08 January 2011

அடையாளம்

க்ரியா ஸ்டாலில் வீடு போல விரிக்கப்பட்டிருந்தது பாய். க்ரியாவை 80களில் இருந்து பைலட் தியேட்டர் பக்கத்தில் இருந்த காலத்தில் இருந்தே பார்த்தவன் ஆதலால் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை. 

ஒரு அடர்கருமீசைப் பையர் பில்லுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். முதுகில் தட்டினேன். சிரித்தார். ஈரடியில் தாண்டி உள்ளேபோய் திலீப்குமாரின் கடவு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவர் முதுகில் தட்டினேன். சார் என்றார் சிரித்தபடி. 

07 January 2011

அசோகமித்திரனுக்கு சாரல் விருது!

ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது
50,000/- பரிசுத்தொகை கொண்ட விருது.


09- 01- 2011 - ஞாயிற்றுக்கிழமை
மாலை - 6 00 மணி
இடம் - பிலிம்சேம்பர் ,சென்னை.

புத்தகக் கண்காட்சி - ஜி.நாகராஜன் - குறத்தி முடுக்கு

காலச்சுவடு வெளியீடு

புத்தகக் கண்காட்சி - பிரமிள் படைப்புகள்

வெளியீடு: அடையாளம் புத்தகக் கண்காட்சியில் கடை எண் 247

புத்தகக் கண்காட்சி - பிரமிள் கவிதைகள்

வெளியீடு: அடையாளம் புத்தகக் கண்காட்சியில் கடை எண் 247

06 January 2011

அவமானங்களைக் கடந்தால்தான் ஆன்மீகம்.

கோயம்புத்தூர் டாக்டர் கோமானே!

நாங்கள்ளாம் அண்ணாவாட்டம். 67 தேர்தல்ல, காங்கிரஸ்காரனுவ ’தேவடியாளுக்குப் பொறந்த திருமகனே’ அப்பிடின்னு எழுதின தட்டியை, இருட்டுலக் கொண்டாந்து திமுக ஆஃபீஸ் மின்னால வெக்கிறாய்ங்க. 

கூட இருக்கறவங்க எல்லாம் கொதிக்கிறாங்க. அமைதியா சொல்றார் அண்ணா:

ரெண்டு பெட்ரோமாக்ஸ் லைட்டை எடுத்துத் தட்டிக்கி ரெண்டு பக்கமும் வைங்க போற வர்ரவங்க நல்லா படிக்கட்டும்னு.

03 January 2011

சத்தமில்லாத சாதனையும் ஆர்பாட்டமில்லாத ஆதரவும்

அமெரிக்கவாழ் தமிழர்களால் ஆண்டுதோறும் நவீன தமிழ் இலக்கிய சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விளக்கு பரிசு 02.01.2011 அன்று திலீப்குமாருக்கு வழங்கப்பட்டது. அசோகமித்திரன் வழங்குகிறார்.

01 January 2011

முட்டாளுக்கு மூணு மொக்கை

கோழை

எல்லோரும் அறிய
காறிவிட்டு
எத்துனை நேரம்தான்
வாயிலேயே 
வைத்திருக்க உத்தேசம்.

நாளை மற்றுமொரு நாளே

ramji yahoo - New year in front of computer monitor thaana? boss10:03 pm (IN BUZZ)

அன்பான ramji yahoo 
திருமணத்திற்கு முன்னால் சரியாக 12 மணிக்கு ஏதேனும் ஒரு கடற்கரையில் பெரும்பாலும் மெரினா அல்லது பெஸண்ட் நகர் கடல் அலைகளுக்கு முன்னால் கண்மூடி அமர்ந்திருப்பேன். Far From The Madding Crowd. 

31 December 2010

ஸ்ரீலஸ்ரீ

உண்மை ஞானத்துடன் ஊழிக்கூத்தாடும் ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை தொகுப்பில் இருந்து

ஸ்ரீலஸ்ரீ

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மெலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

*******************************

இந்தக் கவிதையை எந்த ஒரு புத்தகமும் படிப்பது போல் வாசித்து இருப்பீர்கள். முடித்ததும் ஒரு குறுநகை உதட்டோரம் தவழ்ந்து கொண்டு இருக்கும்.

ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக இன்னொருமுறை கொஞ்சம் வாய்விட்டுப் படியுங்கள்.

கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு

போல ராகம் போட்டு படித்தால் கவிதை புதிதாய்த் தெரியும்.
உள் அர்த்தங்கள் புரியும்.
போலி ஆன்மீகம் புலப்படும்.
புரட்சிக்காரன் எழுத வேண்டிய கவிதை.
பாவப்பட்ட இலக்கியவாதியான கவிஞர் ஞானக்கூத்தன் எழுதி இருக்கிறார்.

ஆஃபீ சுக்கு டைமாச்சு
மாலை வந்து பேசிக்கறேன்
பேசிக்காக நான் சொல்ல
வந்தது என்ன புரிகிறதா?

காமாட்சிக்கும் டாடா பை
கொமட்லகுத்து. வேணாம் பொய்
மாமல்லன்டா மாமல்லன்
மாமா இல்லே நான் மல்லன்

ஸியா!

30 December 2010

எட்றெட்றா நாக்குமுக்க நாக்குமுக்க நாக்குமுக்க

சட்டபூர்வ நடவடிக்கை எடு!

ஆதாரம் இல்லாமல் ஒருவனை ஊழல் பேர்வழி லஞ்ச லாவண்யம் இடைக்காலப் பணி நீக்கம் என்று அத்தனை பண்ணாடைகள் அவதூறு செய்ததற்கும் சேர்த்து காக்கா குருவி பன்னி மேல் நடவடிக்கை எடு!

நான் வகிக்கும் பதவிக்கு, அனுமதி வாங்க வேண்டிய அனைத்திற்கும் அனுமதி வாங்கி இருக்கிறேன். அறிவிக்க வேண்டிய அனைத்தையும் அரசுக்கு அறிவித்தும் இருக்கிறேன்.

29 December 2010

சாட் பூட் த்ரீ

காஞ்சிக் கோயிலிலே காமாக்ஷி தரிசனம்

சனம் நிக்கிது சைடால கிட்டிமுட்டி
வந்தார் ஐயா வண்டி கட்டி

”சட்டையக் கழட்டுங்கோ
ஸ்பெசல் தரிசனம் பார்க்கலாம்
உள்ளே வாங்கோ
கர்ப க்ருஹத்துக்கு எதுத்தாப்புல
ஒக்காந்துக் கோங்கோ”

தட்டிலே விழுகின்ற தட்சணை பார்த்துப்
பின் முறுவலிக்குது பித்தளை கேட்டு

28 December 2010

கவியும் சிறுவனும்

ஓவியம் ஆதிமூலம்

ஒட்டகம்

ஆயிரம் முறைகள் எண்ணிப்
பார்த்தபின் முடிவு கண்டேன்
ஒட்டகம் குரூபி இல்லை

26 December 2010

விடிஞ்சுடுத்தோ!

எவன் விழாவாக இருந்தாலும்
அழையா விருந்தாளியாய்
வாசலில் கடைபரப்பு.

ஆரம்ப இதழ்முதல்
விலைபோகா சரக்கை
கொலுவாக வை
பாத்ரூம் போய்வருபவன்
பார்வையில் பட

ஷாப்பிங்போல
விண்டோ புரட்சி செய்
***************************

25 December 2010

உயிர்மையும் வினவும் சிரிப்பானும்

இருக்கவே இருக்கு


புரட்சிகர நூல்களை 

வெளியிடும் பிரமுகர்கள் யார்?


ஒருவர் நீரா ராடியாவின் சென்னைத் தோழியின் நெடுநாளைய நண்பர்

மற்றவர் செம்மொழி மாநாட்டின் கவின் முகப்புகளை அமைத்த கலைஞர்



இதிலென்ன பிரச்சனை


ஒரு பிரச்சனையும் இல்லை

இதனால் இவர்களின் அறிவும் கலையும் 

இம்மியும் குறைந்துவிடவில்லை



தத்துவம் கொள்கை 

தனிமனித உறவு

அனைத்தும் தனித்தனி
என்பதறியா புரட்சிக் குருடில்லை