23 July 2011

நான் அவனில்லை - அவன்தான் இல்லை # எம்டிஎம் ஃபேஸ்புக்கில்

உங்கள் கவிதை மொழிபெயர்ப்புக்கு ஒரு கமெண்ட் எழுதினாலும் எழுதினேன் என் தகவல் பெட்டி நிரம்பி வழிகிறது. 'மாம்ஸ்' என்கிறார்கள், 'இன்னாம்மே' என்கிறார்கள் இதுவெல்லாமாவது பரவாயில்லை, ஆனால் 'தல' என்னும்போதும் 'பிரிச்சி மேஞ்சிட்டேங்க' 'சான்ஸே இல்ல' என்று உரையாடும்போதும் என் கண்களில் நீர் மல்கிவிடுகிறது. 'பார்ட்டி' என்று அழைத்துவிட்டால் கதறியே அழுதுவிடுகிறேன். உரையாடல்களின் சாரத்தை உங்களுக்கு சொல்லாவிட்டால் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும் போலிருக்கிறது. சாராம்சம் இதோ:

22 July 2011

குறுங்கவிதைகள்

எதைப்பார்த்து குரைக்கிறது
என்பது தெரியும்வரை

கொம்பு

எதையும் பிடிக்காமல்
சும்மா கையை வைத்துக் கொள்வதுதான்
எத்துனைக் கஷ்டம்

21 July 2011

போஸும் ஆபீசும்

ஜெயமோகனுக்கு கிடைத்தது வடகிழக்கில் போஸு

ஜெயமோகனின் முன்ஜாமீன்


இது என்ன முன் ஜாமீனா?

ரணமற்ற ரத்தக்கறை

முண்டியடுத்து முன்னேறிய
முட்டிகளில் ரணம்.
கரங்களில் உயிர்களின் ரத்தக்கறை.

துருத்தலும் இருத்தலும் - இரண்டு கவிதைகள்

புள்ளிக் கோலம் என்பதற்காக
புள்ளி புள்ளியாய்த் தெரிவது கோலமாகுமா?

வருகை

பக்கத்து இருக்கையில்
சுந்தரகாண்டம் படிக்கும் பெண்ணுக்கு
நினைத்தது ஜெயமாக,
ஆர்ப்பாட்டமின்றி
ஜெபிக்க முடிந்திருந்தால்,
எப்போதோ வந்திருப்பார்
எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்டவர்.

20 July 2011

தேடல்

கசிந்துருகிய மனிதன் கடவுளைக் கண்டான்.

கோயிலை இடிக்கறதுங்கறது...

 rozavasanth 

@ 
பொதுவாகவே ஒன்பது மணிக்கே சூரியனைக் காண்பவன். ஞாயிறு எனில் காலைக் காப்பியே மதியம் ஒரு மணிக்குத்தான். ஆகையால் திரைப்பட சங்கக் காட்சிகள் இருந்தால் தவிர ஞாயிறு பகல் ட்ரைவ்-இன்னுக்கானது அல்ல. 

19 July 2011

மனரோகசிரோமணி

குரைத்துச் சாவது நாயின் விதி
எனில்
குரைப்புக்கு உரையெழுதுவதா 
என்
ஜன்ம சாபல்யம்?

பல்கலைக்கழகத்தில் பாடமாக...

http://www.facebook.com/notes/rajan-kurai-krishnan/waste-a-tamil-poem-by-vimalathitha-mamallan-translated-by-me/251199861559185

WASTE (a Tamil poem by Vimalathitha Mamallan translated by me)
by Rajan Kurai Krishnan on Monday, July 18, 2011 at 7:50pm

18 July 2011

கவிதையும் கவிஞனும்

எதையோ தேடிப்போனவன், Ayyanar V பஸ்ஸில் இடறி ஏற, விக்ரமாதித்யனின் இந்தக் கவிதையைக் கண்டதும் துணுக்குற்றேன்.

மழை அழகானது
நான்
சமவெளியில்...

- விக்ரமாதித்யன்

மண்ணாங்கட்டி

இப்போது படுத்தால்தான்
எழுத்திருக்கலாம் காலை
அல்லது நாளை.

கிழி

கிழி
கிழிகிழி என
கையில் அகப்பட்ட
எல்லாவற்றையும் கிழி
கிழிப்பது உன் ஜனநாயக உரிமை.

இடையில், சற்றே குனிந்துன்
இடையைப் பார்த்து உறுதி செய்துகொள்
கிழியாமல் இருக்கிறதா என்று.