குடித்துக்கொண்டிருந்த காலத்தில், குடிக்காமல் இருக்கும்போது சகஜமாய் உளறிக்கொண்டு திரிபவன், குடித்ததும் குடித்துவிட்டு உளறியதாய் ஆகிவிடக்கூடாது என்கிற தன்னுணர்வில், வாய்மூடி மெளனியாகிவிடுவேன்.
ப்ரணதார்த்தி ஹரன் என் அலுவலக நண்பன். நன்றாகப் பாடுவான். எஸ்ஐஇடி கல்லூரிச் சாலைக்கும் எல்ஆர் ஸ்வாமி கட்டிடத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் அண்ணாசாலை பிராக்கெட் ஆகும். அந்த வளைவில் இருக்கும் கட்டிடத் திட்டுகளில் சற்றே உள்ளொடுங்கிய ஒன்றில் இப்போது இருக்கும் சேவை வரிப் பிரிவுக்கு பதில், முழுக்கவும் கலால்துறை மட்டுமே இருந்த காலம் அது. அப்போது. அலுவலகத்தின் பின்புறம் கேண்டீன் என்கிற பெயரில் இருந்த ஒற்றை அழுக்கு மேசையில் வடைக்கும் டீக்கும் இடையில் ஹரனின் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும்.
இது போன்ற கட்டுரைகள் முடியும்போது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் வருகிறதே ? அது ஏன் தோழர் ? ஒருவேளை சுஜாதாவின் சிறுகதைகள், ஒ ஹென்றியின் புனைவுகளின் தாக்கமாக இருக்குமோ ?