05 February 2012
04 February 2012
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...
இலக்கிய எழுத்தாளர் ’கேளிக்கை சினிமா’ நடிகர் என இரண்டு பேர் ஒரு விழாவில் இரண்டு கதைகளைச் சொல்கிறார்கள். இரண்டுமே அவர்கள் படித்த (அல்லது கேள்விப்பட்ட) கதைகள் எனும்போது நம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?
03 February 2012
ரஜினி அவர்களுக்குப் பாராட்டு விழா
கலைஞர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பதுதான் உலகம் முழுமையும் நம்பும் பொதுக் கருத்து. ஆனால் உலகத்தரம் வாய்ந்த இலக்கிய சாதனைகளைப் பாராட்டுவதைவிடவும் ஒருபடி மேலே போய், உச்ச நட்சத்திரத்தைப் உச்சி குளிரப் புகழ, உலக இலக்கிய வாசிப்பை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் உணர்த்தியது இந்த விழாவின் இன்னொரு சிறப்பு.
01 February 2012
ஹாஜி முராத் - டால்ஸ்டாயின் கடைசி நாவல் - சுகுமாரன்
''அப்போதுதான் உழுதுபோட்டிருந்த கரிசல் வயல்வெளிக்குக் குறுக்காகத்தான் வீட்டுக்குப் போகும் வழி.புழுதி படர்ந்த அந்த வழியாக நடந்தேன். உழவு முடிந்த அந்த வயல் ஒரு பெரிய நிலவுடைமையாளனுடையது.பாதையின் இருபுறமாகவும் எனக்கு முன்னால் தெரியும் குன்றின் அடிவாரத்திலுமாகவும் வயல் விரிந்து கிடந்தது. சீரான உழவு சால்களையும் சதுப்பான மண்ணையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை.ஆழமாக உழவு செய்யப்பட்டிருந்ததனால் மண்ணில் புல்லையோ வேறு செடிகளையோ பார்க்க முடியவில்லை. எல்லாம் கறுப்பாக இருந்தது. உயிரற்ற அந்தக் கரிய பூமியில் உயிருள்ள ஏதாவது தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ' மனிதன்தான் எத்தனை நாசக்காரன். தன்னுடைய இருப்புக்காக உயிருள்ள வெவ்வேறான எத்தனை தாவரங்களை அழிக்கிறான்?' என்று யோசித்தேன். எனக்கு முன்னால் பாதையின் வலது பக்கத்தில் சின்னப் புதர் தெரிந்தது. நெருங்கிப் பார்த்தபோது சற்று முன்பு, நான் அநாவசியமாகப் பறித்து வீசியெறிந்த நெருஞ்சி என்று தெரிந்தது. அந்தத் 'தார்த்தாரிய' தாவரத்துக்கு மூன்று கிளைகள் இருந்தன. ஒரு கிளை உடைந்து வெட்டப்பட்ட கை போல ஒட்டிக்கொண்டிருந்தது. மற்ற இரு கிளைகளிலும் பூக்கள் இருந்தன.அவை முன்பு சிவப்பாக இருந்து இப்போது கருமையேறியிருந்தன. ஒரு தண்டு ஒடிந்திருந்தது. மறு பாதி நுனியில் அழுக்குப் புரண்ட பூவுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்த பூவும் கறுப்புச் சேறு படிந்து இருந்தாலும் நிமிர்ந்து நின்றிருந்தது. ஏதோ வண்டிச் சக்கரம் அந்தச் செடியின் மேல் உருண்டு போயிருக்க வேண்டும். ஆனாலும் செடி மறுபடியும் நிமிர்ந்து எழுந்திருக்கிறது. அதனால்தான் விறைப்பாக நின்றாலும், உடலின் ஒரு பகுதி பிய்த்து எடுக்கப் பட்டதுபோலவோ, குடல்கள் உருவப்பட்டது போலவோ, ஒரு கை முறிக்கப்பட்டதுபோலவோ, கண்கள் பிடுங்கப்பட்டதுபோலவோ அது ஒரு பக்கமாகத் திருகியிருந்தது. எனினும் தன்னுடைய சகோதரர்களை அழித்த மனிதனுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நின்றது.
எஸ்.ரா! ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி
| 2:47 PM (3 hours ago) | |||
|
என்னுடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூன்று தமிழ் ஆய்வாளர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பதினோறு பேர் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். நான்கு கல்லுரிகளிலும் இரண்டு பல்கலைகழங்களிலும் என்னுடைய படைப்புகள் பாடமாக வைக்கபட்டிருக்கின்றன.
31 January 2012
காந்தி - டால்ஸ்டாய் கடிதங்கள் - பேராசிரியர் எஸ்.ராவின் பார்வைக்கு
என்று எழுதிய முகூர்த்த விசேஷம், தகவல்களாய் வந்து கொட்டுகின்றன. முடிந்தவரை எனக்கு வந்த அனைத்தையும் எல்லோருக்கும் பயன்படக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் இங்கே தொகுக்கிறேன். குறிப்பாக,
பேராசிரியர் எஸ்.ரா
இடிச்ச புளியாய் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொல்லாமல் இருக்கும்வரை இவரும் புத்திசாலிதானோ என்று தோன்றும். அதுவும் பளபளக்கும் முன்மண்டை வாய்க்கப்பட்டால் படித்தே முடிகொட்டிப் போனத்ற்கு சாட்சியமாய் அசப்பில் பேரறிஞர் பெர்னார்ட் ஷாவோ என்றுகூடத் தோன்றும். இது போதாதென்று மைக்கையும் பிடித்து சப்ளாக்கட்டையும் இல்லாமல் இலக்கிய உபன்யாசம் வேறு கொடுத்தால் கேட்கவே வேண்டாம் ஆழ நீள அகலத்தில் அசல் இலக்கியவாதி இவர்தான் என்று தோன்றிவிடுவதில் என்ன ஆச்சரியம்.
28 January 2012
காசு - விலிருந்து வந்த காசோலை
மனதுக்குப்பிடித்த சந்தோஷமான காரியமே தொழிலாகவும் அமைவதென்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி.
- லால்குடி ஜெயராமன்
25 January 2012
எஸ்.ராவுக்கெதிரான அவதூறுக்கெதிராகக் கண்டணம்
இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தம் பெயரில் வெளியிட்டிருப்பவர் என்கிற பெருமைக்கு உரியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அறந்தை நாராயணன் வாரந்தோறும் வயதாகிறது என்று நடிகையைப் பற்றி எழுதியதைப்போல வாரந்தோறும் விருதாகிறது என்பதையே தம் வாழ்நாள் இலக்கிய சாதனையாக வாழ்ந்துகொண்டிருப்பவர். அவரது இலக்கிய சாதனையைப் பாராட்ட ரஜினியும் வைரமுத்துவுமே வாயில்தேடி வருமளவுக்கு மதிப்பு மரியாதையுடன் இலக்கியமாய் வாழும் ஒருவரைப்போய் அவதூறு செய்யலாமா? அப்படி செய்யப்படும் அவதூறை இலக்கிய உலகம் கண்டிக்காமல் விடலாமா? ஊர்பேர் தெரியாத ஒருவர் கிசுகிசு பாணியில் அவதூறு செய்தால் அதை பார்த்துக்கொண்டு எழுத்தாளர்கள் தமிழில் எழுதும் பாவத்திற்காக சும்மா இருக்க வேண்டுமா?
22 January 2012
எண்ணிகையற்ற ஏணிகள்
நடந்துமுடிந்த புத்தகக்கண்காட்சியில் வாங்கியதை விடவும் வேடிக்கை பார்த்ததுதான் அதிகம். நின்றும் அலைந்தும் வேடிக்கை பார்த்ததைவிட உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததே ஜாஸ்தி. உட்கார விரும்பியதும் உட்கார முடிந்ததுமான ஒரே இடம் தமிழினி. வசந்தகுமாரின் அருகில்தான். அவன் 81லிருந்து நண்பன். எந்த காலத்திலும் வெளிச்சத்திற்கே வரவிரும்பாதவன். அவனது இலக்கிய ரசனைக்கும் எனக்கும் ஒத்தே வராது. பல சமயங்களில் அவனது அபிப்ராயங்கள் முட்டாள்தனமாகக்கூடத் தோன்றும். வாதத்திற்கே வராமல் கட்டைப் பஞ்சாயத்தாக ஒற்றை வார்த்தை ஒரு வரியில் அடித்துவிட்டுப் போய்விடுவான்.
வார்த்தையும் சாரமும்
20.10.10க்கும் 20.01.12க்கும் இடையில உண்மையிலேயே வித்தியாசம் இருக்கிறதா? குறிப்பாக 2010ல் ’உதிர்த்ததால்’ என்பதையும் 2012ல ‘வேலியோர’ என்பதையும் பாருங்கள் எந்த வகையான இலக்கியம் என்பது புரியலாம். சுலபத்தில் புரளுகிற நாவல்ல இது.
20 January 2012
விஞ்ச இயலாதவர்களின் குஞ்சுகள்
On Thu, Jan 19, 2012 at 8:30 AM, Arul Victor Suresh <***@gmail.com> wrote:
19 January 2012
எந்துண்டி வஸ்தி?
நகுலன் எழுதிய எல்லாவற்றிலும், இல்லாத அர்த்தங்களை இட்டு நிரப்பி தமக்குத்தாமே இலக்கிய டோப்பா மாட்டிக்கொண்டு இளிக்கும் போலிகளை சுளுக்கெடுக்கும் பிரமிளின் விமர்சனக் கவிதை இது.
18 January 2012
Subscribe to:
Posts (Atom)