23 January 2011

நான்கு கவிதைகள்


தொல்லை

மீசை முளைக்கும் முன்பாக
முன்னால் நீண்டது பல்லெனக்கு
சும்மா இருக்கும் போதினிலும்
சிரிப்ப தாகக் காட்டிற்று. 

22 January 2011

நமக்குக் கிடைத்தது நாட்டுடைமை

T N சேஷகோபாலன்

fromH. Abedeen 
tomadrasdada@gmail.com
dateSat, Jan 22, 2011 at 12:20 PM
subjectசேஷகோபாலன்
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 12:20 PM (2 hours ago)
அன்பு மாமல்லன்,


சேஷகோபாலனின் ’காக்கைச் சிறகினிலே'யை எனக்கு அனுப்பி வையுங்கள் தயவுசெய்து. நானும் ரொம்பநாளாக தேடிக் கொண்டிருக்கிறேன். உங்களின் பதிவிலும் மறுமொழியிட்டேன். ஆனால் 'google account' அங்கே கோளாறு செய்யும் என்பதால் மீண்டும் இப்படி.

நன்றி

ஆபிதீன்

***

21 January 2011

இலக்கியத்துல இதெல்லாம் சாதாரணமப்பா!

தி.ஜானகிராமன் 

இங்கே ஒரு எழுத்தாளன் - லலிதா ராம்


தற்செயலாக Giridharan Rajagopalan பஸ்ஸில்,
லலிதா ராம். 


பெயரைப் பார்த்ததும் ஒரு நன்றியுடன் கூடிய மலர்ச்சி. காரணம், 1983ல் இருந்து நான் தேடிக் கொண்டிருந்த சேஷகோபாலனின் காக்கைச் சிறகினிலே பாடலை மெய்ல் அனுப்பி வைத்தவர் என்கிற விதத்தில்.


நான் என்ன லா.ச.ராவா? | தமிழ் பேப்பர் என்றிருந்த கட்டுரையைப் படிக்கத் தொடங்கினேன். அநாயாசமாக எழுதிக் கொண்டு போகும் நடை. இடையிடையில் பருக்கையோடு கல் நிரடியது. கிரிதரன் பதிவில் பின்னூட்டமாய் எழுதத் தொடங்கி, வழக்கம் போல வளரத்தொடங்கியது. எனவே ”சில க்கன்னா ங்கன்னாக்கள்.” என தற்காலிகத் தலைப்பை வைத்துக் கொண்டேன். பதிவேற்றினால் ஒரு சிலருக்கேனும் உபயோகப் படக்கூடும் என நினைத்தேன்.

20 January 2011

அடித்துத் துவை

துவைப்பதென வந்துவிட்டால்
அடித்துத் துவை.

அழுக்குப் போகவேண்டும்
அதுதான் குறிக்கோள். 

18 January 2011

ஆறு கவிதைகள்

தற்செயல்

உயிர்த்தெழுதலில்
இருக்கிறதுன் இறவாமை.

எலும்பை மண் தின்னும்
அச்சடித்த காகிதத்தைக் கரையானாய். 

17 January 2011

ஊர் ரெண்டுபட்டால்....


இந்தத் தலைப்புக்கு சம்பந்தமே இல்லாமல் இப்படியொரு கேள்வி

கேள்வி: மாமல்லன், இந்த பதிவுக்கு உங்கள் பதில் என்ன ?  

16 January 2011

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை

ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. இது பிரமிளின் மிக முக்கியமான கட்டுரை. வெளியிடப்பட்டது டிசம்பர் 1984. 

15 January 2011

இருமுடிதாங்கி ஒருமனதாகி குருவெனவே வந்தோம்

தமிழ் இலக்கியத்தை உய்விக்க விஷ்ணுவின் பதினோராவது அவதாரமாக ஸ்பெசல் பிறவி எடுத்திருக்கும் முக்கால தெய்வமாம் ஜெயமோகன் அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வந்தனங்களுடனும் நன்றியுடனும்

12 January 2011

ஆயோன் பாயிரம் - 1

இஸ்ட்டும் ட்விஸ்ட்டும்


காரல் மார்க்ஸிஸ்ட்டு
ஃப்ரெட்ரிக் ஏங்கலிஸ்ட்டு
வ்ளாடிமிர் இலியிச் உல்யனோவ் லெனினிஸ்ட்டு
ஜோசெஃப் ஸ்டாலினிஸ்ட்டு
மா ஓ சே தோங்கிஸ்ட்டு
நக்ஸல்பாரியிஸ்ட்டு
லோக்கல் டச்சுக்குப் பெரியாரிஸ்ட்டு
அபயத்துக்கு அம்பேத்காரிஸ்ட்டு

ஆயோன் மூணு

புரட்சிகர திருமணங்கள் இதுவரை கார்ல் மார்க்ஸ் சாட்சியாக நடந்து வந்தன இனி காமாக்ஷியும் சே குவேராவும் பக்கம் பக்கம் நின்று ஆசீர்வதிப்பார்கள்


நக்ஸல்பாரிகளே காமாக்ஷிக் கருவறை நுழைய வேண்டாம் அட்லீஸ்ட் காயத்ரி மண்டபத்திலேனும் அம்பேட்கர் பெரியார் படங்களை சட்டைகழற்றி கையால் வைக்கலாமே


காஞ்சி போலவே மருவத்தூரும் அம்மாதான். அங்கும் ஸ்டிக்கரல்ல குங்குமத்தில் பொட்டும் சிவப்பிலே உடையும் உண்டு. அடுத்த புத்தக வெளியீடு அடிகளாரா


- அபிஷ்டாத்வைதம்

தமிழினி வசந்தகுமார் என்னும் புகைப்படக் கலைஞன்

இராசேந்திர சோழன்
அவர் பக்கத்தில் வசந்தகுமார் எடுத்த இராசேந்திர சோழன்
இருவரையும் சேர்த்து எடுத்த எனது ஐஃபோன்

11 January 2011

பேயோன் நீங்கள் எம்டிஎம் ஆக இல்லாவிட்டால்.....



பேயோன் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் என தொடர்ந்து, மூர்க்கமாக நம்பும் கூட்டத்தில் நானும் ஒருவன். 

பேயோனின் இரண்டு கதைகளை அவரது தளத்தில் படித்து அசந்து போய்விட்டேன். திருவனந்தபுரத்தில் இருக்கும் சுகுமாரனுக்கு - அவன் அங்கு இருப்பது போல இருக்கிறான் ஆனால் பெரும்பாலான சமயங்களில் கோவை, நாகர் கோவில், சென்னை பெங்களூர் என்று எங்காவது சுற்றிக் கொண்டே இருக்கிறான் என்பதால் திருவனந்தபுரத்தைக் குறிப்பிட்டாக வேண்டி இருக்கிறது. 

10 January 2011

ஸ்கூட்டரில் வந்த தோழர்

பிரமிள்
நவீன தமிழின் தலையாய கவி

08 January 2011

முதுகு திருப்பல் - புறமுதுகு அல்ல

1976 எஸ் எஸ் எல் ஸி

Lakshmi Chitoor Subramaniam (அம்பை) :
Nice photos Mamallan! How innocent you look! How come at present you are showing only your back? Is this what they call pura muthuku?!

விமலாதித்த மாமல்லன் :
Turn your back to the world, whole world will be at your back.- Vinoba bhave to Baba Amte.

Lakshmi Chitoor Subramaniam Good to know.

நடைபாதையில் தொழுநோயாளி ஒருவன், நோய் முற்றிய நிலையில் அழுகிக் கொண்டு கிடப்பதை தற்செயலாகக் காண நேர்கிறார் இளம் பாபா ஆம்தே.

பாபா ஆம்தே, வசதியான நிலபிரபுத்துவ அஹ்ரகாரத்து பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரால் அந்தக் காட்சியை எதிர்கொள்ள முடியவில்லை. அவரது உடனடிப் பின்வினை, அந்த இடம் விட்டு சட்டெனத் திரும்பி ஓட்டம் மட்டுமே. 

மனம் கொஞ்சம் சமநிலைக்கு வந்ததும் தம் செயலுக்காக வருந்துகிறார். திரும்ப அவன் இருக்கும் இடம் நோக்கி செல்கிறார். அவன் அந்த இடத்திலேயே புதுமைப் பித்தனைன் மகாமசானம் போல கேட்பாரற்றுக் கிடக்கிறான். 

அவனைத் தமது கைகளில் தூக்கிக்கொண்டு, குணப்படுத்த வேண்டி, அக்ரஹாரத்தில் இருக்கும் வீட்டிற்குள் நுழைகிறார். தொழு நோயாளியைத் தூக்கிக் கொண்டு அஹ்ரகாரத்திற்குள் வந்தமைக்காக, அவர் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்படுகிறார்.

தவறு செய்யாத தாம் தண்டிக்கப் பட்டமைக்காக வருத்தப்பட்டு தம் குருவான வினோபா பாவேவுக்கு தமது ஆற்றாமையைக் கொட்டி கடிதம் எழுதுகிறார்.

அந்தக் கடிதத்திற்கு பதிலாக வினோபா பாவே, பாபா ஆம்தேவுக்கு அனுப்பிய அஞ்சலட்டை வாசகம்தான் மேலே உள்ளது.

முதுகைத் திருப்பு. முழு உலகும் உன் முதுகின் பின்னால்.

நாஸ்திக பாபாவுடன் இந்தியாவை இணைத்துக் கட்டு இயக்கத்தின் சைக்கிள் பயணத்தில் நான் வாழ்ந்த நான்கு மாதங்கள் பற்றி நிறைய எழுதலாம். 

தொழுநோயைத் தொத்து வியாதி என்கிற எண்ணம், வெறும் மூட நம்பிக்கை என்று நிரூபிப்பதற்காக, மருத்துவர்களின் முன்பாக தொழு நோயாளியின் சீழை சிரஞ்சில் எடுத்துத் தமது உடலில் செலுத்திக் கொண்ட பித்தர்.

எல்லாப் புறக்கணிப்பிற்கும் எழுத்தாளனின் எதிர்வினையாக இருக்கட்டும் என்றுதான்...
முதுகு திருப்பல் - புறமுதுகு அல்ல