04 July 2011

நான் பிறந்தது தீர்ப்பு சொல்வதற்காக அல்ல நேசிக்க - சுகுமாரன்

பெருங்கவிஞனின் இயல்புகளாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகிறார் டி.எஸ்.இலியட். அவை: எண்ணிக்கைப் பெருக்கம்,வித்தியாசம், சீரான படைப்புத்திறன். பாப்லோ நெரூதாவை விட இலியட்டின் மதிப்பீட்டுக்குப் பொருத்தமான வேறொரு நவீன கவிஞர் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இந்த நோக்கில்தான் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது நேர்காணலொன்றில் 'இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்' என்று குறிப்பிட்டார்.

03 July 2011

மக்கள் கவிஞனும் மலம் சுமக்கும் பெண்ணும்

பூ

இரண்டுநாள் கழித்து வா
நாளைக்கு வா
என்கிற
நாஸூக்கு வார்த்தைகளை
பால்கனிப் பாதுகாப்புத் தடுப்பில் 
மார்பழுந்த
நிலம் நோக்கி உதிர்க்கும்
மாடி வீட்டுப் பெண்களிடம்,

02 July 2011

களை

வாய் வீச்சில் 
தன்னை வாளென்று நம்பி
காற்றில் சுழன்ற
சவரக்கத்தி,
மொக்கை 
என்பதற்கு சாட்சியாய் 
மண்டிக் கிடக்கிறது தாடி.

மறவாதிரு மனமே! அது மதி!

மனமே! நீ வெறும் தாண்டவக்கோன் என்று தெரிந்த என்னிடமே ஆண்டவக்கோன் போல வேஷம் கட்டுவது சரியா? அல்லது உன் சரிவா? எதையோ நான் தோலுரிக்க அது உனக்குக் கரிக்க, கஷ்கத்து முடிபோல அலட்சியமாய், இது நம் கைக்கடக்கம் என்றென்னை நினைத்து இறுமாந்திருந்தாய்.

01 July 2011

சும்மா இருக்கக் கத்துக்கணும்

காலம் அழிக்கும் முதல் பெயர் போர்ஹேவாகத்தானிருக்கும் என்று ஆருடமாய் உளறுவேன். பிறகொருநாள் எச்சிலாய்த் துப்பியதை ஹிஹிஹி என்றபடி வழித்து நக்குவேன்.

30 June 2011

எவன்

மூடிய திரையின் முன்பாக
பிம்ப நிர்பந்தத்தில்
குவிந்து நின்றன கரங்கள்.
நிழலாடி நெளிந்தது
சிகையவிழ்ந்தகோலம்.
தாண்டவமென்று
கன்னத்தில் தப்பிட்டுக்கொண்ட
பக்தி,
பரவசத்தில்
சுலோக சீழ்க்கை அடித்தது.
தரிசனத்திற்கு தாமதமாகிறதென்ற பதற்றத்தில்
பரபரவென சிடுக்கவிழ்த்து
லிங்கமாய்
உருமாறிக் கொண்டிருந்தான் சிவன்.

26 June 2011

ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது பறை!

கட்டியக்காரிகள் நிகழ்த்திய பாமாவின் மொளகாப் பொடி

நாடகம் முடிந்து நான்குமணி / ஆறுமணி நேரமாகிவிட்டது. ஆனால் இன்னமும் உள்ளே அதிர்ந்து கொண்டிருக்கிறது பறையின் உன்மத்தம் உண்டாக்கிய ஒலி.

25 June 2011

சுஜாதாவுக்கு நெரி கட்டுவதன் மர்ம விளக்கம்.


இருபதாம் தேதி ஜெமோவின் அலெக்ஸா ரேட்டிங்கை ட்விட்போட்டு பஸ்ஸ்விட்டு ஃபேஸ்புக்கில் எழுதினால் இருபத்து நாலாம் தேதி சுஜாதாவுக்கு நெரி கட்டுவதன் மர்ம விளக்கம்.

24 June 2011

இயற்கையின் காவியம்

ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்னருக்கு, மாதிரிப் பரிசோதனைக்குப்பின் கதவை மூடி இறுதி முத்திரை வைப்பதற்காகத் தொழிற்சாலைக்கு செல்லவேண்டி இருந்தது. வாடிக்கையாளர்கள் கேட்கும் வடிவில் க்ரேனைட்டில் கல்லறைக் கற்களைத் தயாரித்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை. முழுமையடைந்த கற்பலகைகள் கண்டெய்னரில் ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட பேக்கிங்கில் இருந்தன. வேலை முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும் போல் தெரிந்தது.

22 June 2011

மூன்று கவிதைகள்

வழி

ஊழல் பேர்வழிகளை
உள்ளே தள்ளு
சட்டமும் சமூகமும்
வாழ வேண்டாமா?

21 June 2011

அவதூறம்மா அவதூறு


Charu Nivedita
மூன்று தினங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக்கைத் திறந்தால் என் மீது ஒரே அவதூறு. ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். யார் மீது வேண்டுமானாலும் யாரும் இப்படி ஒரு போலியான உரையாடலை உருவாக்கி நெட்டில் உலவ விட முடியும். நான் யாரோடும் எப்போதும் chat செய்வதில்லை. ஷோபா சக்தி மீது அவதூறு செய்தார்கள். இப்போது என்னைப் பிடித்திருக்கிறார்கள். அவதூறுகளுக்கு பதில் சொல்லி பதில் சொல்லி அலுப்பாக இருக்கிறது
17 hours ago

************

இப்பயாவுது புத்திவருதா? 
சாட் ஹிஸ்டரிய முழுசாப் போடுங்கம்மா!  மெய்ல் ஐடியோட டேட்டோட, ஒரிஜினல் ஃபார்மேட்டோட அப்பிடியே காப்பி பேஸ்ட் பாண்ணிப் போடுங்கம்மா!

சும்மா பொன்மொழிகள் மேரி அங்கொண்ணும் இங்கொண்ணுமா டகால்டியா எடிட்பண்ணி வீடியோ வுட்டா வேலைக்காவுமா?

ஆப்புன்னா அசைக்க முடியாததா இருக்கணும். மீறி அசைச்சா அதுக்கு மேல ஆப்பரேஷனே வேணாம்ங்கறாப்புல ஆயிடணும்.

புதிர்

சப்புவதும் நக்குவதும்
கலவியில் சகஜம்.