எதிரில், குதிகால் செருப்பணிந்த கொண்டையொன்று குதிக்காதகுறையாய் போய்க்கொண்டு இருந்தது, பார்க்கக் குதிரை போலவே இருந்தது. கொஞ்சம் முத்தல் குதிரை. சஃபையருக்கு பஸ் பிடிக்கப் போகிறதாயிருக்கும். பஸ்ஸுக்கே ஹீல்ஸா என்று சிரிப்பு வந்தது. வேலைக்குப் போகத்தான் என்னல்லாம் வேண்டியிருக்கிறது.
06 March 2023
ஆபீஸ் அத்தியாயம் 37 எழுத்தும் வாழ்வும்
எப்ப எழுதுவீங்க.
இது என்ன பேட்டி போல கேட்கிறாரே என்று கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தயங்கியபடி,
எப்ப வேணும்னா எழுதுவேன்.
எப்ப வேணும்னான்னா... எப்படியும் ஆபீஸ் அவர்ஸ்ல எழுதமுடியாது. அப்ப வீட்லதான எழுதியாகணும்.
இல்ல. பெரும்பாலும் வெளியதான் எழுதறது. தோணும்போது, பார்க்கு லைப்ரெரி மரத்தடினு வசதிப்படற எடத்துல உக்காந்து எழுதறது. இப்பிப்ப டிரைவ் இன் உட்லண்ட்ஸ்ல எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
ஆபீஸ் அத்தியாயம் 36 அறைவாசிகள்
நீங்க சைவம்தானே என்றான் பாலாஜி.
ஆமா. ஆனா வெளில நான்-வெஜ்ஜும் சாப்பிடுவேன் என்றான்.
அப்ப நீங்க பிராமின் இல்லையா.
கோணங்கியின் கோணல் முகம்
நார்மலைஸ் ஆக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்: கலையின் பெயரில் கலைஞனை கொல்லுதல்
………
05 March 2023
ஆபீஸ் அத்தியாயம் 35 இடம்
சாப்பாடு எப்படி.
நல்லா இருந்துது. எனக்குதான் அவ்ளோ சாதமெல்லாம் சாப்பிட முடியாது.
என்னங்க இது. சோறு திங்க சொணங்கற ஆளை மொதல் தடவையா பாக்கறேன் என்று சொல்லிச் சிரித்தார்.
இல்ல பொதுவாவே சாதத்தை விட சப்பாத்தி தோசை பரோட்டா மாதிரி டிபன்தான் எனக்குப் பிடிக்கும்.
வீட்ல.
ஆபீஸ் அத்தியயம் 34 வம்பு
ஆபீஸ் அத்தியாயம் 33 மண்ணும் மனிதர்களும்
ஜீவா, உள்ளேயிருந்து வெள்ளைச் சட்டை வெள்ளைப் பேண்ட்டுடன் வந்தார். குளிச்சிட்டு வந்தா டிபன் சாப்பிடலாம் என்றார். கிட்டத்தட்ட டூட்டிக்குக் கிளம்பிவிட்டவர் போல இருந்தார். பரபரவென பல் விளக்கிக் குளித்து முடித்துவிட்டு வந்தவன் அவருடன் மேசையில் அமர்ந்து இட்லி சாப்பிட்டான்.
ஆபீஸ் அத்தியாயம் 32 கை
சின்ன வயசுல ஜெயகாந்தன் வீட்டை விட்டு வெளில வந்தார்னா, அவரா வரல. அவரால இருக்கமுடியலை. இருக்கமுடியாதபடி ஒரு பலமான கை அவரை வெளிய பிடிச்சுத் தள்ளிச்சு. அப்படியான நிர்பந்தம் உங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்க. நீங்க பாட்டுக்கும் கெளம்பி வந்திருக்கீங்க. டூர் போகறா மாதிரி வந்திருக்கீங்க அவ்வளவுதான். வந்தா மாதிரியே திரும்பிப் போனாலும் ஒண்ணும் ஆகிடாது...
ஆபீஸ் அத்தியாயம் 31 போனதும் வந்ததும்
ஒரே சிட்டிங்கில் ஷங்கர் ராமன் வீட்டில் அமர்ந்து எழுதிய, அப்பா அம்மா நட்ட நடு ராத்திரியில் சண்டைபோட்டுக்கொள்கிற, பெரும்பாலும் உரையாடலாகவே போகிற கதையை, கேவிஆரிடம் படித்துக் காட்டிக்கொண்டு இருந்தபோது, அவர் மனைவிதான், என்னது சங்கர நாராயண பூஜையா. அது சத்ய நாராயண பூஜை இல்லையோ என்று திருத்தினார்.
03 March 2023
ஆபீஸ் அத்தியாயம் 30 நாடகம்
ஆபீஸ் அத்தியாயம் 29 வந்துடு
வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான்.
என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன். கேள்வியில் இருந்த லேசான கிண்டல் முகத்திலும் இருந்தது.
என்ன கேள்விப்பட்ட...
வேலைய ரிசைன் பண்ணிட்டு...
ஆபீஸ் அத்தியாயம் 28 வேட்கையும் பிரசாதமும்
அதுவரை, 'விட்டுவிட்டால் என்ன' என்கிற எண்ணமாக இருந்தது, மெல்ல விட்டுவிடுவது என்கிற முடிவாக அவனுக்குள் உறுதியாகத் திரளத்தொடங்கியிருந்தது. நான்கையும் யோசித்து முடிவு எடுப்பதாகத்தான் நாம் நம்புகிறோம். ஆனால் நம் மனமானது, நமக்கே தெரியாமல், சாதகமான காரணங்களையாகத் தேடித்தேடித் திரட்டி, எடுத்த முடிவை நியாயப்படுத்திக்கொள்ளவே பார்க்கிறது.
ஆபீஸ் அத்தியாயம் 27 கரையும் கடல்
அப்பா தவறிப்போய் கொஞ்சநாள் ஆகியிருந்த சமயம். அம்மாவுடன் ஏதோ அர்த்தமற்ற வாய்ச் சண்டையில் ஆரம்பித்தது, சாப்பாட்டுத் தட்டு பறந்ததில் போய் முடிந்திருந்தது. வீட்டில் இருக்கவே பிடிக்காமல் கிளம்பி, பெஸண்ட்நகரில் இருந்து, இரண்டு பஸ் மாறி இங்கேதான் வந்தான். இதே போலத்தான் நின்று அப்போதும் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், முன்னிரவு என்பதால் அப்போது எதிரே தெரிந்த கடற்கரையில் ஈ காக்காய் இல்லை.