Miklos Jancso - The Round-Up (Svegénylegények)
தீவிர ஸ்மார்த்தனுக்கு ஸ்ருங்கேரி போல திரைப்பட மாணவனுக்கு ஹங்கேரி.இந்தப் படத்தை சென்னை ஃபில்ம் சொஸைட்டியில் பார்த்தேன். ஹங்கேரி படம். நிக்லோஸ் யான்ஸ்கோ என்கிற புகழ்பெற்ற இயக்குநரின் 1966ல் எடுக்கப் பட்ட படம். நான் பார்த்தது 80களின் இடையில் இருக்கலாம்.
19ம் நூற்றாண்டின் ஹங்கேரி, ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. பொது மக்களும் தேசியப் போராளிகளுமாக ஆஸ்திரியப் படையால் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் போராளிகள் அடையாளம் கண்டு பிரித்தெடுக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் எந்தெந்த வகையிலான தந்திரோபாயங்களை மேற்கொள்கிறார்கள். உலுக்கி எடுத்த படம்.