20 February 2011

வான்கா - ஆண்டன் செகாவ்

இந்தக் கதை 1886ல் தமது 26ஆம் வயதில் செகாவால் எழுதப்பட்டது. தமிழின் அந்தக் கால எழுத்தாளர்கள் பலருக்கும் குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்த கதைகள் செகாவுடையவை. இவற்றின் வாசிப்பில் மெய்மறந்து சாயல் செய்து மனிதாபிமான முற்போக்கு இலக்கியம் படைப்பதாய் பெருமை கொண்டவர்களும் உண்டு. 

19 February 2011

ஞானக்கூத்தனும் கேனக்கூத்தர்களும்

உனக்கென்ன தோன்றுது?

கருத்துக்கு மாறாகப் போலீசார்கள்
கட்டி வைத்துக் கையெழுத்து வாங்கலாமா?

எனக்கென்ன தோன்றுது?

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு.

- ஞானக்கூத்தன்

இந்தக் கதை உயர்ந்ததாமே. ஜெயமோகன் சொல்றாரே!

உனக்கென்ன தோன்றுது?

இஷ்டதெய்வம் உயர்ந்ததென்று சொன்னப்பின்னால்
இல்லையென்றா சொல்லிவிட முடியும் என்னால்

எனக்கென்ன தோன்றுது?

ஜாலிக்காய் இலக்கியத்தைப் பேச வந்தேன்
எனக்கென்று சுயமூளை இருக்கா
என்ன?

15 February 2011

பிரமிளின் சுண்டக் காய்ச்சிய சண்டைக் கவிதை

ஒரு வானம்பாடிக் 
கும்பலுக்கு

எதிர்காலச் சொப்பனத்தின்
புழுதி படிந்து
குரல் வரண்டு
சிறகு சுருண்டு
கங்கையைக் கழிநீராய்க்
குரல் கமறிப் பாடுகிறீர்.

14 February 2011

ஷோபா சக்தியின் லைலா - தமிழ் பேசும் ஃப்ரெஞ்சு படம்



குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் ஃப்ரெஞ்ச் படத்தை உலகத் திரைப்பட விழாவில் பார்த்த நிறைவு ஏற்பட்டது. 

13 February 2011

பாலை - பிரமிள்

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

12 February 2011

நாளை புரட்சி - பிரமிள்


நாளை புரட்சி

வயிற்றில் குடியிருந்து
வாழ்ந்து பசிக்கிறது
நிகழ்காலம்

11 February 2011

குருக்ஷேத்ரம் - பிரமிள்

குருக்ஷேத்ரம்

இன்று வேலை நிறுத்தம்
’கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே’
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கண்ண பிரானுக்குக்
கல்லடி!

10 February 2011

அறைகூவல் - பிரமிள்

 
அறைகூவல்

இது 
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்

08 February 2011

ராமன் இழந்த சூர்ப்பநகை - பிரமிள்

 பிரமிள்

நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள்

பிரமிள்
நன்றி: பிரமிள் கவிதைகள் பின்னட்டை: லயம் வெளியீடு

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன்

தள்ளி நின்று படித்துப் பார்த்தால் நம் முகம் கூட இதில் தெரியக்கூடும்.
 

07 February 2011

தமிழினியின் சிலைகள் - வசந்தகுமாரின் கண்வண்ணம்

பார்வை உள்ளவர்கள் அட்டை மற்றும் உள்ளேயுள்ள படங்களோடு நிறுத்திக் கொள்வது உசிதம். ஜம்பத்துக்கேனும் ஜம்ப் பண்ணியே தீருவேன் என்பவர்கள் புரட்டிப் படிக்கவும் செய்யலாம். 

பள்ளம் - சுந்தர ராமசாமி

1979ல் ’சுவடு’ என்கிற சிறுபத்திரிகையில் வெளியான கதை. 

06 February 2011

ரிக்‌ஷா - அசோகமித்திரன்

அசோகமித்திரன் இந்தப் புத்தகத்தை, ஆதிமூலத்திற்கு அன்போடு அளித்திருக்கிறார். பத்து வருடம் கழித்து, எழுதப் பரபரத்துக் கொண்டிருந்த, பக்கத்துவீட்டுப் பையனான எனக்கு, ஆதிமூலம் இதைப் படிக்கக் கொடுத்தார். அதை நான் எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க முடியும்?அந்த இன்னொருவர் ஆதியே ஆனாலும் கொடுத்துவிட முடியுமா என்ன? எதற்கும் இந்த விஷயத்தை ஆதிமூலத்தின் மகன்களான அபி, ராஜு இருவர் காதிலும் விழ வாய்ப்பிருக்கும் இடங்களில் பேசிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக ராஜு. அப்பாவோட புக்கு வெச்சிருக்கீங்களாமே நச்சு என்று தேடிவந்து கேட்டாலும் கேட்டுவிடுவான்.