11 November 2012

கலைஞனும் குமுறலும்

மேதைகளுக்குள் பொது அம்சம் கிறுக்குத்தனம் என்றாலும் ஒவ்வொருவரிடமும் அது ஒவ்வொருவிதமாக வெளிப்படும். 

07 November 2012

கொடுத்தால் மரணஅடி கொடு! இல்லையேல் மன்னித்துவிடு!

எஸ்.வி.ராஜதுரையும் ஜெயமோகனும் அவதூறு செய்ததாய் பரஸ்பரம் குடுமிப்பிடி சண்டையில் இருக்கும் தற்காலச் சூழலில், இணையத்தில் நான் ஈடுபட்ட பல சண்டைகளில் ஒரு குழாயடியைப் பதிவுசெய்திருப்பது நினைவுக்கு வந்தது. புதிய வாசகர்களின் வசதிக்காக, அதை அப்படியே கீழே பிரசுரித்து இருக்கிறேன். அந்த சண்டையின் பின்னணி பற்றி தெளிவுபடுத்தவே இந்த முன்னுரை.

03 November 2012

ஜெயமோகன் பற்றிய பெருங்கவலை

<Court slams anti-Kudankulam agitators for protests>

கிடைத்தது மைக் என்று, நாளை நடக்கவிருக்கும் ராஜபாளையம் நாற்று கூட்டத்தில், கடுப்பை சிம்மில் வைக்காமல், ஓவராய் அறச்சீற்றத்தில் பொங்கி, கோர்ட் அவமதிப்புக்கு ஆளாகிவிடாமல், என் உயிர் நண்பர் ஜெயமோகன் உசாராய் பேசவேண்டுமே என்று, மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. 

ஷீனாவும் நாணாவும்



பாட்டக் கேட்டேளோ! என்னமா பாடியிருக்கா ரெண்டுபேரும். ஷபாஷ்!

02 November 2012

விதைகளும் வதைகளும்

புஷ்பவனம் குப்புசாமி ஆரம்ப நாட்களில் சாஸ்தரீய சங்கீதம் கற்றுக்கொள்ள கர்நடக சங்கீத வித்வானிடம் சென்ற போது, உனக்கெல்லாம் சங்கீதம் வராது அல்லது சொல்லித்தர முடியாது (இது போன்ற அர்த்தத்தில்) கூறிவிட்டார் என்று, அவர் கொடுத்திருந்த பத்திரிகை செய்தி/பேட்டியைப் படித்திருப்போருக்கு, இன்றைய விஜய் டிவி நிகழ்ச்சியில் பூவே செம்பூவே பாடலின் இசைக்கோர்வை பற்றி சிலாகித்துவிட்டு அதை ஸ்ரீராம் பாடுகையில் அவர் நெகிழ்ந்து அழுததோ அப்புறம் அந்த மேடையிலேயே இளையராஜாவுக்கு மானசீகமாக சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்ததோ மெலோடிராமாவாகப் படாது. 

20 October 2012

அறியாத முகங்களை அறிந்த முகங்கள்



இந்த வசதி எனக்கு இல்லை என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கடந்த காலம் பற்றி இஷ்ட்டத்துக்கும் நான் அள்ளிவிட முடியாது. 

30 September 2012

பல உடான்ஸு கட்டுரைகள் - நமீபியாவிலிருந்து


<மணல் தீபோல எரியும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நீங்கள் மேலே செல்லலாம் என்று சொன்னபோது நான் தயங்கியபடி இறங்கினேன். ஆனால் மணல் ஜில்லென்றிருந்தது>

24 September 2012

ரைட்டரின் ராயல்டியும் பதிப்பாளரின் ராயல் டீயும்

’நாம் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அவர்கள் வாழும்போதே பட்டினி போட்டுக் கொல்லத் தயங்காதவர்கள்’ - மனுஷ்ய புத்திரன் # ”ராயல்டி அளிக்காமல்” என்கிற சொற்கள் விட்டுப் போயினவோ?

18 September 2012

உலை

உலை என்றால் 
புகையும் கொதிக்கும் கசியும் 
இன்றில்லை எனினும் என்றேனும் ஒருநாள் 
உயிருக்கே ஆபத்து 
எனவே மூடு!

16 September 2012

பெரிய கடவுளுக்கு சிறிய காணிக்கை


காசு கண்ணன் மீது உயிர்மை மனுஷ்ய புத்திரன் அவதூறு வழக்கு போடவேண்டும்.

13 September 2012

காகிதப் புலி

அன்பான கவின் மலர் வணக்கம்.

தாங்கள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி கண்டேன்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அவசியம் என்பது என் நிலைப்பாடு. மின்சாரம் இரண்டாம்பட்சம்தான், ஆயுதப் பயன்பாட்டுதான் அதன் முதன்மையான நோக்கம் என்றாலும்கூட கூடங்குளம் அவசியம் என்பது என் கருத்து.

07 September 2012

பாசும் பெயிலும்

<Only three out of the 38 persons killed in the blast at the fireworks unit near Sivakasi were identified as employees of the unit. All the remaining deceased are said to be people from neighbouring areas who rushed to the spot as soon as they heard an initial explosion>

இன்றைய நாளிதழில் இந்த செய்தியைப் படித்தபோது, பள்ளிப்பருவ நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது. அமெரிக்கா தனது 200ஆம் சுதந்திர தினத்தைக் கொண்டாட 1976ல் சிவகாசியிலிருந்து பட்டாசு வாங்கப்போகிறது என்கிற செய்தி பத்திரிகைகளில் பரவசத்துடன் வெளியாகி இருந்தது.