பேயோன் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் என தொடர்ந்து, மூர்க்கமாக நம்பும் கூட்டத்தில் நானும் ஒருவன்.
பேயோனின் இரண்டு கதைகளை அவரது தளத்தில் படித்து அசந்து போய்விட்டேன். திருவனந்தபுரத்தில் இருக்கும் சுகுமாரனுக்கு - அவன் அங்கு இருப்பது போல இருக்கிறான் ஆனால் பெரும்பாலான சமயங்களில் கோவை, நாகர் கோவில், சென்னை பெங்களூர் என்று எங்காவது சுற்றிக் கொண்டே இருக்கிறான் என்பதால் திருவனந்தபுரத்தைக் குறிப்பிட்டாக வேண்டி இருக்கிறது.