27 April 2011

தற்காலத்தில் கற்காலம்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி தழுவா நெறிமுறையின் - மேதினியில்
சுட்டார் பெரியோர் சுடாதார் இழிகுலத்தோர்
சட்டத்தில் உள்ள ஷரத்து

25 April 2011

கேள்வியும் நானே பதிலும் நானே

பின் நவீனத்துவ எழுத்தாளர் இணையத்தில் இலவச நாளிதழ் தொடங்கினால் என்ன பெயர் வைப்பார்?

தினப் புட்டு

24 April 2011

விகாரங்களும் விஸ்வரூபங்களும்

ஜெயமோகனின் ஆர்வலர் ஒருவருக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன் ஜெமோவை விமர்சித்தது குறித்து சிறு மனஸ்தாபம் உண்டானது. அவர் ட்விட்டரில் என்னைப் பற்றிக் கொஞ்சம் மோசமாய் எழுதினார். என்னளவிற்கு இல்லை, எனினும் அவரளவிற்கு மோசம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த எளிய எதிர்வினையாக அவரை ப்ளாக் செய்தேன். 

21 April 2011

இலக்கியக் கலோரிகள்



fromKanakkadalan 
toவிமலாதித்த மாமல்லன்
dateThu, Apr 21, 2011 at 12:26 PM
subjectவணக்கம்
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 12:26 PM (35 minutes ago)
அன்பின் மாமல்லன்,
தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை எனது பதிவில் இட்டுள்ளேன். ஏதேனும் தவறிருப்பின், சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
நன்றி,

கனாக்காதலன்

கனாக்காதலன்,

உங்களுக்குத் தோன்றுவதை நீங்கள் எழுதுவதற்கு என்ன தயக்கம். 

20 April 2011

சிறு (விமர்சனக்) கவிதைகள் சில - பிரமிள்



tamil mani

 to me
show details 12:51 PM (11 hours ago)
Dear Sir,
On the web yours is the only blog which devotes more pages
for introducing Piramil's wonderful poems. Sir, if i remember correct
tomorrow is
Piramil's birthday, I am just mentioning this to you with hopes to get
some bonus posts on Piramil.
Thanks for the post on Borges.
With regards,
G.Tamilmani

நன்றி. நினைவுபடுத்தியதற்கு நன்றி. 

பிரமிள் (20.04.1939 - 06.01.1997)

என்றேன் என்றார்

19 April 2011

சுயரூபம் - கு. அழகிரிசாமி தட்டச்சு வடிவில்

வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ ம்ழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.

18 April 2011

விதி சமைக்கிறவர்களாய் வேஷம் கட்டாத அசல் ஆளுமைகள்

’அன்பளிப்’பைப் பற்றி ஹிந்துவில் மதிப்புரை எழுதிய நேரத்தில் க.நா.சு.விற்கும் அழகிரிசாமிக்கும் நேர்ப்பழக்கமே கிடையாது. அதுமட்டுமல்ல, அழகிரிசாமி ரகுநாதனுடைய உலகத்தைச் சேர்ந்தவர். ரகுநாதனுடைய உலகத்திலிருக்கிறவர்களுக்கு க.நா.சு.வைப் பிடிக்காது. ரகுநாதனுக்குக் க.நா.சு.வைச் சுத்தமாகப் பிடிக்காது.

17 April 2011

பிரமிளின் தெற்குவாசல் / ரவீநன் தெரு


fromSenthil Muthusamy 
tomadrasdada@gmail.com
dateSun, Apr 17, 2011 at 9:51 AM
subjectPiramil Poetry
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 9:51 AM (3 hours ago)
Mr. Mamallan:

I saw your posting of Piramil translation poetry, if you have "raveenan theru", and "therkku vasal" from Piramil, please send it to me. Thanks,

Senthil

ச்சும்மா கதை சொன்ன கு.அழகிரிசாமி!

1980ல் அசோகமித்திரனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத வந்தேனேத் தவிர, கூடித்திரிந்த சேக்காளிகளெல்லாம் அப்பிராமண தெற்கத்திக்காரர்கள்தான். 

16 April 2011

பிரமிளின் இரண்டு தமிழாக்கக் கவிதைகள்

Your interest is in the bloody loam
But what I'am after
Is the finished product.

'PATERSON'
by WILLIAM CARLOS WILLIAMS

14 April 2011

கொடுக்கவா எடுக்கவா? நோ பீஸ் ஆஃப் மைண்ட்!

நற்பண்புகளின் அறவுருவாய்த் திகழும் ஜெயமோகன் அவர்களின் சமீபத்திய திருவாய் அமுது, ஞானபீடம் April 13th, 2011. 


”வாசித்தேன். 
என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.” 


நிறைய எழுதுதல் என்பதை மட்டுமே தகுதி எனக் கொண்டால் எந்த விருதும் ஜெயமோகனைத் தவிர எவருக்குமேக் கிடைக்க வாய்ப்பில்லை என்பது எவருமே மறுக்க முடியாத உண்மை.

12 April 2011

எம்டிஎம் இடமிருந்து பேயோனுக்கு ஒரு செய்தி - என் வழியாக


Meenakshipuram Deivakumar Muthukumaraswamy April 12 at 11:51am Report
அன்புள்ள மாமல்லன்:
பேயோன் என்ற பெயரில் எழுதுவது நானில்லை என்று உங்களுக்கு உறுதிபட தெரிந்துவிட்டதாக நண்பர் கடற்கரை மூலம் அறிந்து பெருமூச்செரிந்தேன்.

எல்லாம் ஸ்வாமிகள்!

கவிஞர் விக்ரமாதித்யனின் தலைப்பற்ற ஒரு கவிதை.

எல்லாமே
தீக்ஷைபெற்று
பட்டங்கட்டி
பரிபாலனம் செய்துவரும் ஸ்வாமிகள்தாம்

11 April 2011

சிகாகோ சதி விசாரணை!

1968ல் வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிகாகோ பூங்காக்களில் இளஞர்கள் திரள்கின்றனர். எழுத்தாளர்கள் கவிஞர்கள் பாடகர்கள் எனக் கலைஞர்கள் அடங்கிய கூட்டம் பாட்டும் ஆட்டமும் கூத்துமாக அமெரிக்க அரசை எதிர்த்துக் கண்டனங்கள் முழங்கப்படுகின்றன. உலக மக்கள் சுதந்திரத்தின் மகத்தான காவலர், அடக்குமுறையில் இறங்கி அடித்து நொறுக்குகிறார். ஏழு நபர்கள் ஜனநாயக ரீதியில் கைது செய்யப்பட்டு அரசுக்கு எதிராய் சதி செய்ததாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

09 April 2011

ஆலன் கின்ஸ்பெர்க் வாசிப்பில் - Howl கவிதை

Allen Ginsberg
fromAnand Sigamany 
tomadrasdada@gmail.com
dateSat, Apr 9, 2011 at 8:39 AM
subjectHOWL - Allen Ginsberg's Poetry reading - AUDIO
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 8:39 AM (10 hours ago) 

நண்பரே, கின்ஸ்பெர்கின் ஒன்பது கவிதைகள் கொண்ட   'Howl and Other Poems ' audio CD  இன்றும்  பிரபலம். இத்துடன் அனுப்பியிருக்கும்   audio file இல் கின்ஸ்பெர்க் குரலில் ’  ஹௌல்’ கவிதையைக் கேட்கலாம் . கூடவே ஒரு கொசிறும் (foot note) அனுப்பப்படுகிறது.   Enjoy.- ஆனந்த்.