சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா - கன்னத்தில் விழுந்த அறை!
1981ல் புறநகர் ரயில் செண்ட்ரலை நோக்கி வந்துகொண்டு இருந்தது. மாநகரின் வடக்கு எல்லையைத் தாண்டிய சிற்றூரில் நிகழ்ச்சியை நடத்திவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது நவீன நாடகக்குழு. இலக்கியக் கலகக்காரன், சினிமாப் பிரவேசி, அரசுக் கல்லூரி ஆசிரியன், அரசு / வங்கி / அச்சக ஊழியர்கள், சினிமா இயக்குநர் ஆகக் கனவு மட்டுமே கண்டுகொண்டிருந்தவன், சுதந்திர பத்திரிகையாளன் எனக் கலப்படமான நபர்களால் ஆன நாடகக் குழு. காவல் நிலைய கற்பழிப்புகளை அம்பலப்படுத்தும் நாடகம். குழுவுடன் கெளரவ அங்கத்தினராய் ஜன்னலோரம் நாடக ஆசிரியரும் பட்டும்படாமல் அமர்ந்து வந்து கொண்டிருந்ததார்.