19 February 2012

கேட்டேளே அங்கே அதப் பாத்தேளா இங்கே - சாருண்ணா! அட சைக்கோண்ணா!

ரோஜா முத்தையா நூலகத்தில் பல சிரமங்களுக்கு இடையில் கடுமையான ஆராய்ச்சி செய்து எழுதிய ’தீராக்காதலி’ என்கிற புத்தகத்தைத் தாழ்ந்த தமிழகம் கண்டுகொள்ளவில்லை என்று எழுத்தாளர் புலம்பியதால்தான் ஆராய்ச்சியின் லட்சணம் என்ன என்கிற கேள்வியை எழுப்ப நேர்ந்தது.

17 February 2012

டேய் அண்ணன் கைல என்னடா?

டேய் அண்ணன் கைல என்னடா?

சாரு பிழிந்த சாறு


<சரி, புத்தகம்தான் விற்கவில்லை. அதற்கு ஏதாவது மதிப்புரையாவது வந்ததா என்றால் அதுவும் இல்லை. இப்போது ரஜினியைக் கொண்டாடும் அளவை விட மிகப் பெரிய அளவில் தமிழ்நாடே கொண்டாடிய எம்.கே.டி.யைப் பற்றி எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, அந்தமான் சிறைக்குச் சென்று திரும்பி, சொத்தையெல்லாம் இழந்து, கண் பார்வையும் பறிபோய் அவர் ஒரு அம்மன் கோவிலில் அமர்ந்து இருந்த போது ‘யாரோ குருட்டுப் பிச்சைக்காரன்’ என்று அவர் மடியில் காசு போட்ட சம்பவம் பற்றி அந்த நூலில் எழுதியிருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகம் இங்கே தமிழக வரலாற்றில் நடந்தேறிய சம்பவம் அது. அழுது அழுது, உருகி உருகி என் உயிரே கரைந்து போன நிலையில் எழுதினேன். ஒரு காலத்தில் தமிழக மக்களின் கடவுளாக இருந்தவர் எம்.கே.டி. அப்படிப்பட்டவருக்கு அந்த நிலை! >

14 February 2012

ஆத்தர் சாவடிச்சா... அது ராங்காப் போறதில்லே

//author is dead//

அட! இதெல்லாம் கேழ்க்க நன்றாகத்தான் இருக்கு. 

பாபாவின் சீடன்

atul sharma                                                                                                            5:16 PM (2 hours ago)

Dear friends,

Please find attached herewith the photographs of Mud- Block- House constructed at Kosurla village 35 k.m. from wardha. Smt. Sindhubai wankar, mentally challenged women, abandoned by her in-laws was staying in the shed with her 13 year old daughter. Two years ago her aged mother died in the same shed.

10 February 2012

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...

09 February 2012

சுயபாரம் சுமந்து...

இலக்கியத்திற்காகவும் இலக்கியமாகவும் மட்டுமே தம் வாழ்நாள் முழுமையும் வாழ்ந்துகொண்டிருப்பதாய் புலம்புவதுபோலப் பீற்றிக்கொள்வதும் பீற்றிக்கொள்ளுவது போலப் புலம்புவதும் தமக்கு என்னென்ன் கெளரவங்கள் கிடைத்திருக்கின்றன,தாம் எங்கெங்கெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும் விருதுகளை சுமந்து கொண்டிருக்கிறோம் என்று சதா சர்வகாலமும் தங்களை இறக்கிவைக்க முடியாமல் சுயபாரம் சுமந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகளின் கவனத்திற்கும் அவர்களது பல்லக்கை சுமப்பதே தம் வாழ்நாள் பாக்கியம் என்று அலையும் வாசகர்களின் பார்வைக்கும் ரமணரின் பதில் போன்ற இந்தக் கேள்வியைக் கொண்டுவருவது நம் கடமையல்லவா?

07 February 2012

ரஜினிக்கு சாரு வகுப்பெடுத்தால் சாருவுக்கு வாசகர் சுளுக்கெடுக்கிறார்


ரஜினிக்கு அறிவுரை கூறும் சாருவுக்கு, எவனையாவது அடிக்க வேண்டும் என்பதற்காகக்கூட ’அடித்து’ விடுவதை எப்போதுதான் விடப்போகிறார்களோ நம் எழுத்தாளர்கள் என்று வாசகரிடமிருந்து வருத்தமொன்று வந்திருக்கிறது. ஊரறிய அதை சாருவுக்கு அனுப்பி வைப்பது நம் தலையாய கடமையல்லவா?

05 February 2012

எஸ்.ராவும் தமிழ் நண்டுகளும்

எழுத்தாளரும் இல்லை சினிமாவில நுழைய முயற்சித்துத் தோற்றவரா என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் வாசகரும் பதிவருமான கோபிக்கு ஏனைய்யா எஸ்.ரா மேல் இத்தனை வயிற்றெரிச்சல்?

ரிச்சர்ட் வாக்னரின் இசை Apocalypse Now - Avatar

Richard Wagner (22 May 1813  – 13 February 1883) - The Ride of the Valkyries

04 February 2012

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...

இலக்கிய எழுத்தாளர் ’கேளிக்கை சினிமா’ நடிகர் என இரண்டு பேர் ஒரு விழாவில் இரண்டு கதைகளைச் சொல்கிறார்கள். இரண்டுமே அவர்கள் படித்த (அல்லது கேள்விப்பட்ட) கதைகள் எனும்போது நம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

03 February 2012

ரஜினி அவர்களுக்குப் பாராட்டு விழா

கலைஞர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பதுதான் உலகம் முழுமையும் நம்பும் பொதுக் கருத்து. ஆனால் உலகத்தரம் வாய்ந்த இலக்கிய சாதனைகளைப் பாராட்டுவதைவிடவும் ஒருபடி மேலே போய், உச்ச நட்சத்திரத்தைப் உச்சி குளிரப் புகழ, உலக இலக்கிய வாசிப்பை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் உணர்த்தியது இந்த விழாவின் இன்னொரு சிறப்பு.

01 February 2012

ஹாஜி முராத் - டால்ஸ்டாயின் கடைசி நாவல் - சுகுமாரன்

''அப்போதுதான் உழுதுபோட்டிருந்த கரிசல் வயல்வெளிக்குக் குறுக்காகத்தான் வீட்டுக்குப் போகும் வழி.புழுதி படர்ந்த அந்த வழியாக நடந்தேன். உழவு முடிந்த அந்த வயல் ஒரு பெரிய நிலவுடைமையாளனுடையது.பாதையின் இருபுறமாகவும் எனக்கு முன்னால் தெரியும் குன்றின் அடிவாரத்திலுமாகவும் வயல் விரிந்து கிடந்தது. சீரான உழவு சால்களையும் சதுப்பான மண்ணையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை.ஆழமாக உழவு செய்யப்பட்டிருந்ததனால் மண்ணில் புல்லையோ வேறு செடிகளையோ பார்க்க முடியவில்லை. எல்லாம் கறுப்பாக இருந்தது. உயிரற்ற அந்தக் கரிய பூமியில் உயிருள்ள ஏதாவது தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ' மனிதன்தான் எத்தனை நாசக்காரன். தன்னுடைய இருப்புக்காக உயிருள்ள வெவ்வேறான எத்தனை தாவரங்களை அழிக்கிறான்?' என்று யோசித்தேன். எனக்கு முன்னால் பாதையின் வலது பக்கத்தில் சின்னப் புதர் தெரிந்தது. நெருங்கிப் பார்த்தபோது சற்று முன்பு, நான் அநாவசியமாகப் பறித்து வீசியெறிந்த நெருஞ்சி என்று தெரிந்தது. அந்தத் 'தார்த்தாரிய' தாவரத்துக்கு மூன்று கிளைகள் இருந்தன. ஒரு கிளை உடைந்து வெட்டப்பட்ட கை போல ஒட்டிக்கொண்டிருந்தது. மற்ற இரு கிளைகளிலும் பூக்கள் இருந்தன.அவை முன்பு சிவப்பாக இருந்து இப்போது கருமையேறியிருந்தன. ஒரு தண்டு ஒடிந்திருந்தது. மறு பாதி நுனியில் அழுக்குப் புரண்ட பூவுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்த பூவும் கறுப்புச் சேறு படிந்து இருந்தாலும் நிமிர்ந்து நின்றிருந்தது. ஏதோ வண்டிச் சக்கரம் அந்தச் செடியின் மேல் உருண்டு போயிருக்க வேண்டும். ஆனாலும் செடி மறுபடியும் நிமிர்ந்து எழுந்திருக்கிறது. அதனால்தான் விறைப்பாக நின்றாலும், உடலின் ஒரு பகுதி பிய்த்து எடுக்கப் பட்டதுபோலவோ, குடல்கள் உருவப்பட்டது போலவோ, ஒரு கை முறிக்கப்பட்டதுபோலவோ, கண்கள் பிடுங்கப்பட்டதுபோலவோ அது ஒரு பக்கமாகத் திருகியிருந்தது. எனினும் தன்னுடைய சகோதரர்களை அழித்த மனிதனுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நின்றது. 

எஸ்.ரா! ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி


Gan ny ***@gmail.com
2:47 PM (3 hours ago)
to me



என்னுடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூன்று தமிழ் ஆய்வாளர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பதினோறு பேர் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். நான்கு கல்லுரிகளிலும் இரண்டு பல்கலைகழங்களிலும் என்னுடைய படைப்புகள் பாடமாக வைக்கபட்டிருக்கின்றன.