வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ ம்ழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.
19 April 2011
18 April 2011
17 April 2011
பிரமிளின் தெற்குவாசல் / ரவீநன் தெரு
| hide details 9:51 AM (3 hours ago) |
Mr. Mamallan:
I saw your posting of Piramil translation poetry, if you have "raveenan theru", and "therkku vasal" from Piramil, please send it to me. Thanks,
Senthil
ச்சும்மா கதை சொன்ன கு.அழகிரிசாமி!
1980ல் அசோகமித்திரனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத வந்தேனேத் தவிர, கூடித்திரிந்த சேக்காளிகளெல்லாம் அப்பிராமண தெற்கத்திக்காரர்கள்தான்.
16 April 2011
14 April 2011
கொடுக்கவா எடுக்கவா? நோ பீஸ் ஆஃப் மைண்ட்!
நற்பண்புகளின் அறவுருவாய்த் திகழும் ஜெயமோகன் அவர்களின் சமீபத்திய திருவாய் அமுது, ஞானபீடம் April 13th, 2011.
”வாசித்தேன்.
என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.”
நிறைய எழுதுதல் என்பதை மட்டுமே தகுதி எனக் கொண்டால் எந்த விருதும் ஜெயமோகனைத் தவிர எவருக்குமேக் கிடைக்க வாய்ப்பில்லை என்பது எவருமே மறுக்க முடியாத உண்மை.
”வாசித்தேன்.
என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.”
நிறைய எழுதுதல் என்பதை மட்டுமே தகுதி எனக் கொண்டால் எந்த விருதும் ஜெயமோகனைத் தவிர எவருக்குமேக் கிடைக்க வாய்ப்பில்லை என்பது எவருமே மறுக்க முடியாத உண்மை.
11 April 2011
சிகாகோ சதி விசாரணை!
1968ல் வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிகாகோ பூங்காக்களில் இளஞர்கள் திரள்கின்றனர். எழுத்தாளர்கள் கவிஞர்கள் பாடகர்கள் எனக் கலைஞர்கள் அடங்கிய கூட்டம் பாட்டும் ஆட்டமும் கூத்துமாக அமெரிக்க அரசை எதிர்த்துக் கண்டனங்கள் முழங்கப்படுகின்றன. உலக மக்கள் சுதந்திரத்தின் மகத்தான காவலர், அடக்குமுறையில் இறங்கி அடித்து நொறுக்குகிறார். ஏழு நபர்கள் ஜனநாயக ரீதியில் கைது செய்யப்பட்டு அரசுக்கு எதிராய் சதி செய்ததாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.
09 April 2011
ஆலன் கின்ஸ்பெர்க் வாசிப்பில் - Howl கவிதை
Allen Ginsberg
| hide details 8:39 AM (10 hours ago) |
நண்பரே, கின்ஸ்பெர்கின் ஒன்பது கவிதைகள் கொண்ட 'Howl and Other Poems ' audio CD இன்றும் பிரபலம். இத்துடன் அனுப்பியிருக்கும் audio file இல் கின்ஸ்பெர்க் குரலில் ’ ஹௌல்’ கவிதையைக் கேட்கலாம் . கூடவே ஒரு கொசிறும் (foot note) அனுப்பப்படுகிறது. Enjoy.- ஆனந்த்.
மருதா வெளியிட்ட சில பொக்கிஷங்கள் கிழக்கு ஆன்லைனில் கிடைக்கின்றன
அன்புவழி என்கிற பெயரில் க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டு ஏ.கே.கோபாலன் அவர்களால் 50களில் வெளியிடப்பட்ட பேர்லாகர் குவிஸ்டு எழுதிய பாரபாஸ் ((மருதா பதிப்பகம்) நாவல் இப்போது கிழக்கு புக் கிளப்பில் https://www.nhm.in/shop/100-00-0000-157-0.html விலை 70/-
08 April 2011
இலக்கியம் வாழ்க்கையிலிருந்தே பிறக்கிறது, மூளையிலிருந்து அல்ல
கண்டு கேட்டு வாழ்ந்த அனுபவமே கலையாய் உயர முடியும் - எந்தக் காலத்திலும்.
மேதமை என்ன தட்பவெப்பமா இடத்திற்கு இடம் காலத்திற்குக் காலம் மாறுபட.
தி.ஜானகிராமன் மோகள் முள் நாவலை எழுதியது எப்படி என்று 1961ல் கூறுவதைப் படித்துப் பாருங்கள்.
மோகமுள் எழுதியதால் மட்டுமல்ல - எழுதியதை எப்படி எழுதினேன் என்று எழுதும் போதும் திஜா திஜாதான்.
மேதமை என்ன தட்பவெப்பமா இடத்திற்கு இடம் காலத்திற்குக் காலம் மாறுபட.
தி.ஜானகிராமன் மோகள் முள் நாவலை எழுதியது எப்படி என்று 1961ல் கூறுவதைப் படித்துப் பாருங்கள்.
மோகமுள் எழுதியதால் மட்டுமல்ல - எழுதியதை எப்படி எழுதினேன் என்று எழுதும் போதும் திஜா திஜாதான்.
எஸ்ரா பவுண்ட் எதிர்ப்புக் கவிதைகள் ஏழு - பிரமிள்
EZRA POUND (1885 - 1972) பிரமிள் (1939 - 1997)
அதிரடி
அட்டுப் பிடித்த பத்திரிகைகளுக்கு
அரோகரா!
வாய்க்கட்டுப் போடப்பட்ட
விமர்சகர்களின் பாடும் அதோகதி!
அவர்களின் குடல்களை
புழுக்கள் குதறட்டும்.
புத்துணர்வு வேண்டாம் என்றவர்களின்
பிணக்குழிகள் இதோ!
இவர்களின் தொழில்
ஒத்தூதல், கட்சி கட்டுதல்.
ஏய், வேசித் தொப்பை முடக்குவாதி!
உன் கதியும் இதுதான்!
எழுத்தின் சுதந்திரம், உந்நதம்
இரண்டுக்கும் நீ
பரம வைரி!
ஏய் காளானே!
விட்டுக் கொடுக்காத
புற்றுவியாதி நீ!
06 April 2011
ஐரோப்பிய நாவலாசிரியர்களைப் பற்றி கொல்லிப் பாவையில் சுந்தர ராமசாமி
அது அந்தக் காலம். உயர்ந்த விஷயங்களை எழுத்தாளர்கள் வாசகனுக்கு எடுத்துச் சொல்லியது.
இது இந்தக் காலம். எழுத்தாளர்கள் தங்களை உயர்வாய் எடுத்துச் சொல்லிக் கொள்ளுவது.
எழுத்தாளன் தன்னைப் பற்றிப் பெருமையாய்ப் பேசவேக் கூச்சப்பட்டது அது அந்தக் காலம்.
தன் பெருமையைத் தானே பேசுவதோடு அல்லாமல் எப்படி எல்லாம் தன்னை வாசகன் பெருமையுடன் பேச வேண்டும் என்று வகுப்பெடுப்பது இது இந்தக் காலம்.
விசிலடிப்பதை நிறுத்தி, எழுத்தைப் பற்றிக் கொண்டு ரசிகன் தீவிர வாசகனாகப் போவது, அது எந்தக் காலம்?
எழுத்தாளர்கள் பெயர் உதிர்க்காமல்,எழுத்தாளர்களைப் பற்றி எழுதி எழுத்தாளர்களை உருவாக்கிய பொற்காலத்தில் இருந்து சில பக்கங்கள்.
Subscribe to:
Posts (Atom)