சீனப் பெருமதில் அந்த நாட்டின் வடக்கு முனையில் முடிவடைந்திருந்தது. தென் கிழக்கிலிருந்தும் தென் மேற்கிலிருந்தும் இரண்டு பகுதிகளாக வந்து கடைசியில் அங்கே ஒன்று சேர்ந்தது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த இரண்டு தொழிலாளர் அணிகள் பகுதி பகுதியாகக் கட்டி முடிக்கும் கட்டுமான உத்தியை சிறிய அளவில் பயன்படுத்தியிருந்தார்கள். அதை இப்படிச் செய்தார்கள்: இருபதுபேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்தைக் கட்ட வேண்டும். ஐநூறு காதம் என்று வைத்துக் கொள்வோம். அதே போன்ற இன்னொரு குழு முதலில் கட்டி முடித்த பகுதியுடன் இணையும்படி அதே நீளமுள்ள இன்னொரு பகுதியைக் கட்டியது. ஆனால் இந்த இணைப்பிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அதாவது ஆயிரம் காதம் கட்டிய பின்பு, ஆரம்பமாவதல்ல மதிலின் கட்டுமானம் . மாறாக, மறுபடியும் கட்டுமானத்தைத் தொடர்வதற்காக இந்த இரண்டு அணிகளும் முற்றிலும் வேறான சமீபப் பகுதிகளூக்கு மாற்றப்பட்டன. இதனால் ஏராளமான இடைவெளிகள் உண்டாயின. பின்னர் மெல்ல மெல்லவே இந்த இடைவெளிகள் சரி செய்யப்பட்டன. மதில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரையும் சில இடங்களில் முடிக்கப்படவில்லை. உண்மையில் ஒருபோதும் முழுமையாக்கப்படாத இடைவெளிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அது பரிசோதனை செய்யப்பட முடியாததாக இருக்கலாம். அல்லது மதிற் சுவரின் பிரம்மாண்டமான கட்டுமானம் காரணமாக , ஒரு மனிதனால் தன்னுடைய கண்களாலோ அல்லது தீர்மானத்தாலோ பரிசோதனை செய்ய முடியாதது என்று காட்டுவதற்காக எழுப்பப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.
ஓர் இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தனது கையெழுத்துப் பிரதியில் திருத்திக் கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி.திடீரென்று யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த நேரங் கெட்ட நேரத்தில் எந்த விருந்தாளியும் வருவது வழக்கமில்லை. தனக்கோ ஒரு வேலையாள் கூடக் கிடையாது. பிறகு இந்த அகாலத்தில் யாராக இருக்கும்?
அச்சுவெல்லமாய்
வார்க்கப்பட்ட பிள்ளையார்
சுபிட்சம் அளிக்க
நாற்பது ரூபாய்க்கு வீடு வந்தார்.
கொசுறாய் வந்தது
குண்டிப்புறம்
குடையைப் பிடித்துக்கொள்ளக்
கொஞ்சம்போல களிமண்.
இடுக்கில் எழுது
கிடைத்த இடுக்கில் எழுது
கிடைத்த இடுக்கைப் பற்றி எழுது
கிடைக்காத இடுக்கைப் பற்றியும் எழுது
இடுக்கில் எழுத நேர்ந்ததே என்கிற புலம்பலையும் எழுது
முக்கியமான விஷயம் இடுக்கா எழுத்தா?
இரண்டும்தான்
சீசருக்கு உரியது சீசருக்கு
ஆண்டவருக்குரியது ஆண்டவருக்கு
சண்டை நம் ஈகோவுக்காக இல்லாமல் நமக்கு சரியெனப்படும் இலக்கிய தரப்பிற்கானது எனில் கட்டாயம் இலக்கியத்தரமாக அமைந்தே தீரும் # ’தரம்’ என்பது உயர்தர ஜெபமாலை உருட்டலில்லை.