06 November 2021

விமலாதித்த மாமல்லன் கதைகள்

விமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. 

சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள் (1983), முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986), உயிர்த்தெழுதல் (1994) ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு. 

05 November 2021

மறைவு: சிறுகதை (2020)

குழந்தைகள் எவ்வளவோ தேவலாம். பலூன் போனதற்காக அழும். ஐஸ் கிரீம் கிடைத்ததும் அதை மறந்துவிடும் பாக்கியம் பெற்றவை. பெரியவர்கள் அப்படியில்லை. சபிக்கப்பட்டவர்கள்நினைவுகளில் மருகிச் சாகவே சபிக்கப்பட்டவர்கள். போனதை எண்ணியெண்ணி உள்ளூர எப்படி மாய்ந்து போவாள் பாவம் அந்தத் தாய். அவளை நினைக்க நினைக்க அய்யோவென்று இருந்தது அவருக்கு. 

அமன்: சிறுகதை (2020)

சைக்கிள் வாங்கி இன்னும் முழுசாக ரெண்டு மாதம் கூட ஆகவில்லை. அவருக்கும் உள்ளூர கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் தாட்சண்யம் பார்த்தால் இதைவிட மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது அவரது ஸ்திரமான அபிப்ராயம்.

02 November 2021

ரோஸ்மில்க் - சிறுகதை: சக்கரம் நாவலின் ஒரு அத்தியாயம் (2012)

முகப்பு வளைவை ஒட்டிய இடப்பக்கச் சுவரில் தோட்டாக்கள் சல்லடையாய் துளைத்திருந்த அடையாளங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அப்படியே இருந்தன. பயம் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவும் வஞ்சம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பாலும் வடுக்கள் மறைந்துவிடாதவண்ணம் பதற்றத்துடன் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. 

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைப்பவன், நாள் முழுக்க சிகரெட் பிடிக்காமல் இருக்கவேண்டியிருப்பது எவ்வளவு சிரமம் என்பது எல்லோருக்கும் சுலபத்தில் புரியக்கூடிய விஷயமில்லை. கடைசி சிகரெட்டைப் பிடித்தது, விடியற்காலை நான்கு மணிக்கு. தற்காலிகக் ’குழி கக்கூஸ்’களுக்குத் துணி மறைப்பு நடுவதற்கான இரும்புக் கம்பங்கள், காடாத் துணிகள் இன்னபிற தட்டுமுட்டுச் சாமான்களையும் ஏற்றிசெல்லும் டிரக்குக்குப் பின்புறமாய் மறைந்து நின்று, ரிடையர்டு கர்னல் ரேகேயின் கொள்ளிக் கண்ணுக்குப் படாதவண்னம் பிடித்த சிகரெட்தான் கடைசி. ஒட்ட இழுத்திழுத்து நிகொடினின் மஞ்சள் படிந்த சுட்டு நடுவிரல்களைக் கொண்ட கையும் வாயும் சிகரெட்டுக்காக நமநமத்துக் கொண்டிருந்தன. 

03 March 2018

வழிகாட்டி - தி. ஜானகிராமன்

கு. ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி – இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். ‘கரிச்சான் குஞ்சுவும்’ என்னோடு சேர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் என்னைவிட உணர்ச்சி வசப்படுகிறவன். இந்த பயமும் கரையலும் ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ராஜகோபாலன் கிடந்த கிடையும், பட்ட சித்திரவதையும் ஒரு அநிச்சயத்தையும், கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்த ஞாபகம். அவருக்கு முழங்காலுக்குக்கீழ், ஆடுசதை கல் சதையாக இறுகிக் கிடந்தது. கடுகுப் பத்துப் போட்டிருந்தார்கள். அந்த எரிச்சல் வேறு. காலுக்குள், வெளியே – இரண்டு பக்கமும் எரிச்சல். அது பையப்பைய உயிரை அரித்துக் கொண்டிருந்தது என்று கடைசி மூன்று நாட்களுக்குமுன் தான் சந்தேகம் வந்தது எங்களுக்கு. ஏற்கனவே, மெலிந்து, துவண்ட அந்தப் பூஞ்சை உடல் எப்படி இந்த வதையைத் தாங்குகிறது, இன்னும் எத்தனை நாள் தாங்கும் என்று நாங்கள் கிலிக்கு ஆளாகி, அவரைவிட்டு அகன்று அப்பால் வந்தபோதெல்லாம், அவரைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தோம்.

16 January 2018

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 5

ரமேஷ் பிரேதனிடமிருந்து மெய்ல் வந்திருக்கிறது. இதுகள் இவ்வளவு பெரிய சாக்கடை என்பது தெரிந்திருந்தால் உதவிசெய்ய நான் இறங்கியிருக்கவே மாட்டேன். நான் இறங்கியதோடு அல்லாமல் உங்களையும் இழுத்துவிட்டு உங்களது பணத்தை வீணடித்தமைக்காக என்னை மன்னியுங்கள் நண்பர்களே. 

12 January 2018

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 4

                                                              11.01.2018
                                                              புதுச்சேரி

திருமிகு மாமல்லன் அவர்களுக்கு வணக்கம்.

29 December 2017

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 3

விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி எந்த எல்லைக்கும் போய்விடுகிறீர்கள், அதுவே உங்களுக்கான பலம் மற்றும் பலவீனம் என்று ரமேஷ் பிரேதன் பற்றிய பதிவிற்கு பேஸ்புக்கில் மறுமொழியிட்டிருந்தார் சித்ரா சம்பத் என்கிற பெண்மணி. 

28 December 2017

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 2

உடல்நலமும் மனநலமும்
ரமேஷ் பிரேதனின் எதிர்கால நலனுக்காகவும் அவரது உடல் நலம்பெறவும் பொருளதவி செய்த அனைவருக்கும் அடுத்த பெருங்கடமை காத்திருக்கிறது. அது, ஊர்கூடி ரமேஷ் பிரேதனிடம் அளித்திருக்கும் 2.77 லட்சத்தை ரமேஷ் பிரேதனிடமிருந்து காப்பாற்றுவதாகும்.

22 December 2017

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 1

ரமேஷ் பிரேதன் இரண்டு நாட்களாக டெஸ்க்டாப் மற்றும் ஜியோ நெட் உதவியில் இணையத்தில் இருக்கிறார். நிறைய படிக்கத் தொடங்கியிருக்கிறார். 

12 December 2017

ரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி

ரமேஷ் பிரேதனின் SBI A/cல் நேற்று காலையில் இருந்த இருப்பு வெறும் 12 ரூபாய். என்ன செய்வது என்று விழி பிதுங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். 

04 December 2017

எதோ என்னாலானது

1980முதல் 1994வரை எழுதி வெளியான 30 கதைகளை 4 புத்தகங்களாகவும் 2010ல் உயிர்மை வெளியிட்ட முழுத் தொகுப்பையும் நானே வெளியிட்ட சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரலையும் அமேஸானில் 6 eBookகுகளாக 24.10.17 முதல் வெளியிடத்தொடங்கினேன். அவற்றில் இதுவரை 54 பிரதிகள்  விற்றிருக்கின்றன. 5702 பக்கங்கள் படிக்கப்பட்டுள்ளன.  இன்று வெளியான சின்மயி விவகாரம் மட்டுமே 424 பக்கங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன. 

03 December 2017

தியாக தீபமே

நான் இவனுக்கு புக்கு போடாட்டா இந்த எழுத்தாளப் பயலையெல்லாம் யாருக்குத் தெரியும். நான்தான் இவனுக்கெல்லாம் அட்ரஸே குடுத்தேன்.

09 November 2017

விதி வகைகள்

கவிஞர் விக்ரமாதித்யனுக்கான இபுக் பிராஜெக்ட்டுக்காக, அவரது கவிதைத் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள இன்று கேகே நகர் சென்றிருந்தேன். அலுவலக வேலை இன்று அங்கும் அதைத் தாண்டியும் இருந்தது. 

08 November 2017

தவிப்பு - சிறுகதைத் தொகுதி

1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில்  64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.