20 December 2021

இரு நன்கொடைகள்

பிரான்சிஸ் கிருபாவிற்கு உதவி தேவை என்கிற குறிப்பை பேஸ்புக்கில் பார்த்துவிட்டு அவரைத் தேடிப்பிடிக்க முனைந்த நேரத்தில்உருவான திட்டம்  இரண்டு நண்பர்களுக்குப் பொருளாதார ரீதியில் உதவ வழிகோலிற்று. 

02 December 2021

பெப்பெ

02 டிசம்பர் 2021

இந்திய காப்புரிமைச் சட்டப்படிஆசிரியரின் வாழ்நாள் + மறைவுக்குப் பின் 60 வருடங்கள் வரை மட்டுமே காப்புரிமை.

01 December 2021

எக்ஸ்டர்னல் ட்ரைவ்

ஹலோ வெஸ்டர்ன் டிஜிட்டல் 1.5 TB எக்ஸ்டர்னல் ட்ரைவ் இருக்கா 

1.5 கம்பெனில வரதில்ல ஒண்ணு இருக்கு ரெண்டு இருக்கு. 

அமேஸான்ல 1.5 இருக்கே. 

அது சர்வீஸ்டு கம்பெனிது இல்லே. 

ரிஃபர்பிஷ்ட்டுனா சொல்றீங்க. 

ஆமா. 

24 November 2021

அடடே அதுவுமா

இன்று மதியம் 1:29 வரை இலவசம்


வாழ்த்துக்கள் சார்

19 November 2021

உயிர்கள்

மழை இல்லை. எனினும் எங்கு பார்த்தாலும் ஈரம். அறைக்குள்ளிருந்து பால்கனி வழியே பார்க்க அழகாக இருந்தது. 

வாடி நிக்கற வெத்தலைக் கொடியையே பாத்துக்கிட்டு இருக்காதீங்க. 

கொஞ்சம் வெயில் வந்தா போதும். எழுந்து நின்னுடும். 

குப்பை போட்டுட்டு வரமுடியுமா. 

சரியும் தப்பும் சரியா தப்பா

Jan 18 10:07:51 2015

எழுத்தாளர்களைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது - உரிமைக்குரல் ஸ்டாலின்
எழுத்தாளர்களின் பாதுகாப்பு கருதி,

நாமக்கல் போன்ற சிறுநகர எழுத்தாளர்களிடமிருந்து பேனாவும்
சென்னை போன்ற பெருநகர எழுத்தாளர்களிடமிருந்து மடிக்கணினியும்
நாகர்கோவில் எழுத்தாளரிடமிருந்து கீபோர்டும் பிடுங்கப்படும் - அம்மா பிச்சை 

66Aவுக்கு சீக்கிரமாய் AB எங்கே கிடைக்கும் (பூவுலகின் நண்பர்கள் சுந்தர் போன்ற சகாயவிலை களப்பணி பேச்சாளர் கோஷ்டி வேண்டாம். கோர்ட்டுக்குப் போகும் தொழில்முறை வக்கீலைப் பரிந்துரைக்கவும்) - முழு நேர ப்ரூஃப் ரீடர் கம் மோட்டார் மெக்கானிக் ஆகிவிட்ட மாஜி எழுத்தாளர்

18 November 2021

பிஞ்ஜாமி பிஞ்ஜாமி எஞ்ஜாயி பிஞ்ஜாமி

//நான்தான் ஔரங்கசீப்… நாவலின் 51ஆவது அத்தியாயம் பற்றி முகநூலில் ஒரு வரி எழுதியிருந்தேன்.  அந்த அத்தியாயம் அந்த நாவலின் உச்சங்களில் ஒன்று என.  இதே போன்ற இடங்கள் நாவலில் வேறு சில பகுதிகளிலும் உண்டு.  உதாரணமாக, நாதிரா பானு தன் மார்பகங்களை நீரில் கழுவி “இதையே தாய்ப் பாலாகக் கொள்ளுங்கள்” என்று தன் கணவன் தாராவுக்காக இன்னொருவரிடம் கையேந்தும்போது சொல்லும் இடம்.//

இதற்கெல்லாம் 'பட்டாசு' 'புல்லரிக்கிது' 'ஆஸம்' 'ஆர்கஸம்' என்று என் உண்மையான வாசக வாசுகிகள் விசிலடிப்பார்கள். 

வால்காவிலிருந்து வள்ளுவர்கோட்டம் வரை

கம்யூனிஸ்ட்டுகள் பங்கைக் கண்டுகொள்ளவே இல்லையென்றாலும் CPI(M) அதிகாரபூர்வமாக ஜெய்பீமை ஆதரித்திருப்பது எவ்வளவு பெருந்தன்மை 

தோழர்கள், காம்ரேட் சூர்யாவுக்கு லால்சலாம் சொல்லாதது ஒன்றுதான் குறை. 

06 November 2021

சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல்

விவகாரத்தின் அறிமுகம்

ட்விட்டர் என்கிற சமூக வலை தளத்தில் பாடகி சின்மயி ஐஏஎஸ் படிக்க நினைத்த தனது கனவு சமூகத்தில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாய் நிறைவேறாது போய்விட்டதாக 04 ஜனவரி 2011 அன்று சில ட்விட்டுகளை இடுகிறார்அவரது விசிறிகளில் ஒருவரான ஆர்த்தி உரையாடலில் இணைகிறார். ”தாழ்த்தப்பட்டவர்கள் என்று ’சொல்லப்படுகிறவர்கள்’ என்று எவரும் இல்லை என்று சின்மயி ஆங்கிலத்தில் கூறுகிறார்இந்தச் சொற்கள் சமூக விழிப்புணர்வுள்ள தமிழ் ட்விட்டர்களின் கவனத்தைக்கவரவும் அவர்கள் இவருடன் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்குகின்றனர்இது மிக நீண்ட விவாதமாகவும் இடையிடையே உரசலாகவும் விரிகிறதுவிவாதம் கண்ணியமாகவே நடந்தாலும் சின்மயியின் பொது அறிவின் போதாமைபிராமணீய விழுமியங்கள் மற்றும் அவரது ஜாதீய மனோபாவம் ஆகியவை எல்லோர் பார்வையிலும் படும்படியாக பொதுவெளியில் அம்பலப்படுகின்றனஇதுஅவமானத்தையும் தான் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டதான எண்ணத்தையும் சின்மயிக்குள் விதைக்கிறதுஇந்த விவாதத்தில் பங்குபெற்ற சிலருக்கும் தூர இருந்து கவனித்துக்கொண்டிருந்த முதிர்ச்சியற்ற பல இளம் தமிழ் ட்விட்டர்களிடையேயும் சின்மயி மீதான இளக்காரத்தையும் எகத்தாள மனோபாவத்தையும் எரிச்சலையும் கோபத்தையும் இந்நிகழ்வு உருவாக்குகிறதுசின்மயி இவர்களில் பலரையும் தன் வழியில் தன் ட்விட்டுகளில் குறுக்கிடாதபடி தடை செய்கிறார்தடைசெய்யப்படுவதென்பது அவமானகரமான செயல் என்பதால் தடைசெய்யப்பட்டவர்கள் மனதளவில் சின்மயிக்கு எதிரிகளாகிறார்கள்இது இரு சாராருக்கும் இடையே விரிசலாக உருவாகிறது.

புனைவு என்னும் புதிர் - ஷோபாசக்தியின் 12 கதைகள்

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளரான ஷோபாசக்தியின் 12 கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது. 

கட்டுரைகளில் விவாதிக்கப்படும் கதைகள் ஒப்பிட்டு நோக்க வசதியாக இந்தப் புத்தகத்திலேயே இருப்பது இன்னொரு சிறப்பு. 

அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்


கிண்டிலில் வாங்கபுனைவு என்னும் புதிர் - ஷோபாசக்தியின் 12 கதைகள்

புனைவு என்னும் புதிர் நூல் - 2

தமிழில் ஒரு முதல் முயற்சியாக தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்ந்த புனைவு என்னும் புதிர் முதல் நூலைத் தொடர்ந்து இன்னும் சில எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டு ஆராய்கிறது இந்த இரண்டாவது நூல். 

புனைவு என்னும் புதிர்

புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி

தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது.


அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்வ் 


கிண்டிலில் வாங்க: புனைவு என்னும் புதிர்


தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)

மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச் சிறுகதைகள், இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். 

இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை ஆனந்தவிகடன் உயிர்மை ஆகிய பத்திரிகைகள், ’பிரச்சனை பண்ணுவார்கள்’ என்று வெளியிடத் தயங்கின. வெளியிடும் அளவுக்குத் தரம் இல்லை என்று காலச்சுவடு நிராகரித்தது. 

பத்திரிகைகளும் சூழலும் எப்படியான முற்போக்கு / பிற்போக்குக் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கின்றன என்பதற்கான சாட்சியம் இது. 

அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்

கிண்டிலில் வாங்க: தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)

விமலாதித்த மாமல்லன் கதைகள்

விமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. 

சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள் (1983), முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986), உயிர்த்தெழுதல் (1994) ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு.