மனமே! நீ வெறும் தாண்டவக்கோன் என்று தெரிந்த என்னிடமே ஆண்டவக்கோன் போல வேஷம் கட்டுவது சரியா? அல்லது உன் சரிவா? எதையோ நான் தோலுரிக்க அது உனக்குக் கரிக்க, கஷ்கத்து முடிபோல அலட்சியமாய், இது நம் கைக்கடக்கம் என்றென்னை நினைத்து இறுமாந்திருந்தாய்.
இருபதாம் தேதி ஜெமோவின் அலெக்ஸா ரேட்டிங்கை ட்விட்போட்டு பஸ்ஸ்விட்டு ஃபேஸ்புக்கில் எழுதினால் இருபத்து நாலாம் தேதி சுஜாதாவுக்கு நெரி கட்டுவதன் மர்ம விளக்கம்.
ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்னருக்கு, மாதிரிப் பரிசோதனைக்குப்பின் கதவை மூடி இறுதி முத்திரை வைப்பதற்காகத் தொழிற்சாலைக்கு செல்லவேண்டி இருந்தது. வாடிக்கையாளர்கள் கேட்கும் வடிவில் க்ரேனைட்டில் கல்லறைக் கற்களைத் தயாரித்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை. முழுமையடைந்த கற்பலகைகள் கண்டெய்னரில் ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட பேக்கிங்கில் இருந்தன. வேலை முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும் போல் தெரிந்தது.
மூன்று தினங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக்கைத் திறந்தால் என் மீது ஒரே அவதூறு. ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். யார் மீது வேண்டுமானாலும் யாரும் இப்படி ஒரு போலியான உரையாடலை உருவாக்கி நெட்டில் உலவ விட முடியும். நான் யாரோடும் எப்போதும் chat செய்வதில்லை. ஷோபா சக்தி மீது அவதூறு செய்தார்கள். இப்போது என்னைப் பிடித்திருக்கிறார்கள். அவதூறுகளுக்கு பதில் சொல்லி பதில் சொல்லி அலுப்பாக இருக்கிறது