24 February 2023
ஆபீஸ் - அத்தியாயம் 12 ரெட் லைட்
சுர்ரென்று ஏறிற்று.
நீங்கள் ஏசி, இவர்கள் சூப்பிரெண்டெண்ட்டுகள், என்பதைப் போல நான் எல்டிசி. இதில் எங்கிருந்து வந்தது ஆஃப்ட்டரால் என்று உரக்கச் சொன்னான்.
ஆபீஸ் அத்தியாயம் 11 இருந்து செஞ்சிட்டுப் போ
மெதுவடை கேட்டான். மசால்வடை வந்தது. எலி கதையில் அமி விவரித்திருப்பதைப் போலவே அச்சு அசலாக இருந்தது. அந்தக் கதையை அவர் எழுதியே பத்து வருடங்களிருக்கும். மசால் வடை எப்போதும் போலதான் இருந்துகொண்டு இருக்கிறது.
23 February 2023
ஒழுங்காய் இருந்த அமேஸான்...
செவ்வாய் மதியம் 12:30 மணி வாக்கில் அமேஸானில் 2 கேஜி கோத்தாஸ் காபி பெளடர் ஆர்டர் செய்தேன். அன்றிரவே 8 - 12PMக்குள் டெலிவரி என்றது ஆப்பு.
22 February 2023
புனைவு என்னும் புதிர் - கண்ணீர்ப்புகை - ஞானக்கூத்தன்
//உண்மைதான். ரங்கநாயகி தங்கினால் எத்தனையோ விதத்தில் உபயோகமாக இருக்கும். கேட்பார்கள், அவள் வரவில்லையா என்று. வரவில்லை என்றால் யாரும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். தவறாகவும் கருதமாட்டார்கள். இப்பொழுது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இரண்டுபேரும் போனால் எப்படி வர முடிந்தது என்று அதிசயிப்பார்கள். பழக்கமுள்ள ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தோம் என்று சொல்லலாம். ஆனால் அது உறவில், கருணையில் ஒன்று அல்லது பல புள்ளிகள் குறைந்துவிட்டதாகப் படும்.//
கண்ணீர்ப்புகை - கவனம் 2 ஏப்ரல் 1981
19 February 2023
உலகச் சிறுகதைகள் 10 ஃப்ரன்ஸ் காஃப்கா
படிப்பதை ரசிப்பவன் வாசகன். ரசிப்பதோடு நின்றுவிடமல் ரசிக்கும்படி, கதை எப்படி மெல்ல மெல்ல உருவாகிறது; எப்படிக் கொஞ்சங்கொஞ்சமாக உருவாக்கப்படுகிறது; எதையெதையெல்லாம் வைத்து எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, படிப்படியாக,கவனமாக, ஏகலைவன் போல, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் படித்துக்கொள்பவனே நாளடைவில் நல்ல எழுத்தாளனாகவும் ஆகிறான்.
18 February 2023
உலகச் சிறுகதைகள் 9 போனி சேம்பர்லின்
பிறக்கையில் குழந்தை கடவுளாகத்தான் இருக்கிறது. அறிவு வளர்ந்து நாலும் தெரியவந்து வாழ்வில் முன்னேறுவது மட்டுமே முக்கியமாகிப்போக, அநேகமாய் எல்லோருமே கிட்டத்தட்ட சாத்தானாகிவிடுகிறோம்.
உலகச் சிறுகதைகள் 8 மாரியோ பெனதெத்தீ
துரும்பளவு முயற்சியுமின்றி, சும்மா பார்த்தால் போதும் என்கிற மாதிரியான எக்கச்சக்க அக்கப்போர்கள், இலவசமாகவேறு கிடைப்பதால், படிக்கிற பழக்கமே ஒரேயடியாய் போய்விடும்போல இருக்கிறது.
உலகச் சிறுகதைகள் 7 ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா
இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இலக்கியத்திற்கு இல்லை. அதனிடம் இருக்கிற ஒரே எதிர்பார்ப்பு அறிந்ததினின்று அறியாததற்கு அழைத்துச்செல்கிறதா என்பது மட்டுமே.
எழுத்து நடையில், சொல்கிற முறையில், எல்லாவற்றையும் மாதிரி இது இன்னொரு கதை என்பதைப் போல அமைதியாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கிற கதை. கதையின் நாயக பாத்திரத்தைப்பற்றி கதைசொல்லி சொல்வதன் மூலமாக கதை சொல்லியைப்பற்றித் தானாகவே தெரியவருகிறது.
உலகச் சிறுகதைகள் 6 ரேமண்ட் கார்வர்
உள்ளே இருப்பவை வெளியே கிடக்கின்றன என்றுசொல்லி வெளியில் இருக்கும் நம்மை அவனுக்கு உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார் ஆசிரியர்.
உலகச் சிறுகதைகள் 5 எர்னாந்தோ தெய்யெஸ்
எழுதியிருக்கிற நேர்த்தியின் காரணமாகவும் சொல்முறையின் நூதனம் காரணமாகவும்
உலகச் சிறுகதைகள் 4 ஜார்ஜ் லூயி போர்ஹே
முதல் முறையாகப் படித்தபோது ஒன்றுமே புரியவில்லை என்றாலும் என்னய்யா இது இத்துனூண்டு கதைல என்னென்னத்தையோ சொல்லி வைத்திருக்கிறான் என்று மிரட்டிவிட்டது.
ஆபீஸ் அத்தியாயம் 10 கூச்சம்
ஏசி சொன்னதைப் போல அரை நாள் லீவ் எழுதிக்கொடுத்துவிட்டு, ஆபீஸிலேயே இருந்து ஐசிக்களை எழுதியிருந்தால், லஞ்ச்சுக்கு முன்பாகவே நிறுத்தி நிதானமாக எழுதி முடித்திருக்கலாம்.
ஆபீஸ் அத்தியாயம் 9 ஆபீஸ் டைம்
எட்டு மணி நேரத் தூக்கம். எட்டு மணி நேர வேலை. மிச்சமிருக்கிற எட்டு மணி நேரம் மட்டுமே அவனுக்கு. அதுவரை அப்படியில்லை. தூக்கம் தவிர நாள் முழுவதுமே அவனுடையதாக இருந்தது. இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இருந்ததில்லை.
ஆபீஸ் அத்தியாயம் 8 வெட்டி ஆபீஸர்
அவன் பெயரைச் சொல்லி கையெழுத்துப் போடச்சொன்னால்தான் சாரி என்று சொல்லிவிட்டுப் போடுவான். என்னை மதி நான் உன்னை மதிக்கிறேன் என்பது அவன் கொள்கை.
Subscribe to:
Posts (Atom)