03 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 27 கரையும் கடல்

அப்பா தவறிப்போய் கொஞ்சநாள் ஆகியிருந்த சமயம். அம்மாவுடன் ஏதோ அர்த்தமற்ற வாய்ச் சண்டையில் ஆரம்பித்தது, சாப்பாட்டுத் தட்டு பறந்ததில் போய் முடிந்திருந்தது. வீட்டில் இருக்கவே பிடிக்காமல் கிளம்பி, பெஸண்ட்நகரில் இருந்து, இரண்டு பஸ் மாறி இங்கேதான் வந்தான். இதே போலத்தான் நின்று அப்போதும் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், முன்னிரவு என்பதால் அப்போது எதிரே தெரிந்த கடற்கரையில் காக்காய் இல்லை.

ஆபீஸ் அத்தியாயம் 26 விதி

பகீலென்றது. குசு பெறாத விஷயம், கலெக்டர் வரை போய்விட்டதா. பாபுவின் முகத்தைப் பார்க்ககவலை கலக்கமானது. 

சாவித்ரியிடம் சொல்லலாமா என்று தோன்றியது. அவன் யோசிப்பதைப் பார்த்து,

நேரா போய் கலெக்டரைப் பாரு சார். நல்ல மனுசன். தெரியாம நடந்துருச்சினு சொல்லு. திட்டிட்டு விட்டுருவாரு என்றான் பாபு. 

விகடனில் கோனங்கி விவகாரம்

பாதிக்கப்பட்டவர்:

"எழுத்தாளர் கோணங்கி பாலியல் சித்திரவதை செய்தார். இப்ப புகாரை நீக்கச் சொல்லி..." பாதிக்கப்பட்ட மாணவர்

கோணங்கி

"நான், கோணங்கியால் பாதிக்கப்பட்டதை வெளியில சொன்னதும் பல பேர் பாதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக்ல் எழுதியிருக்காங்க." - கோணங்கி மீது பாலியல் புகார் கூறியுள்ள மாணவர் பேட்டி

பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது கார்த்திக் என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் பதிவிட்டிருக்கும் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

02 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 25 ஏன்

தூரத்தில் போலீஸைப் பார்த்ததும் போலீஸ் நம்மைப் பார்க்காவிட்டாலும் விளக்கில்லாத சைக்கிளை வீட்டிலிருந்தே தள்ளிக்கொண்டு வருவதைப் போலஅவர் முன்னால் இறங்கிச் செல்வதில்லையா அதைப்போல், போலீஸுக்காக இறங்காததைப்போல நாமும், நம்மைத் தாண்டினால் ஏறி ஓட்டிக்கொண்டுதான் செல்லப்போகிறான் என்று நன்றாகவே தெரிந்தாலும் நமக்காக இறங்கியிருக்கிறானே அந்த மரியாதையே போதும் என்று போலீஸ்காரரும் பரஸ்பரம் திருப்திபட்டுக்கொள்வதைப் போல ஏசியும் அவனும் சமாதானத்தில் இருப்பதாக எண்ணி தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.

ஆபீஸ் அத்தியாயம் 24 எப்படி

இலக்கிய அபிப்ராயங்கள் எழுத்தாளர்கள் பற்றிய அக்கப்போர்கள் என – எவளாவது பணக்கார கெழவி கெடைச்சா சீக்கிரம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிடணும்சிகரெட் பிடிக்க வசதியா இருக்குனு இண்ட்டலெக்சுவல் பொம்பளைங்க க்ரியாவுக்கு வந்துடறாங்க என்பதைப் போலவேலை பார்க்கிற இடத்தைக் கூட விட்டுவைக்காமல் எகத்தாளமாக பேசி எல்லாவற்றையும் அனாயாசமாக அணுகுகிறவராக இருந்த திலீப்குமார், க்ரியாவில் பில் போடுவது முதல் மேற்பார்வை பார்ப்பதுவரை எல்லாமுமாக இருந்தார்.

ஆபீஸ் அத்தியாயம் 23 வாழ்வது எப்படி

அம்மா எரிச்சலூட்டுபவளாகத் தொடங்கியதுஅவனுக்கு அறிவு பிடிபடத்தொடங்கியதிலிருந்து இருக்கலாம் என்று தோன்றியது. அறிவுக்கும் அவளுக்கும் எப்போதுமே சம்பந்தம் இருந்ததில்லை. அப்பாவுக்கு அவளிடம் வந்த எரிச்சலுக்குக் காரணம் கூட அவளது மடத்தனமாகத்தான் இருக்கவேண்டும் என்று, அவர் போன பிறகு அதிகமாகத் தோன்றத் தொடங்கிற்று. 

ஆபீஸ் அத்தியாயம் 22 கெளரவமாக வாழ்வது எப்படி

பரீக்‌ஷாவில் இருந்தது என்னவோ ஒன்றரை வருடம்தான் என்றாலும் சுற்றிலும் இலக்கியவாதிகளாக இருந்ததாலோ என்னவோஉள்ளே வரும்போதுமு. மேத்தா முற்போக்கு என கல்லூரி கவிதைப் போட்டிகளின் விட்டகுறை தொட்டகுறையாக ஊசலாடிக்கொண்டிருந்தவன்பரீக்‌ஷாவை விட்டு வெளியேறும்போது  தீவிர இலக்கியம் சினிமா என்று முழுவதுமாகத் தலைகுப்புறக் குதித்துவிட்டிருந்தான்.

ஆபீஸ் அத்தியாயம் 21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி?

அந்தப் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று அவனுக்கே சரியாகத் தெரியவில்லை. எழுத ஆரம்பித்ததில் இருந்துதான் இருக்கவேண்டும். 

மணல்வீடும் குண்டியடிக்கக் கூப்பிடும் கலையும்

 கடைசி பதிவு 

By சதீஷ் குமார் : 

July 31, 2019 

(சோத்துக்கே சுண்ணியை ஊம்புபவன் நான். உங்களுடன் சமர் செய்ய என்னாலாகாது)

 

இந்த பதிவோடு இந்த  பிரச்சினையை  முடித்துக்கொள்கிறேன்.

பதிவை நீக்கியவுடன் நான் பின்வாங்கியதாக  நண்பர்கள் சொன்னார்கள். அதுவும் சரிதான். பழைய பதிவை  சேர்த்தே  பதிவிட்டிருக்கிறேன்.

'இதை ஏன் பொதுவெளியில்  பேசுறஎன்றால்

"ஏன் பேசக்கூடாது" என்பதுதான் பதில்.

01 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 39 ஒரு நிமிஷம்

அவ்வளவு வெடிச்சத்தங்களுக்கிடையிலும் தீபாவளியன்று எட்டு மணிக்குதான் எழுந்தான். 

கிண்னத்தைக் கொண்டுவந்தாள் அம்மா. 

பல்தேச்சுட்டு அப்படியே தலைக்கு எண்ணெய் வெச்சுக் குளிச்சுடுடா என்றாள். 

பே. உனக்கு வேற வேலயே கிடையாது. எல்லாத்தையும் உன்னோட வெச்சுக்கோனு எத்தன தடவை சொல்றது என்று எரிந்துவிழுந்தான். 

குளித்துமுடித்து வந்தவன், பட்சணம் என்று கொடுத்ததை இரண்டு கடி கடித்துவிட்டுஉனக்குதான் சப்பாத்தியத் தவிர உருப்படியா ஒண்ணும் பண்ணவராதே ஏன் கஷ்டப்பட்டு காசைக் கரியாக்கி அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தறே. 

உலகச் சிறுகதைகள் 11 கெய்ட் ஷோப்பின்

வரப்போகும் அந்த வருடங்களில் அவள் யாருக்காகவும் வாழ வேண்டியதில்லை; தனக்காகவே அவள் வாழப்போகிறாள். கண்மூடித்தனமான வற்புறுத்தலால் அவளுடைய விருப்பத்தை வளைத்துவிடும் சக்திவாய்ந்த ஆசைகொண்ட வேறொரு மனம் இருக்கப் போவதில்லை; சக உயிரினத்தின்மீது தன்னுடைய தனிப்பட்ட ஆசையைச் சுமத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று ஆண்களும் பெண்களும் நம்புவதற்குக் காரணமாக இருப்பது அந்த வற்புறுத்தல்தான். அந்தச் செயலின் நோக்கம் அன்பு நிறைந்ததா, குரூரமானதா என்பது ஒரு பொருட்டில்லாமல் நிச்சயம் அது ஒரு குற்றமே என்பதை அந்தக் குறுகிய கணத்தில் உண்டான ஞான வெளிச்சத்தில் அவளால் பார்க்கமுடிந்தது.

26 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 20 கைராசி

கீழ் வீட்டு மாமா சொன்னது போல தம்பையா ரொம்ப கைராசிக்காரர்தான் போல. இரண்டே நாட்களில் வீக்கம் வடிந்து எப்போதும் போல கால்களில் நரம்புகள் தெரியத்தொடங்கிவிட்டிருந்தன. ரணமாகிக்கிடந்த காயமும் நன்றாகக் காயத்தொடங்கி பொறுக்குத்தட்ட ஆரம்பித்திருந்தது

ஆபீஸ் அத்தியாயம் 19 மானக்கேடு

சிறுவயதிலிருந்தே எல்லாக் குழந்தைகளையும் போல அவனுக்கும் இனிப்பு பிடிக்கும். இனிப்பை அதிகமாகத் தின்பது உடம்புக்கு நல்லதில்லை என்று நினைக்கிற எந்த அப்பாவும் அதிகபட்சமாக பயமுறுத்தச் சொல்வது பல் சொத்தையாகிவிடும் என்பதாகத்தானே இருக்கும். அவனுடைய அப்பா, பொணத் தேவடியாள் மகனே இப்படியே சக்கரை தின்றுகொண்டே இருந்தால் ஹைதராபாத் மாமாவைப் போல ஒரு நாள் காலை எடுத்துவிடுவார்கள் பார்த்துக்கொண்டே இரு என்பார். மராட்டியில் தேவடியாள் மகனே என்பதோ தேவடியாளே என்பதோ நிறைய குடும்பங்களில் சகஜம். குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூட  ரள்ளேகா ராண்டேவை உபயோகிப்பது சர்வ சாதாரணம்

ஆபீஸ் அத்தியாயம் 18 புகை

அடுத்து வந்த நாட்கள், தினந்தோறும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் அங்கே எதுவுமே இல்லாமல் எப்போதும்போல இருட்டு மொட்டையாகத்தான் இருக்கப்போகிறது அவன் வீட்டு மொட்டைமாடி என்பதை உறுதிப்படுத்தின. 

ஆபீஸ் அத்தியாயம் 17 வீடும் பொருளும்

அது இலை. இது இல்லை என்று அவன் வாழ்க்கை பூராவும் ஒரே இல்லாத பாட்டம்தான். எல்லோருக்கும் தன்னால் வரக்கூடிய பேச்சே, அவனுக்கு மூன்று வயதுவரை வரவில்லை. ஆ ஊ என்று எல்லாவற்றுக்கும் சைகை பாஷைதான். காந்தா பாய் பாட்டி சோளிங்கர் நரசிம்மருக்கு மணி கட்டுவதாக வேண்டிக்கொண்டதற்குப் பிறகுதான், அவனுக்குப் பேச்சு வந்ததாகச் சொல்லுவாள் அம்மா.