பால் பாக்கெட் மனசாட்சியே இல்லாமல் இந்த வளாகத்தில் திடீரென்று ஒரு பால் கிடைத்திறந்து அதில் இவ்வளவு மோசமான பால் பாக்கெட்டை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள் அதையும் இவர்கள் வாங்கி பெற்றுக் கொண்டு வயதானவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் போனால் யார் அதற்கு பதில் கூறுவது சங்கம் நடத்துபவர்கள் இதை கருத்தில் கொண்டு அந்த கடையை மூட வேண்டும் உயிர்ச்சேதம் அதிகமாக நடந்துவிட்டால் பிறகு இவர்களை யார் காப்பாற்ற முடியும்.
வளாகத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் காலாவதியான பாலை குடித்து மடிவதற்கா நாம் இங்கு வீடு வாங்கி வந்தோம் இந்த அவல நிலையை யார் கண்டிப்பது இதற்கு நாம் ஓரணியில் நின்று அந்த பால் விற்பனை நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தி அதை மூடிவிட வேண்டும் அதற்கு உங்களுடைய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
அது மட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமை காலை எம் ஐ ஜி குடியிருப்பில் லிஃப்ட் தடைபட்டு போய் அதில் நான்கு நபர்கள் மாட்டிக்கொண்டு நான்கு மணி நேரம் அவதிக்குள்ளாகி உள்ளார்கள் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் இப்படி பல தவறுகள் குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கிறது இந்த சங்கத்தால் நாம் இதையெல்லாம் கடந்து போய் விட முடியாது இதற்கு ஒரு மாற்று வழி செய்தே ஆக வேண்டும் இதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் வாருங்கள் நமது உரிமையை வென்று எடுக்க உயிர் பாதுகாப்பு முக்கியம் காலாவதியான பாலை குடித்துவிட்டு முதியவர்கள் படுமோச நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டார்களானால் என்றால் நாம் ஒவ்வொருவரும் அதுக்கு பொறுப்பாக வேண்டும். குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் பாதிக்கப்படக்கூடாது ஒன்றுபடுவோம் போராடுவோம்
இப்படிக்கு உங்களில் ஒருவன்
டாக்டர் ஏ.கா. பாண்டியன்//
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் என்று சொல்லிகொள்கிற டாக்டர் ஏகாபா அவர்களேங்!
//காலாவதியான பால் பாக்கெட்//
என்று இந்தப் படத்தைத்தானே சொல்கிறீர்கள்.
என்ன சார் காமெடி பண்றீங்க.
ஒரு கட்சியோட மாநிலச் செயலாளரா இருந்தா பால் பாக்கெட் எப்படி இருக்கும்னு கூடத் தெரியாத அளவுக்கா மக்கள் கிட்டேந்து அந்நியப்பட்டு மரத்து உச்சீலபோய் உக்காந்துக்குவீங்க.
சரி அது கெடக்கட்டும்.
பால் லிட்டர்ல வருமா கிராம்ல வருமா டாக்டர் சார்.
கன்பூசிங்கா இருக்கா. இருங்க ஈசியா உங்களுக்குப் பிரியிறாப்பல கேக்கறேன்.
பால் திரவப் பொருளா திடப் பொருளா ஏ. கா. பாண்டியன் அய்யா.
இதுவும் கன்பூசியஸிங்கா இருந்தா இன்னும் சொலவமா கேக்கறேன்
பால் தண்ணியா இருக்குமா சட்டி மாதிரி கெட்டியா இருக்குமா
இப்ப புரிஞ்சிருச்சா. பால் திரவப் பொருள். எனவே அது லிட்டரில்தான் வரும். ஒரு லிட்டருக்குக் கொறைஞ்சா பால் அளவு ml என்று குறிப்பிடப்படும்.
மேல இருக்கற படத்துல ml போடல இல்லையா.
g னுதான போட்டிருக்கு. g னா கிராம் கரெக்டா.
வேணா கீய இருக்கிற பட்த்த கூடொ பாத்துக்குங்க. பால ml னும். தெடமா இருக்கிற வெண்ணெய gm கிராம்னும் குறிப்பிட்டிருக்கு ஆவின்.
அப்ப இது பால் இல்லே. கரீட்டா.
வேற என்னவா இருக்கும்னு யோசிங்க.
எங்கையாச்சும் பால் 275 ரூவாய்க்கு விக்குமா. அப்படிக் கொள்ளையோ கொள்ளை அடிச்சு விக்கிற ஆட்சி நடத்தற கட்சியோட, எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணில இருக்குமா.
சே சே இருக்காதில்ல.
அப்ப இது என்னவா இருக்கும். அதுக்குப் படிக்கணும் டாக்டர் சார்.
நாலு பேரைக் கட்சிக் கொடி போட்ட கார்ல தூக்கிப் போட்டுக்கினு வந்து, ‘டாய் பூய் கடைய மூடு கடைய மூடு’னு சவுண்டு விட்டு ரவுசு பண்ணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேரைக் கெடுக்காம, ஜெண்டிலா வந்து விலைப் பட்டியலைக் கேட்டு வாங்கிக்கிட்டுப் போயி உக்காந்து ஸ்டடி பண்ணியிருந்தா. இந்தக் கடைல 275 ரூவாய்க்கு விக்கிற பொருள் ரெண்டே ரெண்டுதான்னு தெரிஞ்சிருக்கும். அந்த ரெண்டும் பாலில்லேனும் புரிஞ்சிருக்கும்.
275 ரூவா அய்ட்டம் இன்னா இன்னானு பாப்பமா.
ஒண்ணு பனீர். இன்னோண்ணு சமையல் வெண்ணெய்.
//இந்த வளாகத்தில் திடீரென்று ஒரு பால் கிடைத்திறந்து//
2018ல ஊடு வாங்கினு, ஆறு வருசமா இங்கியே டேரா போட்டு உக்காந்திருக்கற எங்களப்போய், ரெண்டு மாசம் முன்ன ஊடு வாங்கினு வந்த, நீங்க சொல்ரீங்க ‘திடீர்னு பால் கிடைத்திறந்து’னு. உங்களுக்கே இது நியாயமா படுதா.
கி.ராஜநாராயணனைப் படிச்சிருந்தா கிடைனா இன்னான்னு தெரியும். உருப்படாத ஜெண்ட்லி ராஜோட சேந்தா என்னாத்தத் தெரியும். இது கடை. டாக்டர்னு போட்டுக்கினா பத்தாது பாஸ். அட்லீஸ்ட் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமையாச்சும் எழுதத் தெரியணும். ஓ. ஒருவேளை நீங்க ஊசி போடற டாக்டரோ. அப்படி இருந்தா ரியலி ஐயாம் சாரி.
இதுவரைக்கும் இந்த ஜெண்ட்லி ராஜ் இந்த வளாகத்துல என்னென்ன பொய்கேஸ யார் யார் மேல போட்டு இந்த அசோசியேஷனையே ஆரம்பிக்கவிடாம, TNHBயமெய்ண்ட்டனன்ஸை நலச்சங்கத்துக்கு ஹேண்டோவரே பண்ணவிடாம, யுடிலிடி ப்ளாக் அசோசியேஷன் கைக்கு வந்துடாம இருக்க எவ்ளோ அநியாயம் அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருந்தாப்பலனு உங்குளுக்கு எதாச்சும் தெரியுமா. முறையா தேர்ந்தெடுக்கப்பட்ட அசோசியேஷனுக்குப் போகவேண்டிய ‘பொதுச் சொத்து’ போயிடாம, ஜெண்ட்லி ராஜ்ங்கற ஒரு ஆள் கைக்குப் போறதுதான் ஜனநாயகமா சமூகநீதியா.
ஜெண்ட்லி ராஜ்ங்கற அந்த ஆள் பண்ணிக்கிட்டு இருக்கற பல உருட்டுகள்ல ஒண்ணுதான் இதுனே தெரியாம,. கண்னைத் தொரந்துக்கினே போய்க் கசுந்தடிச்சு தொபுகடீல்னு உழுந்திருக்கீங்க பாவம்.
//அதில் இவ்வளவு மோசமான பால் பாக்கெட்டை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்//
கிராம்ல இருக்கற பால் பாக்கெட்டைத்தானே சொல்றீங்க. அம்பேத்கர் பாவம் சார் அழுதுடுவாரு, இதுக்கா பாடுபட்டோம்னு.
தொல் திருமா சார் இந்த டாக்டர் ஏ. கா. பாண்டியன் மாதிரி நாலு ‘மாநிலச் செயலாளர்கள்’இருந்தா போதும் திரும்பி வரவே முடியாத தூரத்துல உங்களை எங்கையோ கொண்டுபோய் விட்டுடுவாங்க.
//அதையும் இவர்கள் வாங்கி பெற்றுக் கொண்டு வயதானவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் போனால் யார் அதற்கு பதில் கூறுவது சங்கம் நடத்துபவர்கள் இதை கருத்தில் கொண்டு அந்த கடையை மூட வேண்டும் உயிர்ச்சேதம் அதிகமாக நடந்துவிட்டால் பிறகு இவர்களை யார் காப்பாற்ற முடியும்.//
தத்துப்பித்துனு இன்னா தமிழ் இது.
உங்க எம்பி ரவிக்குமார் மாதிரி, மிஷேல் ஃபூக்கோ எடுவர்டோ கலியானோவைப் பத்தியெல்லாம் தமிழ்ல எழுதற அறிவுஜீவி இருக்கற கட்சில இருந்துக்கிட்டு, டாக்டர்னு வேற போட்டுக்கிட்டு இப்படியாங்க கன்றாவியா தமிழ் எழுதுவீங்க ஜெண்ட்லி ராஜ் மாதிரி;கிரய பத்திரத்தைக் கிரைம் பத்திரம்னு எழுதற ரிடையர்டு ஜட்ஜ் ஜீவானந்தம் மாதிரி.
அமைச்சர் மனோ தங்கராஜ் சார் பாருங்க உங்க ஆவின் பாலை எதோ கள்ளச்சாராயம் ரேஞ்சுல உயிர்ச்சேதம் தயிர்சாதம்னு பின்னி எடுக்கறார். நீங்க இவர் மேல நடவடிக்கை எடுக்கலைனா ஊர்ல ஒரு பய ஆவின் பாலைக் குடிக்கமாட்டான். சொல்லிட்டேன்.
//வளாகத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் காலாவதியான பாலை குடித்து மடிவதற்கா நாம் இங்கு வீடு வாங்கி வந்தோம்//
மான்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களே இப்ப உங்க ஏரியாலையும் பூந்து விளையாடறாரு பாருங்க டாக்டர் ஏகாபா.
இந்த 1500 குடியிருப்பு வளாகத்தைத் தெறந்து ஆறேகால் வருஷமாகியும் இன்னும் ஆயிரம் வீடுங்ககூட வித்தபாடில்லை. இப்ப வித்துக்கிட்டு இருக்கிறதே – 2018லையே வீடு வாங்கின எங்களுக்குக் கார் பார்க்கிங் குடுக்காம, அல்வா குடுத்துட்டு இந்த ஏ.கா. பாண்டியன் மாதிரி போனமாசம் அதுக்கு முந்தின மாசம் வீடு வாங்கறவங்களுக்கெல்லாம், அநீதியா பார்க்கிங்கோட தூக்கிக் குடுத்து வீடுங்களைத் ‘தள்ளிவிடறதாலதான்’ இவ்வளவாவது வித்துக்கிட்டு இருக்கு.. அதனாலதான் டகால்டியா இதோ குலுக்கல் அதோ குலுக்கல்னு தள்ளிப் போட்டுக்கிட்டே விட்டுங்களை கார் பார்க்கிங்கோட வித்துக்கிட்டு இருக்கீங்க. கோர்ட்டுக்குப் போய் மொத்தத்துக்கும் ஸ்டே வாங்காம எங்களுக்கு கார் பார்க்கிங் கிடைக்காது. நோ ப்ராப்ளம். நம்ப பஞ்சாயத்தைத் தனியா வெச்சுக்குவோம்.
விக்கிற ஊட்டுக்கும் ‘மடிவதற்கா’னு ஊரைக்கூட்டி ஒப்பாரி வெச்சு இங்க வீடே வாங்காதீங்கனு மொத்தமா சூனியம் வெக்கறாரு பாருங்க டாக்டர் ஏ கா பாண்டியன் சார். தோழமைச் சுட்டலா திருமா கிட்டக் கொஞ்சம் சொல்லிவைங்க, இது மாதிரி உங்க ஆட்கள் நமக்கே சேம் சைடு கோல் போடறது நல்லா இல்லேன்னு.
//இந்த அவல நிலையை யார் கண்டிப்பது இதற்கு நாம் ஓரணியில் நின்று அந்த பால் விற்பனை நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தி அதை மூடிவிட வேண்டும் அதற்கு உங்களுடைய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.//
அலைகடலென திரண்டு வாரீர்னு ஜாதி மத கார்ட்டையெல்லாம் காடி ஜெண்ட்லி ராஜ் கூட்டின கூட்டத்துக்கு ஒம்போது பேர்தான் வந்தாய்ங்க.
இவுரு அறைகூவுற முற்றுகைப் போராட்டத்துக்கெல்லாம் வெளில இருந்து ஆளைக் கொண்டாந்து இறக்கினாதான் உண்டு. ரெண்டு மாசம் முன்ன வீட்டை வாங்கி, அதையும் 15 நாள் முன்ன வாடகைக்கு விட்டுட்டு, வளாகத்துக்கு சம்பந்தமே இல்லாம வெளிய எங்கையோ இருக்கற ஆளு, காட்ல இருக்கற ஒரிஜினல் சிறுத்தையாவே இருந்தாலும் உள்ள வந்து முற்றுகைப் போராட்டம் செய்வோம்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லையா அமைச்சர் முத்துசாமி சார்.
பாத்துக்குங்க திருமா சார். நிச்சயமா இந்த மாதிர் ஆளுங்களாலதான் உங்கக் கட்சிப் பேரு கெட்டுப் போயிடுது. ஊதற சங்கை ஊதிட்டேன். அப்பறம் உங்க இஷ்டம்.
அரவிந்த் ரமேஷ் எம் எல் ஏ சார். கேரண்ட்டியா சொல்றேன், 1500 வீடுகள் இருக்கற ஏரியா இது. கிட்டத்தட்ட சின்ன ஊருனேகூட சொல்லலாம். இந்த பாண்டியன் அடிக்கிற கூத்தைக் கண்டுக்காம வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தீங்கன்னா, அடுத்த தேர்தல்ல, உங்கக் கூட்டணிக்கு, எண்னி பத்து ஓட்டாவது விழுமாங்கறது சந்தேகம். ஏற்கெனவே, உங்க ஆளே ஒண்ணு, உங்க போலீஸ் கிட்டேந்தே தலைமறைவா இருக்கு. உங்களுக்குத் தெரியாததில்லே பாத்துக்குங்க.
//அது மட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமை காலை எம் ஐ ஜி குடியிருப்பில் லிஃப்ட் தடைபட்டு போய் அதில் நான்கு நபர்கள் மாட்டிக்கொண்டு நான்கு மணி நேரம் அவதிக்குள்ளாகி உள்ளார்கள் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்//
லிஃப்ட்ல இருந்து தள்ளாடிக்கிட்டே நேரா ஹாஸ்பிடலுக்குப் போயிருந்தா அட்மிட் பண்ணி கேசாகி ஃபைனில்ல கட்டியிருந்திருக்கணும்.
வீக்கெண்டுனு ஏழெட்டு பேர் குடிச்சி கும்மாளம் போட்டுட்டு லிஃப்ட்டுல ஏறி லிஃப்ட்டு ரிப்பேராயிடுச்சினு லிஃப்ட் உள்ள மோதி குதிச்சி, லிஃப்ட்டையே ஒடுக்காக்கிட்டாங்க. போட்டோ போதுமா இல்ல போதைல தள்ளாடிக்கிட்டெ வெளிய வர, கோனேகாரங்க எடுத்த வீடியோ வேணுமா.
ஜெண்ட்லி ராஜ் கிறுக்கிக் குடுத்ததுல அடில பேரைப் போட்டுக்கிட்டு ஜோக்கராகிட்டீங்கனு இப்பையாச்சும் உங்களுக்கு உறைக்குதா டாக்டர் ஏ கா சமூகநீதி சார்.
//இப்படி பல தவறுகள் குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கிறது இந்த சங்கத்தால் நாம் இதையெல்லாம் கடந்து போய் விட முடியாது இதற்கு ஒரு மாற்று வழி செய்தே ஆக வேண்டும் இதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் வாருங்கள் நமது உரிமையை வென்று எடுக்க உயிர் பாதுகாப்பு முக்கியம் காலாவதியான பாலை குடித்துவிட்டு முதியவர்கள் படுமோச நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டார்களானால் என்றால் நாம் ஒவ்வொருவரும் அதுக்கு பொறுப்பாக வேண்டும். குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் பாதிக்கப்படக்கூடாது ஒன்றுபடுவோம் போராடுவோம்
இப்படிக்கு உங்களில் ஒருவன்
டாக்டர் ஏ.கா. பாண்டியன்//
ஏன் சார் எங்கிட்ட போன்ல நாப்பது நிமிஷம் பேசும்போது நீங்க எதோ பத்திரிகைக்கு இணை ஆசிரியர்னு சொல்லிக்கிட்டீங்களே,
பத்திரிகைக்கு ஆசிரியரா இருக்கறவங்க, காற்புள்ளி முற்றுப்புள்ளி கூட வைக்காம, ஒரு வாக்கியத்தைக்கூட ஒழுங்கா எழுதத் தெரியாம இவ்வளவு திராபையாவா தமிழ் எழுதுவாங்க.
இல்லே, பத்திரிகை ஆசிரியர்ங்கறதும் ஒருவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சில ‘மாநிலச் செயலாளரா இருக்கறேன்’னு விசிட்டிங் கார்டையே காட்டாம சும்மா வாயால சொல்லிக்கிறா மாதிரிதானா.
அதுசரி. உங்க விசிட்டிங் கார்டைக் கேட்டா திருமா கார்டை எடுத்து நீட்டறீங்களாமே ஏன் சார் உங்களுக்குனு ஒரு விசிடிங்கார்டு கூட வெச்சிக்காத அளவுக்கு நீங்க அவ்வளவு அடக்கமானவரா இல்லே உங்க விசிட்டிங்கார்டே திருமாங்கற பேர் மட்டும்தானா.
//எனக்கு அன்பான வீட்டு உரிமையாளர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்//
உங்களுக்கு இங்க யாரைத் தெரியும், எத்தனைப் பேரைத் தெரியும் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க பாப்போம்.
திருமாவளவன் பேரைக் கெடுக்காம கொஞ்சம் சும்மா இருங்க டாக்டர் ஏ.கா. பாண்டியன் சார்.
08.08.2024
பெறுநர்: மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்
பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
Dr. K. Gopal IAS., Additional Chief Secretary to Government
Thiru R. Yesudoss Kennedy, Additional Secretary to Government
நகல்கள்: 1. மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு (CM Cell)
2. மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
3. திரு. அரவிந்த் ரமேஷ் MLA
சோழிங்கநல்லூர்
4. திரு. தொல். திருமாவளவன், MP
5. திரு. ரவிக்குமார் MP
6. Dr S. Vineeth, IAS., Managing Director, Aavin
7. Police Commissioner, Chennai