ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்னருக்கு, மாதிரிப் பரிசோதனைக்குப்பின் கதவை மூடி இறுதி முத்திரை வைப்பதற்காகத் தொழிற்சாலைக்கு செல்லவேண்டி இருந்தது. வாடிக்கையாளர்கள் கேட்கும் வடிவில் க்ரேனைட்டில் கல்லறைக் கற்களைத் தயாரித்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை. முழுமையடைந்த கற்பலகைகள் கண்டெய்னரில் ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட பேக்கிங்கில் இருந்தன. வேலை முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும் போல் தெரிந்தது.