’மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த’ சின்மயி ஸ்ரீபாதா அவர்களின் தமிழர் நலன் தமிழ்ச்சமூகம் பற்றிய அறிவார்ந்த புரிதல் தமிழாபிமானம் சாதிபேதம் பாராட்டா நல்லியல்பு ஆகிய உயர்குடி குணநலன்கள் பற்றி, பிஎச்டி ஆராய்ச்சி செய்யும் மாணவனின் தீவிரத்தோடு இணையத்தை அலசிக்கொண்டிருக்கையில் வீடியோ சுட்டியைக் கொடுத்திருந்த ட்விடொன்று காணக் கிடைத்தது. சின்ன நடிகர்தானே என்று நினைத்தார் போலும் யாருடைய வீடியோ என்கிற விபரம்கூட கொடுக்கவில்லை.
நானுண்டு என் வேலையுண்டு என வேலைக்கும் போய்க்கொண்டு தொழிலாய் இணையத்திலும் எழுதிக்கொண்டு இருப்பவனுக்கு எங்கிருந்தெல்லாம் விருந்து அழைப்பு வருகிறது என்று பாருங்கள்.