03 March 2012

பாகிஸ்தானுக்கு ஆதரவாக விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்பாட்டம்

ஆர்.எஸ்.எஸ் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மற்றும் இந்திய  தேசாபிமான அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றன என்றால்,இந்துக்களின் நலன் பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது இந்திய தேசத்திற்கு எதிரான காரியங்கள் ஏதேனும் நடந்திருக்கும் என்பதுதான் இதுவரையில் அவர்கள் உருவாக்கியிருந்த பிம்பம். 

01 March 2012

இந்தக் கடிதத்தை நான் பிரசுரிப்பதாய் இல்லை...

முதலில் இந்தக் கடிதத்தை நான் பிரசுரிப்பதாய் இல்லை... அதற்குக் காரணம் கடிதத்தின் இறுதியில் பி.குவாய் இருக்கும் இரண்டு வரிகள்.

இதயம் கூட ’உண்மை’ பேசுகிறது

இதயம் பேசுகிறது மணியன் மேல் எந்த காலத்திலும் எனக்குத் துளிகூட மரியாதை இருந்தது கிடையாது. மாறாக, கேள்விப்பட்டதை விஷயங்கள் காரணமாய் மட்டமான அபிப்ராயமே உருவாகி இருந்தது.

29 February 2012

ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும் - பாகவதர் 2 - ’பாபா கொடுத்த பார்வை’ கடிதம்

R @ j e s h ***@gmail.com                                                                        10:32 AM (2 hours ago)
to me 
Dear Mamallan,

26 February 2012

யாகாவராயினும் புக்காக்க

ஆன்லைன் விளையாட்டுக்களை ஆடிக்கொண்டிருந்த எதிர் வீட்டுக் குட்டிப்பையன் திடீரென காண்ட்-கண்ட், தெர்தா-சர்தா, ஃபூக்கோ-பூக்கோ என தொடர்ந்து கத்தத்தொடங்கிவிட்டான். அந்த வீட்டுக்காரர்கள் என்னமோ ஏதோ என அரண்டுபோயினர். குடும்ப கெளரவத்துக்கு பங்கம் வந்துவிடாத வண்ணம், கமுக்கமாய் அம்மன் கோவில் பூசாரி முதல் 24மணிநேர கிளினிக்கின் ஈயோட்டி மருத்துவர் வரை எல்லோரையும் முயற்சித்துப் பார்த்தனர். ஏது செய்தும் அவன் கத்தலை நிறுத்த முடியாமல் போகவே, இதுபோன்ற கிறுக்கிருக்கும் வீடு என நினைத்தனரோ என்னவோ தம் கவலையை மெல்ல என் மனைவியிடம் பகிர்ந்துகொண்டனர். 

24 February 2012

பொறுக்கிமொழி அவதூறு மூடனுக்கும் விருது

தெரிதா தெர்தா என்று என்னைப்பார்த்து மெட்ராஸ்காரர் யாரேனும் கேட்டால் தெர்லியே என்று சொல்லக்கூடிய நிரக்ஷரகுக்ஷி நான். 

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்


23 February 2012

தோழர்களை சுளுக்கெடுக்கும் ஜெயமோகன்

காவல் கோட்டம் என்கிற நாவலை என் ஆயுளில் படிக்க முடியுமோ முடியாதோ அப்படியே உயிரைக்கொடுத்துப் படித்தாலும் அது எனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதைப் பற்றி எனக்குத் தெரிந்த மாதிரி  எழுத  மீதி ஆயுள் இருக்குமோ இருக்காதோ ஆனால் ஒன்று நிச்சயம் ஜெயமோகனின் காவல்கோட்டமும் தோழர்களும் என்கிற இந்த சுளுக்கெடுப்பு கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 

இந்த ஒரே காரணத்திற்காகவே காவல் கோட்டம் எழுதிய சு.வெங்கடேசனுக்கு பரிசளித்த சாகித்திய அகாதெமிக்கும் இரண்டுவருடம் கழித்து திடீரென முழித்துக்கொண்டு நேற்றுதான் அனைத்தும் கவனத்துக்கு வந்ததான பாவனையில் சுறுசுறுப்பாய் சாடிக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தோழரே 
நீங்கள் எங்கே வாழ்கிறீர்
நாங்களெல்லாம் குழியிலே 
அந்தக் குழியும் தோழரே
மாற்றான் தோளுக்கடியிலே

- ஞானக்கூத்தன் (நினைவிலிருந்து எழுதியது. தவறிருப்பின் திருத்தவும்)

ஆனந்த்! உங்கள் தேசம் மலாவி இல்லைதானே?

On Wed, Feb 22, 2012 at 8:30 PM, Anandh Kumar <***@gmail.com> wrote:

அன்புள்ள மாமல்லன்,

'சிறுமி கொண்டுவந்த மலரி' லிருந்து உங்கள் எழுத்துக்களை தீவிரம்மாக படித்து வருகிறேன் (இதுவரை வலைப்பக்கத்தில்தான்) நேற்று தங்கள் வலைப்பதிவில், 'ரோஸ் மில்க்' படிக்க நேர்ந்தது. அருமையான விவரிப்பு. ஆனால் கடைசியில் ஒரு சிறு குழப்பம். நான் அந்த காட்சிக்குள்ளேயே இருந்ததால் அந்த இல்லாத வரி சரியான நேரத்தில் என்னை கொஞ்சம் அந்நியாமாக்கிவிட்டது. 

தொண்டு நிறுவனங்களைப் பற்றி இப்படியா அவதூறு செய்வது?

NGOs: The Self-Appointed Altruists

Written October 2002
Updated March 2005, August 2011
Their arrival portends rising local prices and a culture shock. Many of them live in plush apartments, or five star hotels, drive SUV's, sport $3000 laptops and PDA's. They earn a two figure multiple of the local average wage. They are busybodies, preachers, critics, do-gooders, and professional altruists. They are parasites who feed off natural and manmade disasters, mismanagement, conflict, and strife.