அடுத்த ஒரு வருஷத்துக்கு, ப்ளாக் எழுதறதைக் கொஞ்சம் தள்ளி வெய்ங்க. யூ கேன் டூ வொண்டர்ஸ். உங்களால செய்ய முடியாதுன்னு இல்லை. வேரீட் இண்ட்ரஸ்ட்ஸ்ல உங்க எனர்ஜி வேஸ்ட் ஆகுது.
@Dyno Buoy : அய்யனார், ஸ்ரீதரின் அதே கதையை முயற்சித்திருக்கிறார்னு பாத்ததுமே எனக்கும் எழுதிப்பாக்கணும்னு ஆர்வம் ஏற்பட்டது. சிறுபிள்ளைத்தனமா இதெல்லாம் தேவையான்னு கொஞ்சம் வெக்கமாவும் இருந்துது. ஆனா எழுதணும்னு தோணியதே மேலோங்கியதாலே அய்யனாரைப் படிக்கலை. கமெண்ட்ஸ் மட்டும் படிச்சிகிட்டு வந்தேன்.
<ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.>
<இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.>
அசோகமித்திரன் என்பவர் அறிமுக எழுத்தாளரா? இன்றைக்குச் சரியாக 30 வருடங்கள் முன்னால் 1981 கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் அறிமுக எழுத்தாளனாய் மூன்றாவது பரிசு வென்ற மூத்த எழுத்தாளன் என்கிறமுறையில் அசோகமித்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
குடித்துக்கொண்டிருந்த காலத்தில், குடிக்காமல் இருக்கும்போது சகஜமாய் உளறிக்கொண்டு திரிபவன், குடித்ததும் குடித்துவிட்டு உளறியதாய் ஆகிவிடக்கூடாது என்கிற தன்னுணர்வில், வாய்மூடி மெளனியாகிவிடுவேன்.
ப்ரணதார்த்தி ஹரன் என் அலுவலக நண்பன். நன்றாகப் பாடுவான். எஸ்ஐஇடி கல்லூரிச் சாலைக்கும் எல்ஆர் ஸ்வாமி கட்டிடத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் அண்ணாசாலை பிராக்கெட் ஆகும். அந்த வளைவில் இருக்கும் கட்டிடத் திட்டுகளில் சற்றே உள்ளொடுங்கிய ஒன்றில் இப்போது இருக்கும் சேவை வரிப் பிரிவுக்கு பதில், முழுக்கவும் கலால்துறை மட்டுமே இருந்த காலம் அது. அப்போது. அலுவலகத்தின் பின்புறம் கேண்டீன் என்கிற பெயரில் இருந்த ஒற்றை அழுக்கு மேசையில் வடைக்கும் டீக்கும் இடையில் ஹரனின் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும்.