02 April 2011

பிழைகளும் திருத்தமும், திருந்தமுடியாத காழ்ப்பின் பிழைகளும்


மரியாதைக்குரிய அற்பவாதி மாமல்லனுக்கு,

இதுதானா உங்க டக்கு? ஐயோ... ஐயோ... 

இணையம் என்கிற மாய யதார்த்தம்



“ராயர் கஃபேவை மூடி பல ஆண்டுகள் ஆகி விட்டது.  இருந்தாலும் அதில் சமீபத்தில் சாப்பிட்டதாக ஒரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்கிறார்.  இதையெல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது” 

*******************
கீழே இருப்பது என் ராயர் கபே பற்றிய என் பதிவு

Saturday, March 19, 2011

ஏதோவொரு நாளில் - காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (விமலாதித்த மாமல்லன்)


ஏதோவொரு நாளில்
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

தமிழில்: விமலாதித்த மாமல்லன்

மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார். வார்ப்பில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றைக் கண்ணாடி அலமாரியிலிருந்து எடுத்து மேசை மேல் வைத்தார். சில கருவிகளையும் அவற்றின் அளவுகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தி காட்சிக்கு வைப்பதைப்போல் வைத்தார். கழுத்துப்பட்டி இல்லாத சட்டை அணிந்திருந்தார். கழுத்தில் சட்டை இணையும் இடத்தில் தங்க பித்தான் பொறுத்தப்பட்டிருந்தது. அவரது பேண்டை, தோளைச்சுற்றிய பட்டைகள் தாங்கிக் கொண்டிருந்தன. நிமிர்ந்த பக்கையான உடலுடன் இருந்தவரின் தோற்றமானது சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல், செவிடர்களின் குவிப்பற்ற பார்வையை ஒத்திருந்தது. 

01 April 2011

விஷமருந்தி இறந்த பதினேழு ஆங்கிலேயர்கள் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (சுகுமாரன்)

நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி.புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வாடை இருக்கிறது என்பதைத்தான். அவர் அதை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும்  யாருக்கும் புரியாது. பியூனஸ் அயர்சிலிருந்து வரும் அந்தக் கப்பல் போர் முடிந்த பின்பு முதல்முறையாக சொந்த நாட்டுக்குத் திரும்பும் இத்தாலியர்களால் நிரம்பியிருந்தது. எனினும் எழுபத்திரண்டாம் வயதில் உறவினர்களையும் சொந்த மண்ணையும் விட்டு கொந்தளிக்கும் கடலில் பதினெட்டு நாட்கள் பயணம் செய்த அவருக்கு பெரும் தனிமையோ பயமோ இழப்புணர்வோ எதுவும் தோன்றவில்லை.

27 March 2011

பெயர் மொழிபெயர் மொழியைப் பெயர்த்துவிடு!

தயவு செய்து முதலில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படியுங்கள் ANTON CHECKHOV - The Wife and Otther Stories (Translated by CONSTANCE GARNETT புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர்) இந்த புத்தகத்தின் கடைசிக்கதைதான் THE LOTTERY TICKET

பிறகு எழுத்தாளர் எஸ்.ஷங்கர நாராயணனின் மொழிபெயர்ப்பு 
அதற்குப் பிறகு பதிவர் தீபா அவர்களின் மொழிபெயர்ப்பு

***************
//IVAN DMITRITCH, a middle-class man who lived with his family on an income of twelve hundred a year and was very well satisfied with his lot, sat down on the sofa after supper and began reading the newspaper.//

என்கிற தொடக்க வரியை எஸ்.ஷங்கர நாராயனன் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்திருக்கிறார்.

<இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான்.>

<a middle-class man> நடுத்தரன் (சுஜாதா ஸ்டைலா)

ஆ அ ஆ..கேப்பியா கேப்பியா தமிழிசைனு இனிமே கேப்பே!



”மச்சி இந்த ஆ...ன்னு ஆரம்பிச்சாலே கடுப்பாயிடுது மச்சி” 

26 March 2011

ரசனையின் விகாசமும் அழகுணர்வின் பயிற்சியும்

கலை இலக்கியத்தை ஆராயக் கூடாது அனுபவிக்க வேண்டும். ஒரு படைப்பின் சாரத்தை மட்டுமேப் பேச வேண்டும். ஒவ்வொரு வாசகனின் வாசிப்பு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. அதை அவனவனிடம் விட்டுவிடுவதே சாலச் சிறந்தது. 

ஆராதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் உபன்யாசியின் உபதேசமும் அவரது உபாசிகளின் வசனங்களும் ஒன்று போலவே இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. தனக்குத்தானே பாஸ்மார்க் போட்டுக் கொள்ளும் சாதுர்யம், தொடர்ந்து தரமுள்ளதாய் தம்பட்டமடித்துக் கொள்கையில் தன்னிடத்தை விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டதாய்த் தனித்து தூக்கி நிறுத்திக் கொள்ளும் தந்திரோபாயம் ஆகிறது.

24 March 2011

தர்க்கமும் தகவலும் நம்பகத்தன்மையும் - வினவிக் கொள்ளாத வினவு

பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை
//அனாதையாக இருந்த குழந்தையை மருத்துவரொருவர் நுங்கம்பாக்கத்திலிருக்கும் காமராஜ் இல்லத்தை ஒட்டி இருக்கும் சத்யமூர்த்தி பவனில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.//

22 March 2011

சார்! ஒரு சத்யஜித் ராய் கதை. படிச்சிப் பாருங்க!

இந்தக் கதையை நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை. உலக சினிமா அரங்கில் நமக்கென்று, அடையாளத்தை உருவாக்கிய தலைசிறந்த இயக்குநராக, ராயை எல்லோருக்கும் தெரியும். பலருக்குத் தெரிந்திருக்காத ஒரு விஷயம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். நமது இயக்குந-எழுத்தாளர்கள் போலல்லாது தனியாகவே இலக்கிய அந்தஸ்துடைய கதைகளின் படைப்பாளி.

எழுதிப் பார்ப்பதும் எழுதியதைப் பார்ப்பதும்

இளைஞர் ஒருவர் (இளைஞர் என்பது கூட அவரை வயதானவராய் ஆக்கிவிடக் கூடும்) மின்னஞ்சலில் சுட்டி கொடுத்து, அவரது கதையைப் பற்றிய, என் கருத்தைச் சொல்லும்படிக் கேட்டிருந்தார். 

படித்துப் பார்த்தேன். பதில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்த போது அவருக்கான பிரத்தியேகமாக அல்லாது, பொதுவாக வந்திருப்பதாகப் பட்டது. பிறகு அவருக்கு கீழ்க்கண்ட வரிகளை அஞ்சல் செய்தேன்.

<இதைப் பதிவாக என் தளத்தில் ஏற்றிக் கொள்வ்தில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை எனில் வலையேற்ற உத்தேசம்.>

அவரது பதில்,

அனுபவி ராஜா அனுபவி


<உண்மையாகவே கவிதையை இப்படி பிச்சுப்போட்டுதான் படிக்க வேண்டுமா ? கவிதை என்பது அனுபவமல்லவா ?>

கரமைதுனம் கூட அனுபவம்தான். சூப்பர் அனுபவம்.

உலகத்தில் முஷ்டி மைதுனம் செய்பவன் 99பேர். இல்லை எனச்சொல்லும் அந்த மற்றையோர் ஆள் - பொய்யன்.

19 March 2011

உபவாசம் இருந்து உபன்யாசம் செய்து உப்புமா கிண்டி உருளி உருளியாய் விநியோகிப்பது எப்படி? - தொகில் ரகஸியம்