கேட்ட கேள்விகளுக்கு, இதையும் ஒரு ஜென்மம் என மதித்து பதில் சொல்லியும், சொல்லப்பட்ட பதில்களுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், புழுதியை மட்டுமே வாரித் தூற்றுபவனுக்கு இனி இணையத்தில் பதில் சொல்லி எந்தப் பயனும் இல்லை.
சினிமாவை ஆராதிக்கும் மிகுந்த நுண்ணுணர்வுடைய கலைஞர் என்கிற தம்மைப் பற்றிய பிம்பத்தை கவனமாக முன்னிலைப்படுத்துவதில் முதன்மையான சினிமாக்காரர் பாலுமகேந்திரா. அவருக்கு அந்த பிம்பத்தை அளிப்பதைத் தமிழகத்தின் பெரும்பான்மையும் தனக்குச் செய்துகொள்ளும் கெளரவமாகக் கருதுகிறது. அல்லது மேடைக்கு மேடை நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி சினிமாக்காரர்கள் அவரை வாணளாவப் புகழ்ந்து அப்படிக் கருதும்படியாக தூண்டுகிறார்கள். இணைய அறிவுஜீவி லார்வாக்களின் மூர்க்கக் கொண்டாட்டக் கூவலில் காது ஜவ்வு கிழியாத குறை.
வேலையாய் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தோம். கார் பத்தடி நகர்ந்ததும் கண்ணயர்ந்து விடுவது என் வழக்கம். நோக்கியா போன் பாண்ட் பாக்கெட்டுக்குள்ளிருந்து ஒலித்தது. தட்டுத் தடுமாறி வெளியில் எடுத்தேன்.
கரூர் மாவட்ட துணை நூலகத்துக்கே விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகம் சென்றடந்துள்ளது என்றால், அந்த வருடத்து அரசு ஆணையே 600க்கு மேல் இருக்கக்கூடும் என்பது என் கணிப்பு.
சத்ரபதி வெளியீடு என்ற பெயரிலான என் பதிப்பகத்தின் மூலம் அறியாத முகங்கள் என்கிற 11 கதைகள் கொண்ட என் முதல் சிறுகதைத் தொகுப்பை 1983 டிசம்பரில் 8/- ரூபாய் விலை வைத்து 1200 பிரதிகள் வெளியிட்டேன். 600 பிரதிகள் நூலகத்துக்குப் போக, 90களுக்குள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது.
30வயதுக்காரர்கள் இருக்க வேண்டிய இடத்துக்கு30வருடம் சர்வீசை முடித்தவன் வந்திருப்பது முரண். ஆனால்,அதுவே இதை எழுதும் வாய்ப்புக்கான சிறப்புத் தகுதியாய் அமைந்துவிட்டது.Excise Preventiveவை எட்டிப் பார்க்கவாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று,இன்ஸ்பெக்டராகி13வருடங்களாய் ஏங்கியவனுக்குக்கமர்ஷியல்நார்க்காடிக்ஸ் கடத்தல் என்று பல களங்களில் இயங்க வாய்ப்பு கிடைத்திருப்பது அளப்பரிய அதிருஷ்டம்.
லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அரசு அதிகாரியை சிபிஐ கைது செய்தது என்கிற தலைப்புடன் இந்தப் படத்தைப் பார்க்கும் எவருக்கும் உடனடியாகத் தோன்றக்கூடியது என்னவாக இருக்கும்? பார்ரா, கத்தை நோட்டுடன் கையும் களவுமாய் பிடிபட்டு இருக்கிறார்.
தலித் மக்களின் அழிவு பற்றி நாவல் எழுதிவிட்டதாக புரொமோட் செய்துகொள்கிறாயே, நவம்பர் 2012ல் தர்மபுரி கலவரம் நடந்தபோது மூடிக்கொண்டுதானே இருந்தாய் என்று கேட்டால்,