05 April 2023

ஆபீஸ் அத்தியாயம் 44 மூடுபனி

பஸ் வளைந்தும் நெளிந்தும் மேலே ஏற ஏறஏண்டா இங்கே வந்தோம் என்று நொந்துகொள்ளும்படியாகஎந்த நிமிஷமும் வாந்தி எடுத்துவிடப்போகிறோம் என்பதைப்போலவயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. 

01 April 2023

கதாபாத்திரம் கட்டிய சந்தா

இன்னும் சில வாரங்கள் கழித்து வரவிருக்கிற பாத்திரம், ஆபீஸ் நாவலுக்கு ஆண்டு சந்தா கட்டியிருக்கிறது 

29 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 43 அசாதாரண அசடு

ஜானகிராமன் எல்லாம் வேலை பார்த்து ஓய்வுபெற்ற பின்பும் எழுதிக்கொண்டுதானே இருந்தார். அவரை விட எழுத்தில் சாதித்தவர் என்று எவ்வளவு பேரைச் சொல்லிவிடமுடியும் என்றும் ஒருபுறம் தோன்றிற்று. ஆபீசில் வேலைபார்த்துக்கொண்டே எழுதுகிறார் என்பதால்,ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் என்று தி.ஜாவை கிண்டலடித்த, முழுநேர லெளட்ஸ்பீக்கரான ஜெயகாந்தனைவிட கலாரீதியாக ஜானகிராமன் சாதித்தது ஒப்பிடமுடியாத உயரமல்லவா.

24 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 42 உட்காருதல்

இருந்த பணத்தில் சிக்கணமாக பிரெட் ஆம்லேட்டுடன் மதிய உணவை முடித்துக்கொள்வதற்காக பல்கலைக் கழகத்திற்கு பஸ் பிடித்தவன், பெல்ஸ் ரோடு கனையாழி ஆபீஸ் கண்ணில்பட்டதும் படக்கென இறங்கிக்கொண்டான். சும்மா உள்ளே போனவன், குனிந்து எழுதிக்கொண்டிருந்த  தி. ஜாவைப் பார்க்க நேர்ந்ததில் மெய்சிலிர்க்க,பரவசப்பட்டுப்போய் வாயில் சத்தம் வராமல், அறை வாயிலில் நின்றபடியே வணக்கம் வைத்தான். நிழலாடியதில், நிமிர்ந்து பார்த்தவர், 

'நீங்க?' என்றார். 

19 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 41 பராக்கு 2

ஒரு பெங்களூர் கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதில் இவனைப்போல எத்தனை மெட்ராஸ் கண்டக்டர்கள் வேலையை விட்டுவிட்டுத் தெருவில் அலையப்போகிறார்களோ என்கிற எண்ண ஓட்டத்தில்வணக்கம் என்று வித்தியாசமாக உச்சரித்த குரல் குறுக்கிடவே பக்கவாட்டில் பார்த்தான். 

உலகச் சிறுகதைகள் 13 ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா

கதை அல்லது புனைவு என்பது, வெறும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, கண்ணெதிரில் நடப்பதைப் போன்ற உணர்வை வாசகனுக்கு உருவாக்குவதுதான். மிகச்சிறந்த கலைஞர்கள், மிகக்குறைந்த தீற்றல்களில் தத்ரூபத்தைத் தருவித்துவிடுகிற தேர்ந்த ஓவியனைப்போல மிகக்குறைந்த சொற்களைப் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், சில பகுதிகளை வாசகனாகப் புரிந்துகொள்ளும்படிச் சொல்லாமலும் விட்டுவிடுகிறார்கள் - குறிப்பாக இலக்கிய எழுத்தாளர்கள்.

09 March 2023

அயோத்தி படமும் அயோக்கியத்தனமும்


அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…

 “உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும்ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள்.  உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான்   31.8.2011 காலை மணிவாக்கில்பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல்.  அவர்,  எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள்  சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும்,  சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம். 

08 March 2023

உலகச் சிறுகதைகள் 12 போர்ஹேஸ்

'ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும்அது எல்லா மனிதர்களும் செய்ததைப்போலத்தான். அதனால்தான் தோட்டத்தில் இழைக்கப்பட்ட கீழ்ப்படியாமை என்ற ஒற்றைச் செயல்  ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கறைபடுத்தும் என்பது நியாயமில்லை என்று ஆகிவிடாது; அதானாலேயே, மனிதகுலத்தைக் காப்பாற்ற, ஒரு ஒற்றை யூதனை சிலுவையில் அறைவது சரியில்லை என்று ஆகிவிடாது. ஒருவேளை ஷோப்பன்ஹவரின் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும்எந்த மனிதனும் எல்லா மனிதனேஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.'

ஆபீஸ் அத்தியாயம் 40 பராக்கு

எட்டு மணிக்கு எழுந்து கொறடில் நின்று பல்தேய்த்து பத்து மணிக்கு சாவகாசமாகக் கடை திறக்கிற குடிகார ஊர் என்று பெயர் வாங்கிய பாண்டிச்சேரியில்தான் அப்படி இருந்தான் என்றில்லை, எல்லோருமே ஏதேதோ காரணங்களுக்காகத் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிற மெட்ராஸுக்கு வந்த பிறகும் அப்படித்தான் இருந்தான். இல்லையென்றல் ஆழ்வார்பேட்டையில் இருந்து சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரிக்குப் போய்வருகிறவன்கையில் பஸ் பாஸ் இருந்தும் சேட்பட் பாலத்திற்கு அடியில் ஓடுகிறது என்பதைத் தவிர டிரெயினுக்குத் தேவையே இல்லாதவன், எதற்காக பீச் ஸ்டேஷனில் இருந்து தாம்பரத்திற்கு சீஸன் டிக்கெட் எடுக்கவேண்டும்.

06 March 2023

ஆபீஸ் 38 காவியும் பாவியும்

எதிரில்குதிகால் செருப்பணிந்த கொண்டையொன்று குதிக்காதகுறையாய் போய்க்கொண்டு இருந்தது, பார்க்கக் குதிரை போலவே இருந்தது. கொஞ்சம் முத்தல் குதிரை. சஃபையருக்கு பஸ் பிடிக்கப் போகிறதாயிருக்கும். பஸ்ஸுக்கே ஹீல்ஸா என்று சிரிப்பு வந்தது. வேலைக்குப் போகத்தான் என்னல்லாம் வேண்டியிருக்கிறது.

ஆபீஸ் அத்தியாயம் 37 எழுத்தும் வாழ்வும்

எப்ப எழுதுவீங்க. 

இது என்ன பேட்டி போல கேட்கிறாரே என்று கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தயங்கியபடி

எப்ப வேணும்னா எழுதுவேன். 

எப்ப வேணும்னான்னா... எப்படியும் ஆபீஸ் அவர்ஸ்ல எழுதமுடியாது. அப்ப வீட்லதான எழுதியாகணும்.

இல்ல. பெரும்பாலும் வெளியதான் எழுதறது. தோணும்போது, பார்க்கு லைப்ரெரி மரத்தடினு வசதிப்படற எடத்துல உக்காந்து எழுதறது. இப்பிப்ப டிரைவ் இன் உட்லண்ட்ஸ்ல எழுத ஆரம்பிச்சிருக்கேன். 

ஆபீஸ் அத்தியாயம் 36 அறைவாசிகள்

பசங்கள் தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்கள். 

நீங்க சைவம்தானே என்றான் பாலாஜி. 

ஆமா. ஆனா வெளில நான்-வெஜ்ஜும் சாப்பிடுவேன் என்றான். 

அப்ப நீங்க பிராமின் இல்லையா. 

கோணங்கியின் கோணல் முகம்

Karthick Ramachandran

February 28 at 2:22 PM  · 

நார்மலைஸ் ஆக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்: கலையின் பெயரில் கலைஞனை கொல்லுதல்

………

05 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 35 இடம்

சாப்பாடு எப்படி. 

நல்லா இருந்துது. எனக்குதான் அவ்ளோ சாதமெல்லாம் சாப்பிட முடியாது. 

என்னங்க இது. சோறு திங்க சொணங்கற ஆளை மொதல் தடவையா பாக்கறேன் என்று சொல்லிச் சிரித்தார். 

இல்ல பொதுவாவே சாதத்தை விட சப்பாத்தி தோசை பரோட்டா மாதிரி டிபன்தான் எனக்குப் பிடிக்கும். 

வீட்ல. 

ஆபீஸ் அத்தியயம் 34 வம்பு

வெயில் உச்சிமண்டையைப் பிளந்துகொண்டு இருந்தது. அங்கேயே ஓரமாய் இருந்த கொஞ்சூண்டு நிழலில் ஒதுங்கி நின்று தம் அடித்தான். இன்னும் கொஞ்ச நேரம் ஆனால் லஞ்ச் டைம் வந்துவிடும். எப்படியும் சாப்பிடப் போயாகவேண்டும். அதற்கெதற்கு ஆபீசுக்குப் போய்க்கொண்டுஅப்படியே ஓட்டலுக்குப் போனால் என்ன என்று தோன்றிற்று. அவர் சொன்ன ஓட்டலை நோக்கி நடக்கத்தொடங்கினான்.