ஜெயமோகனின் ஆர்வலர் ஒருவருக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன் ஜெமோவை விமர்சித்தது குறித்து சிறு மனஸ்தாபம் உண்டானது. அவர் ட்விட்டரில் என்னைப் பற்றிக் கொஞ்சம் மோசமாய் எழுதினார். என்னளவிற்கு இல்லை, எனினும் அவரளவிற்கு மோசம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த எளிய எதிர்வினையாக அவரை ப்ளாக் செய்தேன்.
Dear Sir, On the web yours is the only blog which devotes more pages for introducing Piramil's wonderful poems. Sir, if i remember correct tomorrow is Piramil's birthday, I am just mentioning this to you with hopes to get some bonus posts on Piramil. Thanks for the post on Borges. With regards, G.Tamilmani
வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ ம்ழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.
’அன்பளிப்’பைப் பற்றி ஹிந்துவில் மதிப்புரை எழுதிய நேரத்தில் க.நா.சு.விற்கும் அழகிரிசாமிக்கும் நேர்ப்பழக்கமே கிடையாது. அதுமட்டுமல்ல, அழகிரிசாமி ரகுநாதனுடைய உலகத்தைச் சேர்ந்தவர். ரகுநாதனுடைய உலகத்திலிருக்கிறவர்களுக்கு க.நா.சு.வைப் பிடிக்காது. ரகுநாதனுக்குக் க.நா.சு.வைச் சுத்தமாகப் பிடிக்காது.
1968ல் வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிகாகோ பூங்காக்களில் இளஞர்கள் திரள்கின்றனர். எழுத்தாளர்கள் கவிஞர்கள் பாடகர்கள் எனக் கலைஞர்கள் அடங்கிய கூட்டம் பாட்டும் ஆட்டமும் கூத்துமாக அமெரிக்க அரசை எதிர்த்துக் கண்டனங்கள் முழங்கப்படுகின்றன. உலக மக்கள் சுதந்திரத்தின் மகத்தான காவலர், அடக்குமுறையில் இறங்கி அடித்து நொறுக்குகிறார். ஏழு நபர்கள் ஜனநாயக ரீதியில் கைது செய்யப்பட்டு அரசுக்கு எதிராய் சதி செய்ததாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.
நண்பரே, கின்ஸ்பெர்கின் ஒன்பது கவிதைகள் கொண்ட 'Howl and Other Poems ' audio CD இன்றும் பிரபலம். இத்துடன் அனுப்பியிருக்கும் audio file இல் கின்ஸ்பெர்க் குரலில் ’ ஹௌல்’ கவிதையைக் கேட்கலாம் . கூடவே ஒரு கொசிறும் (foot note) அனுப்பப்படுகிறது. Enjoy.- ஆனந்த்.
அன்புவழி என்கிற பெயரில் க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டு ஏ.கே.கோபாலன் அவர்களால் 50களில் வெளியிடப்பட்ட பேர்லாகர் குவிஸ்டு எழுதிய பாரபாஸ் ((மருதா பதிப்பகம்) நாவல் இப்போது கிழக்கு புக் கிளப்பில் https://www.nhm.in/shop/100-00-0000-157-0.html விலை 70/-