21 July 2011

வருகை

பக்கத்து இருக்கையில்
சுந்தரகாண்டம் படிக்கும் பெண்ணுக்கு
நினைத்தது ஜெயமாக,
ஆர்ப்பாட்டமின்றி
ஜெபிக்க முடிந்திருந்தால்,
எப்போதோ வந்திருப்பார்
எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்டவர்.

20 July 2011

தேடல்

கசிந்துருகிய மனிதன் கடவுளைக் கண்டான்.

கோயிலை இடிக்கறதுங்கறது...

 rozavasanth 

@ 
பொதுவாகவே ஒன்பது மணிக்கே சூரியனைக் காண்பவன். ஞாயிறு எனில் காலைக் காப்பியே மதியம் ஒரு மணிக்குத்தான். ஆகையால் திரைப்பட சங்கக் காட்சிகள் இருந்தால் தவிர ஞாயிறு பகல் ட்ரைவ்-இன்னுக்கானது அல்ல. 

19 July 2011

மனரோகசிரோமணி

குரைத்துச் சாவது நாயின் விதி
எனில்
குரைப்புக்கு உரையெழுதுவதா 
என்
ஜன்ம சாபல்யம்?

பல்கலைக்கழகத்தில் பாடமாக...

http://www.facebook.com/notes/rajan-kurai-krishnan/waste-a-tamil-poem-by-vimalathitha-mamallan-translated-by-me/251199861559185

WASTE (a Tamil poem by Vimalathitha Mamallan translated by me)
by Rajan Kurai Krishnan on Monday, July 18, 2011 at 7:50pm

18 July 2011

கவிதையும் கவிஞனும்

எதையோ தேடிப்போனவன், Ayyanar V பஸ்ஸில் இடறி ஏற, விக்ரமாதித்யனின் இந்தக் கவிதையைக் கண்டதும் துணுக்குற்றேன்.

மழை அழகானது
நான்
சமவெளியில்...

- விக்ரமாதித்யன்

மண்ணாங்கட்டி

இப்போது படுத்தால்தான்
எழுத்திருக்கலாம் காலை
அல்லது நாளை.

கிழி

கிழி
கிழிகிழி என
கையில் அகப்பட்ட
எல்லாவற்றையும் கிழி
கிழிப்பது உன் ஜனநாயக உரிமை.

இடையில், சற்றே குனிந்துன்
இடையைப் பார்த்து உறுதி செய்துகொள்
கிழியாமல் இருக்கிறதா என்று.

17 July 2011

அம்பலப்படுத்துவது சரிதான். ஆனால் நாம் அவமானப்படுத்துவது யாரை?

ஆறுதல் வேண்டி எழுதப்பட்ட கடிதம்கூட மானக்கெட்டவனுக்கு, பழிவாங்கக் கையில் கிடைத்த ஆயுதம். 

சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி பெற்றுதான் கடிதம் வெளியிடப்பட்டதா? அதை நாமும் சுற்றில் விடுவதா? 

அம்பலப்படுத்துவது சரிதான். ஆனால் நாம் அவமானப்படுத்துவது யாரை? 

ஆவேசப்படாமல் சிந்தித்துப் பார்த்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது.

வியர்த்தம்

சுயம் எரித்துத்
தீயாய் கனன்றெழ
விதிக்கப்பட்டிருந்த கரித்துண்டு,

வெளிநாட்டு எழுத்தாளருக்கு உள்நாட்டிலிருந்து ஒரு கடிதம் - [கதைபோலவும் படிக்கலாம்]

இயற்கையின் காவியம் பதிவை ஃபேஸ்புக் தனிச்செய்தியில் பாராட்டி இருந்தீர்கள். கூகுள்+ஸில் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். நன்றி. 

கண்ணீர்ச்சுவடு

கன்னம் தொட்டு செல்லம் கொஞ்சிய
முன்பின் அறியா பெண்களின் சுகந்தம்,

16 July 2011

நாய்கள் ஜாக்கிரதை!

குமாரி பிரேமலதா டபிள்யூ ஆர் ஸ்வர்னலதா கல்கி சாண்டில்யன் நாபா அகிலன் சுஜாதா என்று படித்துக் கொண்டிருந்தபோது இப்படி இருந்தவன்

ராரா! சரஸக்கு ராரா!

”ஏண்டா நரசிம்மன்னு வைத்த சோளிங்கர் குலதெய்வத்தின் சிரேஷ்டமான பெயரை மாமல்லன் பீமல்லன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறாய்? கர்மம் கர்மம்”

15 July 2011

அடுத்து ஒரு விண்ணப்பம்

fromparthasarathi.jayabalan@*****
tomadrasdada@gmail.com
dateThu, Jul 14, 2011 at 12:12 PM
subjectRE: ழார் பத்தாயின் குதிரை
mailed-by*****
hide details 12:12 PM (20 hours ago)
மாமல்லன் சார் - நன்றி என்று ஒரு வார்த்தை சொல்வது பொருத்தமாக இராது.