06 May 2011

சரக்கல்ல லேபிளே சாரம்!

விமலாதித்த மாமல்லன் கதைகள் என்கிற புத்தகம் ஏன் அப்பெயரைத் தாங்க நேர்ந்தது? 

சிறுகதை நெடுங்கதை, குறுநாவல் என வெவ்வேறு வடிவங்கள் கொண்ட கதைகளை உள்ளடக்கியதால் ’கதைகள்’ என்கிற பொதுத் தலைப்பைக் கொண்டு வெளியாயிற்று. 

02 May 2011

ஸித்திக்குதே!

fromஸ் பெ 
toவிமலாதித்த மாமல்லன்
dateMon, May 2, 2011 at 11:39 AM
subjectPost from சிவகுமார் மா
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 11:39 AM (1 hour ago)
மச்சி சார்,உங்கள் கவனத்திற்கு  ;))
 Link to this post:
 https://profiles.google.com/masivakumar/posts/WoG7RKoeTDQ
அறைக்குள் உட்கார்ந்தபடியே ஆய்வு செய்வதில் இவர் கில்லாடி போலிருக்கிறது. ஒரு சீனத் தொழிலாளியின் தின ஊதியம் 30 ரூபாய் என்று எப்படி கணக்குப் போட்டு விட்டார் (அதுவும் 14 மணி நேரம் உழைத்து) !!!

"நாம் கடையில் வாங்கும் சீனத்தயாரிப்பான ஒரு ’சீரியல்’ பல்பு இருபது ரூபாய். அதில் நூறு பல்புகள், நூறு இணைப்புகள் உள்ளன. அதை கையால் மட்டுமே இணைக்க முடியும். அதை ஒரு மனிதர்தான் செய்திருக்க வேண்டும். அந்த விலைக்கு அதை இங்கே வாங்க முடிந்தால் அதன் சீன மதிப்பு பத்து ரூபாய்க்கு மிகாது. உற்பத்தி இடத்தில் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு ரூபாய். ஒரு இணைப்பின் மதிப்பு எட்டு பைசா. அதில் செலுத்தப்பட்டிருக்கும் உழைப்புக்கு மூன்றுபைசாவுக்கு மேல் கொடுக்க முடியாது. ஒருநாளில் ஒரு சீன அரசடிமைத் தொழிலாளர் பதினான்கு மணிநேரம் உழைத்து அந்த பல்புகளை இணைத்திருந்தால் ஒரு நாளில் அதிகபட்சம் ஆயிரம் பல்புகளை இணைத்து முப்பது ரூபாய் சம்பாதிக்க முடியும்!"

சிறப்புத் திறனற்ற உதவித் தொழிலாளர் தினமும் 8 மணி நேர உழைப்புக்கு மாதச் சம்பளம் 600 யுவானுக்குக் குறையாமல் (4000 ரூபாய், தினக் கூலி 160 ரூபாய், மாதம் 25 வேலை நாட்கள்) வாங்குவது பொதுவான நடைமுறை.
கவனப்படுத்தியதற்கு நன்றி. 

இந்த நன்றி ஒரு சம்பிரதாய தாட்சண்யம்தான். இப்படியெல்லாம் இனிமேல் கவனப்படுத்த வேண்டாம் என தங்களை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

01 May 2011

த்ரூஃபோவின் வெளியான முதல் படம்

Les Mistons (The Brats) by François Truffaut 1957

நேற்று வெங்கட் சாமிநாதன் விழாவிற்கு சென்றிருந்தபோது அரங்கிற்கு வெளியில் வண்ணநிலவனை சந்தித்தேன். தற்செயலாக இந்தப் படம் பற்றி நினைவுக்கு வந்தது. மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் வெகுகாலம் முன்பு Alliance Française நடத்திய த்ரூஃபோ திரைப்பட விழாவில் பார்த்தது. http://en.wikipedia.org/wiki/Les_Mistons பெரிய திரையில் இந்தக் கன்னி முயற்சி ஏற்படுத்திய பிரமிப்பு அசாதாரணமானது. இந்தப் படத்தை இயக்கியபோது த்ரூஃபோவுக்கு 25 வயது. 

வென்றவன் சொல்வதே வேதம்!


சில தினங்களுக்குமுன் மதியம் 2.30க்குப் பக்கமாக, ஒரு அழைப்பு. ஐஃபோன் திரை ஜேக்கப் நல்லித்தானம் என்று காட்டியது. காவி குர்த்தா ஆட்டுத்தாடி கண்முன் வந்து நின்றது.

27 April 2011

தற்காலத்தில் கற்காலம்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி தழுவா நெறிமுறையின் - மேதினியில்
சுட்டார் பெரியோர் சுடாதார் இழிகுலத்தோர்
சட்டத்தில் உள்ள ஷரத்து

25 April 2011

கேள்வியும் நானே பதிலும் நானே

பின் நவீனத்துவ எழுத்தாளர் இணையத்தில் இலவச நாளிதழ் தொடங்கினால் என்ன பெயர் வைப்பார்?

தினப் புட்டு

24 April 2011

விகாரங்களும் விஸ்வரூபங்களும்

ஜெயமோகனின் ஆர்வலர் ஒருவருக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன் ஜெமோவை விமர்சித்தது குறித்து சிறு மனஸ்தாபம் உண்டானது. அவர் ட்விட்டரில் என்னைப் பற்றிக் கொஞ்சம் மோசமாய் எழுதினார். என்னளவிற்கு இல்லை, எனினும் அவரளவிற்கு மோசம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த எளிய எதிர்வினையாக அவரை ப்ளாக் செய்தேன். 

21 April 2011

இலக்கியக் கலோரிகள்



fromKanakkadalan 
toவிமலாதித்த மாமல்லன்
dateThu, Apr 21, 2011 at 12:26 PM
subjectவணக்கம்
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 12:26 PM (35 minutes ago)
அன்பின் மாமல்லன்,
தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை எனது பதிவில் இட்டுள்ளேன். ஏதேனும் தவறிருப்பின், சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
நன்றி,

கனாக்காதலன்

கனாக்காதலன்,

உங்களுக்குத் தோன்றுவதை நீங்கள் எழுதுவதற்கு என்ன தயக்கம். 

20 April 2011

சிறு (விமர்சனக்) கவிதைகள் சில - பிரமிள்



tamil mani

 to me
show details 12:51 PM (11 hours ago)
Dear Sir,
On the web yours is the only blog which devotes more pages
for introducing Piramil's wonderful poems. Sir, if i remember correct
tomorrow is
Piramil's birthday, I am just mentioning this to you with hopes to get
some bonus posts on Piramil.
Thanks for the post on Borges.
With regards,
G.Tamilmani

நன்றி. நினைவுபடுத்தியதற்கு நன்றி. 

பிரமிள் (20.04.1939 - 06.01.1997)

என்றேன் என்றார்

19 April 2011

சுயரூபம் - கு. அழகிரிசாமி தட்டச்சு வடிவில்

வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ ம்ழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.

18 April 2011

விதி சமைக்கிறவர்களாய் வேஷம் கட்டாத அசல் ஆளுமைகள்

’அன்பளிப்’பைப் பற்றி ஹிந்துவில் மதிப்புரை எழுதிய நேரத்தில் க.நா.சு.விற்கும் அழகிரிசாமிக்கும் நேர்ப்பழக்கமே கிடையாது. அதுமட்டுமல்ல, அழகிரிசாமி ரகுநாதனுடைய உலகத்தைச் சேர்ந்தவர். ரகுநாதனுடைய உலகத்திலிருக்கிறவர்களுக்கு க.நா.சு.வைப் பிடிக்காது. ரகுநாதனுக்குக் க.நா.சு.வைச் சுத்தமாகப் பிடிக்காது.

17 April 2011

பிரமிளின் தெற்குவாசல் / ரவீநன் தெரு


fromSenthil Muthusamy 
tomadrasdada@gmail.com
dateSun, Apr 17, 2011 at 9:51 AM
subjectPiramil Poetry
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 9:51 AM (3 hours ago)
Mr. Mamallan:

I saw your posting of Piramil translation poetry, if you have "raveenan theru", and "therkku vasal" from Piramil, please send it to me. Thanks,

Senthil

ச்சும்மா கதை சொன்ன கு.அழகிரிசாமி!

1980ல் அசோகமித்திரனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத வந்தேனேத் தவிர, கூடித்திரிந்த சேக்காளிகளெல்லாம் அப்பிராமண தெற்கத்திக்காரர்கள்தான்.